சூப்பர்..! 5 ஆண்டுகளுக்கு பின் ஜெயலலிதா இருந்த.. அதே அப்பல்லோவில் இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய சசிகலா
சென்னை: கடந்த 2016ஆம் ஆண்டு ஜெயலலிதா எந்த அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாரோ, அதே மருத்துவமனைக்கு அதிமுக கொடி கட்டிய காரில் சென்று அரசியலில் தனது இரண்டாவது இன்னிங்ஸை சசிகலா தொடங்கியுள்ளார்.
அதிமுக அவைத்தலைவர் ஒருவரான மதுசூதனன் மூச்சுத்திணறல் காரணமாகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 80 வயதான மதுசூதனன் எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவில் செயல்பட்டு வருபவர்.
கடந்த 1991ஆம் ஆண்டு ஜெயலலிதா வெற்றி வெற்று முதல்முறையாகத் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற போது, கைத்தறி துறை அமைச்சராக இருந்தவர். இந்நிலையில் மதுசூதனனின் உடல்நிலை மோசமடைந்ததாக நேற்று தகவல் வெளியானது.

Array
இதையடுத்து மதுசூதனனிடம் நேரில் நலம் விசாரிக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்தார். சரியாக அதேநேரத்தில் சசிகலாவும் அங்கு வர திடீரென மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும், எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னரே சசிகலா உள்ளே சென்றார். குறிப்பாக அதிமுக கொடி கட்டிய காரில் சென்று மதுசூதனனிடம் நலம் விசாரித்தார். சசிகலா அதிமுகவிலேயே இல்லை என அதிமுக தலைவர்கள் தொடர்ந்து குறி வரும் நிலையில், அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக கொடியைப் பயன்படுத்தியுள்ளார்.

ஜெயலலிதா உடன் நட்பு
அதிலும் கடந்த 2016இல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எந்த அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாரோ, அதே மருத்துனையில் இருந்து தனது 2ஆவது இன்னிங்கஸை தொடங்கியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொடக்கக் காலத்தில் இருந்தே அவருடன் இணைந்து பயணித்து வந்தவர் சசிகலா. எம்ஜிஆரின் மரணத்திற்குப் பிறகு அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்திருந்தது. அப்போது இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டது. அந்தச் சமயத்திலேயே ஜெயலலிதா உடன் நின்றவர் சசிகலா. 1991இல் ஜெயலலிதா முதல்வரானதில் இருந்து, சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஜெயலலிதாவின் நிழலாகவே சசிகலா இருந்து வந்தார்.

2016இல் ஜெயலலிதா
கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் உடல்நிலை திடீரென பாதிக்கப்பட்டது. அப்போது அவர் சிகிச்சைக்காகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலில் வெறும் காய்ச்சல் தான் என்றும் சில நாட்களில் மருத்துவமனையில் இருந்து திரும்பிவிடுவார் என்றும் கூறப்பட்டது. இருப்பினும், சில நாட்கள், சில வாரங்கள் ஆனது. ஆனால், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை.

சசிகலா
சுமார் 75 நாட்கள் மருத்துவமனையிலேயே இருந்த ஜெயலலிதா, கடந்த 2016 டிசம்பர் 5ஆம் தேதி உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டார். அந்த 75 நாட்களும் ஜெயலலிதாவை பார்க்க இன்றைய முதல்வர் ஸ்டாலின் தொடங்கி பல்வேறு தலைவர்கள் அப்பல்லோ சென்றனர். ஆனால், யாரையும் ஜெயலலிதா சந்திக்கவில்லை. அப்போதும்கூட ஜெயலலிதா உடனேயே இருந்தவர் சசிகலா தான்.

பரபரத்த தமிழக அரசியல்
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு, தமிழ்நாட்டில் நடந்த அரசியல் மாற்றம் அனைவருக்கும் தெரியும். ஒபிஎஸ் தர்ம யுத்தம் நடத்த, சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை செல்ல, அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கூவத்தூருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பிறகு எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்றார். சசிகலா சிறையில் இருந்த சமயத்தில் ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தலைமையில் இயங்கிய இரண்டு அணிகளும் மீண்டும் ஒன்றாக இணைந்தது.
Recommended Video

எடப்பாடி பழனிசாமி
ஓ பன்னீர்செல்வத்திற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியும் துணை முதல்வர் பதவியும் கொடுக்கப்பட்டது. அதிமுகவில் மெல்ல எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது. சட்டசபைத் தேர்தலையும் பாஜக, பாமக ஆகிய கட்சிகளுடன் இணைந்து சந்திக்கத் தயாரானது. இந்தச் சூழலில் தான், தனது தண்டனை காலத்தை முடித்துக் கொண்டு சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து வெளியேறினார்.

சட்டசபை தேர்தல்
தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, அதாவது ஜனவரி மாதம் அவர் ரிலீஸ் செய்யப்பட்டார். அப்போது அவருக்கு மிகப் பெரியளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போதே சசிகலா அதிமுகவில் இல்லை என்றும் இதனால் அவரது காரில் அதிமுக கொடி கட்டக் கூடாது என்றும் போலீசார் தரப்பில் எல்லாம் புகார் எல்லாம் அளிக்கப்பட்டது. சட்டசபைத் தேர்தலுக்கு முன்பே அதிமுகவை சசிகலா கைப்பற்றுவார், அல்லது சசிகலா ஃபேக்டர் தேர்தலில் முக்கிய பங்கு வகிக்கும் எனப் பல ஆருடங்கள் கிளம்பியது.

ஒதுங்கினார் சசிகலா
இருப்பினும், விடுதலை ஆனதில் இருந்தே சைலெண்ட் மோடிலேயே சசிகலா இருந்தார். தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிக்கை வெளியிட்டு, அத்தனை பரபரப்புகளையும் ஆஃப் செய்துவிட்டார். அப்போதும்கூட தமிழ்நாட்டிலுள்ள பல கோயில்களுக்கு ஆன்மீக சுற்றுலா சென்று, தான் இன்னும் ஆக்டிவாகவே இருக்கிறேன் என்பதைக் காட்டி வந்தார்.

ஆடியோ அரசியல்
சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறாததால், அடுத்தகட்டமாகக் கட்சியைக் கைப்பற்றும் முயற்சிகளைத் தொடங்கிவிட்டார். அதிமுக தொண்டர்கள் தொடங்கி முன்னாள் எம்பிகள், அமைச்சர்கள் வரை, சசிகலாவுடன் உரையாடும் ஆடியோ தொடர்ந்து வெளியாகி வருகிறது. மறுபுறம் சசிகலாவுடன் பேசும் நிர்வாகிகளைக் கட்சியில் இருந்து ஈபிஎஸ்-ஒபிஎஸ் தலைமை நீக்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான ஆடியோவில் கூட ஊரடங்கு முடிந்ததும் அனைவரையும் சந்திப்பேன் என்றும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைவரையும் அரவணைத்துச் செல்லவே நான் விரும்புகிறேன் என்று கூறியிருந்தார்.

2ஆம் இன்னிங்ஸ்
இந்தச் சூழலில் தான் மதுசூதனனிடம் நேரில் நலம் விசாரிக்க, ஜெயலலிதா அட்மிட் ஆகியிருந்த அதே அப்பல்லோ மருத்துவமனைக்கு நேரில் சென்றிருக்கிறார் சசிகலா. இதுநாள் வரை ஆடியோ அரசியல் மட்டுமே செய்து வந்த சசிகலா, முதல்முறையாக அதிமுக கொடி கட்டிய காரில் அரசியலில் தனது 2ஆம் இன்னிங்ஸை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து தொடங்கியுள்ளார். அடுத்து வரும் வாரங்களில் அதிமுகவில் பல அதிரடி திருப்பங்கள் நிச்சயம் நடைபெறும் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை..!
-
2026 தேர்தலே டல் அடிக்குது.. என்னதான் ஆச்சு திமுக, அதிமுகவுக்கு! 2021ல் இந்நேரம் எல்லாமே பினிஷ்! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
Election Exclusive: சபாஷ் சரியான போட்டி! 2026ல் 5 முனைப் போட்டி! ’தென்னந்தோப்பில்’ சின்னம்மா.. அய்யா கையில் ’தேங்காய்’ -
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் பரபர சோதனை! -
கடைசி நேரத்தில் ‘ட்விஸ்ட்’.. கூட்டணி கட்சியான NR காங்கிரஸில் இணைந்த புதுச்சேரி அதிமுக மாநில நிர்வாகி -
அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிசாமி.. புதுச்சேரியில் 2 தொகுதிகளில் யார் யார்? -
தனிச்சின்னம் கிடையாது.. சிறிய கட்சிகளை விழுங்கும் திமுக - அதிமுக.. 2021 தேர்தலில் என்ன நடந்தது? -
"100 தொகுதிகளில் போட்டியிட வேட்பாளர்கள் தயாராக உள்ளனர்".. பரபரப்பைக் கிளப்பிய கிருஷ்ணசாமி! -
4 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு? முதல்வரான ஜெயலலிதா.. 2001இல் கருணாநிதி பேசிய கடைசி தேர்தல் வசனம்! -
அரசு ஊழியர்கள் கதறல்.. கருணாநிதி கைது.. ’பொடா’வில் வைகோ - 2001 ஆட்சியில் ஆட்டிப் படைத்த ஜெயலலிதா! -
பாஜக பஞ்சாயத்து ஓவர்..டேக் ஆஃப் ஆகுமா அதிமுக கூட்டணி! ப்ளானை மாற்றிய ’டெல்லி’ தலை! திடீர் ட்விஸ்ட்! -
புதுச்சேரியில் ஆட்சி அதிகாரத்தில் அதிமுக பங்கு கேட்கும்.. மாநில செயலாளர் திட்டவட்டம்!












Click it and Unblock the Notifications