வண்டியை விடு.. தஞ்சாவூருக்கு விரைந்த சசிகலா.. அடுத்து நேரா "அங்கதான்" போக போறாங்களாம்! என்ன பிளான்?
சென்னை: இரண்டாம் கட்ட சுற்றுப்பயணமாக தஞ்சாவூர் புறப்பட்டார் சசிகலா.சாலை மார்க்கமாக செல்லும் அவர் வழியில் பல்வேறு தலைவர்களை சந்திக்கிறார்.
அதிமுகவை எப்படியாவது தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என்று சசிகலா தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார். ஆனால் சசிகலாவின் முயற்சிகள் அனைத்திற்கும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
சசிகலாவிற்கு ஆதரவாக "ம்" என்று ஒற்றை வார்த்தை சொன்னால் போதும்.. உடனே அவர்களை கட்சியில் இருந்து நீக்கும் நிலைதான் அதிமுகவில் நிலவி வருகிறது. இதனால் சசிகலா அதிரடியாக எந்த முடிவும் எடுக்க முடியாமல் கொஞ்சம் திணறி வருகிறார்.

என்ன செய்தார்
கடந்த 4ம் தேதிதான் சசிகலா தூத்துக்குடி, திருச்செந்தூர், நெல்லை ஆகிய பகுதிகளுக்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இது ஆன்மீக சுற்றுப்பயணம் என்றாலும் அரசியல் ரீதியாக தனது ஆதரவு திரட்டவே அவர் இந்த பயணத்தை மேற்கொண்டார். அங்கு தென்மண்டல அதிமுக நிர்வாகிகளுடன் இவர் சீக்ரெட் மீட்டிங் ஒன்றை நடத்தியதாகவும் கூறப்பட்டது. அதோடு ஓ பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ ராஜாவையும் சசிகலா அங்கே சந்தித்தார்.

சந்திப்பு
இதையடுத்து ஓ ராஜா கடைசியில் அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மூலம் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்கு சசிகலா அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்று சிறப்பு யாகம் ஒன்றை செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில்தான் சசிகலா இரண்டாம் கட்டமாக பல்வேறு தலைவர்களை சந்திக்கும் வகையில் இன்று மீண்டும் அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். இந்த முறை டெல்டா மற்றும் கொங்கு மாவட்டங்களை குறி வைத்து அவர் பயணம் மேற்கொள்கிறார்.

தஞ்சாவூர்
அதன்படி இன்று சாலை மார்க்கமாக சென்னையில் இருந்து சசிகலா தஞ்சாவூர் செல்ல இருக்கிறார். தஞ்சாவூரில் டெல்டா மாவட்ட தலைவர்களை சசிகலா சந்திக்க உள்ளார். அதன்பின் 20 ஆம் தேதி தஞ்சாவூரில் உள்ள விளார் கிராமத்திற்கு சென்று நடராஜனின் நினைவு இடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார். பின்னர் அங்கிருந்து அப்படியே சேலத்திற்கு நேராக செல்லும் திட்டத்தில் சசிகலா இருக்கிறார். நேராக எடப்பாடி பழனிச்சாமியின் கோட்டைக்கு சென்று தனக்கு ஆதரவு திரட்ட சசிகலா முடிவு செய்துள்ளாராம்.

ஆனால் சிக்கல்
ஆனால தஞ்சையில் கிடைக்கும் ஆதரவு, நிர்வாகிகள் கொடுக்கும் அறிவுரையை வைத்து சசிகலா சேலம் பயணத்தில் மாற்றங்களை கொண்டு வரும் வாய்ப்பும் உள்ளதாக கூறப்படுகிறது. இன்று தஞ்சை செல்லும் சசிகலா.. செல்லும் வழி முழுக்க பல்வேறு கோவில்களில் வழிபாடு நடத்த உள்ளார். மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில், மயிலம் முருகப்பெருமான் கோயில், மதுராந்தகம் ஏரி காத்த ராமர், ஆதிபராசக்தி கோயில், திருவக்கரை வக்ரகாளி அம்மன் கோயில் ஆகிய வழிபாட்டு தளங்களில் வழிபாடு நடத்த இருக்கிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications