சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சசிகலா சந்தித்த "தலை"கள்.. இனிமே என்கூட வெளியே வந்தால்.. புது கண்டிஷன்.. ஷாக் அமமுக.. குஷியில் திமுக

அமமுக கலைக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: சசிகலாவின் அரசியல் வேகமெடுத்து வரும் நிலையில், அதிமுகவும், அமமுகவும் என்ன செய்ய போகின்றன என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது... இதனிடையே திமுக படுகுஷியில் உள்ளது.. அதற்கு என்ன காரணம்?

யார் தன்னை மோசமாக விமர்சனம் செய்தாலும் சரி, இழிவாக பேசி பேட்டி தந்தாலும் சரி, சசிகலா எதற்குமே அசரவில்லை..

அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ள சசிகலா, இந்த நிமிடம் வரை தன்னை அதிமுகவின் பொதுச்செயலாளர் என்றே குறிப்பிட்டு வருகிறார்.. அதன் பெயரிலேயே அறிக்கையையும் விடுத்து வருகிறார்.

சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் சசிகலா சென்னை: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்களுக்கு நிவாரணம் வழங்கினார் சசிகலா

நிர்வாகிகள்

நிர்வாகிகள்

அந்த வகையில் தென்மண்டல நிர்வாகிகளை சந்தித்து பேசியதில், அவர்களை ஓரளவு சரிக்கட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது.. இதற்கடுத்தபடியாக, அதிமுக வடமாவட்ட நிர்வாகிகள் மீது கவனத்தை திருப்பி உள்ளார்.. அவர்களை தன்னுடைய வீட்டுக்கும் அழைத்து பேசியுள்ளார்.. இதன்மூலம் வடமாவட்டத்திலும் தனக்கு ஆதரவு உள்ளது என்பதை அதிமுகவின் தலைமைக்கு உணர்த்தி உள்ளார் சசிகலா. இதனால் அடுத்து என்ன செய்வது என்ற குழப்ப மனநிலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஆளாகி உள்ளனர்.

கண்டிஷன்

கண்டிஷன்

இந்த சூழலில்தான் மற்றொரு தகவல் வெடித்து வருகிறது.. அமமுகவை கலைக்கும்படி தினகரனுக்கு சசிகலா கண்டிஷன் போட்டுள்ளாராம்.. இதுதான் தினகரனுக்கு பெருத்த குடைச்சலை தந்து வருகிறது.. தினகரனை பொறுத்தவரை, அதிமுகவில் தனக்கு மதிப்பு இல்லை என்பதால்தான் அமமுக என்ற கட்சியையே தனியாக ஆரம்பித்தார்.. ஆரம்பத்தில் தனக்கான செல்வாக்கை நிரூபித்த தினகரன், அடுத்தடுத்த தேர்தல்களில் சறுக்கல்களையே கண்டார்..

 நிர்வாகிகள்

நிர்வாகிகள்

மேலும், அமமுகவின் முக்கிய தூணாக இருந்த செந்தில்பாலாஜி, தங்க தமிழ்செல்வன் போன்றோர் எல்லாம் திமுக பக்கம் சென்றுவிட, பக்கபலமாக இருந்த மூத்த தலைவரான வெற்றிவேலும் இறந்துவிட கட்சி பலவீனமாக ஆரம்பித்தது. செல்வாக்கை இழந்த அமமுக மீது ஆரம்பத்தில் இருந்தே சசிகலாவுக்கு பிடித்தம் இல்லை என்றே தெரிகிறது.. அதனால்தான், அமமுக என்ற வார்த்தையே இதுவரை சசிகலா வாயில் இருந்து உச்சரிக்கப்படவில்லை..

ஆதரவாளர்கள்

ஆதரவாளர்கள்

மாறாக, தன்னை அதிமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதிலேயே உறுதியாக இருக்கிறார்.. அதுமட்டுமல்ல தினகரன் தனியாக கட்சி நடத்துவது சசிகலாவுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லையாம்.. அதனால்தான், அந்த கட்சியை கலைத்து விட்டு, அதிமுக கொடியை பயன்படுத்துங்கள் என்று தினகரனுக்கும், அவரது ஆதரவாளர்களுக்கும் சசிகலா வலியுறுத்துகிறாராம்.

அதிருப்தி

அதிருப்தி

இதுதான் தினகரனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறதாம்.. அமமுக என்ற கட்சி பிரம்மாண்டமாக இருக்கும்போது, எதற்காக சசிகலா, அதிமுக பின்னாடியே செல்ல வேண்டும்? அக்கட்சியில் இணைய முயற்சிப்பதை விட்டுவிட்டு, பேசாமல் அமமுகவின் அவைத் தலைவராக இருந்து, வழிநடத்தினால் சிறப்பாக இருக்குமே என்று தினகரன் நினைக்கிறாராம்.. இதுதான் தினகரன் - சசிகலா இருவருக்கும் இடையில் புகைச்சலை கிளப்பி விட்டு வருவதாக சொல்கிறார்கள்.

குழப்பம்

குழப்பம்

இப்படிப்பட்ட சூழலில்தான், தினகரனுக்கு ஷாக் தரும்படி இன்னொரு சம்பவம் நடந்தது.. சசிகலா வீட்டிற்கு, அமமுக மாநில நிர்வாகிகள், மண்டல பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் சிலர் சென்றிருக்கிறார்கள்.. தங்கள் ஆதரவை சசிகலாவிடமும் அவர்கள் தெரிவித்தார்களாம்.. உங்களுடன் பயணிக்க நாங்கள் தயார்தான், ஆனால், தினகரனிடம் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

 அதிமுக கொடி

அதிமுக கொடி

அதற்கு சசிகலா, "தைரியமா என்னுடன் வாங்க.. ஆனால், நான் வெளியில் செல்லும்போது, ஏன் அப்படி வர்றீங்க? அமமுக கொடியுடன் கொடியுடன் வராதீங்க.. அதிமுக கொடியுடன் வாங்க.. தினகரனும் கட்சியை கலைத்தால்தான் சரியா வரும்.. எல்லாரும் சேர்ந்து பணியாற்றினால்தான், நாம் நினைத்ததை சாதிக்க முடியும்" என்று நம்பிக்கை தந்தாராம்.. இந்த விஷயம் தெரிந்து தினகரனுக்கு, சம்பந்தப்பட்ட அந்த நிர்வாகிகள் மீது அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது..

 தினகரன் குழப்பம்

தினகரன் குழப்பம்

அதாவது, இத்தனை நாள் அதிமுக நிர்வாகிகள்தான் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர் என்றால், இப்போது அமமுக தரப்பில் இருந்தும் நிர்வாகிகள் சசிகலாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டி உள்ளனர்.. தினகரனை பொறுத்தவரை, மீண்டும் அதிமுகவில் இணைவதை விரும்பவில்லை என்றே தெரிகிறது.. அங்கே போனால் மீண்டும் தனக்கான மரியாதை கிடைக்குமா? ஓபிஎஸ், எடப்பாடி, சசிகலா என்று பலர் முன்னணியில் இருக்கும்போது, தனக்கான பொறுப்பு, பதவி கிடைக்குமா? என்ற சந்தேகம் உள்ளதாக தெரிகிறது. அதனாலேயே தன்னுடைய கட்சியை கலைக்க தினகரனுக்கு விருப்பமில்லையாம்..

 ஸ்டாலின்

ஸ்டாலின்

இதற்கு நடுவில் இன்னொரு ஷாக் எடப்பாடி மற்றும் சசிகலாவுக்கே கிடைத்துள்ளது.. அதன்படி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் நேற்று இணைந்துள்ளனர்.. சென்னை துறைமுகம் பகுதி செயலர் வி.பி.எஸ்.மதன், பகுதி துணை செயலர் கல்லறை எம்.மதன், துறைமுகம் வடக்கு பகுதி இணைச் செயலர் ஆர்.அனிதா, பகுதி பேரவை துணைச் செயலர் ஆர்.மோசஸ் ஆகியோர் அறிவாலயம் சென்று, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டனர்.

Recommended Video

    மழை பாதிப்பு ஆய்வு.. திடீரென வீட்டுக்குள் நுழைந்த சசிகலா... திகைத்துப் போன மக்கள்!
    சமாதானம்

    சமாதானம்

    கட்சியை ஒருங்கிணைக்கும் வேலையில் தான் ஈடுபட்டு வரும்போது, அதிருப்தியாளர்கள் திமுக பக்கம் செல்வது சசிகலாவுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.. அதேபோல, எடப்பாடிக்கும் இது கலக்கத்தை தந்துள்ளது.. எனவே, அதிருப்தியாளர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் இரு தரப்புமே இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. இனி என்ன நடக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!

    English summary
    Sasikalas next strategy in ADMK, and what will AMMK TTV Dinakaran do the next
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X