"டோட்டல் சேஞ்ச்".. கம்முன்னு சசிகலா.. பேச்சை குறைச்சு.. செயல்ல காட்டுவோம்.. புது அவதாரம் பூணுகிறார்!
டாக்டர்களிடம் சசிகலா பேசிய பேச்சு வெளியாகி உள்ளது
சென்னை: வழக்கமான சசிகலாவாக இப்போது அவர் இல்லை.. முன்பை விட வைராக்கியமாக மாறியிருக்கிறார்.. அவரை வேறு கோணத்தில் தமிழ்நாடு பார்க்கப் போகிறது என்று அமமுகவினர் கூறுகிறார்கள்.
மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது டாக்டர்களும் கூட சசிகலாவின் மனோதிடத்தைப் பார்த்து மிரண்டு போய் விட்டனராம்.
வழக்கமான நோயாளிகள் போல நீங்கள் இல்லை, ரொம்ப திடமாக இருக்கிறீர்கள்.. அதனால்தான் கொரோனா சீக்கிரமே குணமாகி விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வைராக்கியம்
சசிகலாவும் இப்போது முன்பை விட உறுதியாக மாறியிருக்கிறாராம். வைராக்கியம் அதிகரித்துள்ளதாம். இதுவரை அவர் யாரையும் தொடர்பு கொண்டு பேசவில்லையாம். அமைதியாக இருக்கிறாராம். தனது உறவுகளிடமும் கூட, ஆடக் கூடாது. அமைதியாக இருக்கணும் என்று கூறியுள்ளாராம்.

ஆட்டம்
இதற்கு அர்த்தம், ஆட்டம் போட்டு காரியத்தைக் கெடுக்கக் கூடாது. இனி நேரடியாக நான் மக்களிடமே போகப் போறேன். பேச்சைக் குறைத்து விட்டு செயலில் நாம் யார் என்பதைக் காட்ட வேண்டும். எனக்கு இது மறு பிறவி போல. இனி மக்களுடன்தான் இருப்பேன் என்று உற்சாகமாக கூறியுள்ளாராம் சசிகலா. தனது உடல் நிலையை சற்று ஸ்திரப்படுத்தி விட்டு மக்களிடம் வந்து சேர அவர் தயாராகி வருகிறாராம்.

சந்திப்பு
அதிமுகவை கைப்பற்றுவது என்பதில் அமமுக உறுதியாக உள்ளது என்ற போதிலும் கூட மக்களை நேரடியாக சந்திக்கும் சசிகலாவின் திட்டம்தான் அமமுகவை உற்சாகப்படுத்தியுள்ளது. மக்களிடம் நாம் போகும்போது தானாகவே அதிமுக மொத்தமாக நம் பக்கம் வந்து விடும் என்பதே அவர்களின் உற்சாகம். அதிமுகவினரும் கூட பெரும் ஆர்வத்துடன் சசிகலாவுக்காக காத்திருப்பதாக சொல்கிறார்கள்.

ஜெயில்
பெங்களூரில் அத்தனை மாஸ் காட்டிய அமமுகவின் அதிரடியைப் பார்த்து கர்நாடகவே ஆடிப் போய் விட்டதாம். இத்தனை காலம் ஜெயிலில் இருந்த ஒருவருக்கு இப்படி ஒரு வரவேற்பா என்று அங்கு ஆச்சரியப்டுகிறார்கள். இங்கேயே இத்தனை வரவேற்பு என்றால் சசிகலாவுக்கு தமிழ்நாட்டில் எப்படி வரவேற்பு அளிக்கும் அமமுக என்பதே பலரின் ஆச்சரியமாக உள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications