அதென்ன இணை ஒருங்கிணைப்பாளர்?.. அப்படி ஒரு பதவியே பைலாவில் இல்லையே.. எடப்பாடிக்கு செக் வைக்கும் சசி
சென்னை: அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற ஒரு பதவியே இல்லை என சசிகலா தெரிவித்துள்ளார்.
சசிகலா தொண்டர்களுடன் பேசி வரும் ஆடியோ அண்மைக்காலமாக வெளியாகி அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதல்வராக்கிய தன்னையே எடுத்தெறிந்ததால் எடப்பாடி பழனிச்சாமி மீது சசிகலா கடுங்கோபத்தில் இருக்கிறார்.
அதன் விளைவுதான் எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா தொடர்ந்து விமர்சித்து வருகிறார். எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்கியது ஏன் என்பது குறித்து அவர் ஆடியோவில் தெரிவித்திருந்தார்.

அதிமுக
அதாவது கொங்கு மண்டல மக்கள் அதிமுகவுக்குத்தான் எப்போதும் ஓட்டு போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்கள். அந்த அடிப்படையில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவரை முதல்வராக்கினால் தங்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைத்துவிட்டது என அந்த மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

அதிமுக
அதனால் அடுத்த தேர்தலிலும் தொடர்ந்து மக்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பர் என்ற அடிப்படையில்தான் எடப்பாடியை முதல்வராக்கினேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் பூண்டியை சேர்ந்த பக்கிரிசாமியிடம் பேசிய ஆடியோ ரிலீஸாகியுள்ளது.

சசிகலா எதிர்காலம்
அதில் சசிகலா கூறுகையில் எதிர்காலத்தில் கட்சிக்கு சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தொண்டர்கள் தான் தலைமையை முடிவு செய்ய வேண்டும் என விதியை எம்ஜிஆர் கொண்டு வந்தார். எம்ஜிஆர் கொண்டு வந்த விதியை யாராலும் மாற்ற முடியாது.

இணை ஒருங்கிணைப்பாளர்
அது போல் அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற ஒரு பொறுப்பே இல்லை என சசிகலா கூறியுள்ளார். இதன் மூலம் எடப்பாடி பழனிச்சாமியையே தொடர்ந்து சசிகலா விமர்சித்து வருவது கண்கூடாக தெரிகிறது. கொங்கு மண்டலத்தினருக்கே எடப்பாடி முக்கியத்துவம் கொடுப்பதாக தென் மாவட்டத்தினர் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications