இப்பவே வாங்கலனா ₹5000 நஷ்டம்! நடுத்தர குடும்பங்களுக்கு ஷாக்.. ஏசி, பிரிட்ஜ் விலையில் திடீர் மாற்றம்
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கோடைக்காலம் தீவிரமாகி வரும் நிலையில், வீட்டு உபயோக மின்சாதனங்கள் மற்றும் மின்னணு பொருட்களின் விலைகள் மீண்டும் உயரக்கூடும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.. கோடையைச் சமாளிக்க ஏசி அல்லது பிரிட்ஜ் வாங்கத் திட்டமிட்டுள்ள நுகர்வோர் இந்த மாத இறுதிக்குள் ஒரு முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்த தகவலை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
இந்த மாத இறுதி முதல் ஏப்ரல் முதல் காலகட்டத்தில் வீட்டு உபயோக மின்சாதனப் பொருட்கள் மற்றும் மின்னணு சாதனங்களின் விலை குறிப்பிடத்தக்க அளவில் உயரக்கூடும் என்பதுதான் தற்போது கிடைத்துள்ள செய்தி..

மின்னணு பொருட்கள் விலை
ஏசி, செல்போன், பிரிட்ஜ் மற்றும் டிவி உள்ளிட்ட அத்தியாவசிய மின்னணு சாதனங்களின் விலைகள் இந்த மாத இறுதியில் இருந்து அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. இந்த விலை உயர்வுக்குப் பின்னால் இருக்கும் காரணங்களைப் பார்த்தால், அது சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பொருளாதார மாற்றங்களுடன் நேரடித் தொடர்பு கொண்டிருப்பது தெரிய வருகிறது.
குறிப்பாக, சரக்கு போக்குவரத்து கட்டண உயர்வு உற்பத்தி நிறுவனங்களுக்கு கூடுதல் செலவாக மாறியுள்ளது.. இதனுடன் சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதும், கச்சா எண்ணெய் தொடர்புடைய மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பதும் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது..
உற்பத்தி செலவு - சந்தை தேவை
தயாரிப்பு செலவு உயர்ந்த நிலையில், நிறுவனங்கள் அந்தச் செலவை நுகர்வோரிடம் மாற்றத் திட்டமிட்டு வருகின்றன.. ஏற்கனவே கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், ஏசி, Refrigerators அதாவது குளிர்சாதனப் பெட்டிகளின் தேவை மார்க்கெட்டில் அதிகரித்துள்ளதாம்.
இத்தகைய சூழலில் விலை உயர்வு நடைமுறைக்கு வந்தால், அது நடுத்தர மக்களுக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே தெரிகிறது.. இது வெறும் ஏசி, பிரிட்ஜ் போன்ற பொருட்களுடன் மட்டுப்படாமல், அன்றாடத் தேவையாகிவிட்ட செல்போன்கள் மற்றும் டிவி விலையிலும் பிரதிபலிக்கும் என்று கூறப்படுகிறது..
4வது முறையாக விலை உயர்வு
இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், ஏற்கனவே இந்த ஆண்டில் மின்னணு சாதனங்களின் விலைகள் 3 முறை உயர்ந்துள்ள நிலையில், தற்போது 4-வது முறையாக மீண்டும் விலை அதிகரிக்க இருக்கிறது.. முன்னணி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் விலையை 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதாரணமாக, நீங்கள் வாங்கும் ஒரு பொருளின் விலை ரூ.50,000 என்றால், இந்த உயர்வினால் கூடுதலாக ரூ.1,500 முதல் ரூ.2,500 வரை செலுத்த வேண்டியிருக்கும்..
மார்ச் மாத இறுதிக்குள் பழைய ஸ்டாக்குகள் தீர்ந்தவுடன், ஏப்ரல் முதல் புதிய விலைப் பட்டியல் அனைத்து கடைகளிலும் அமலுக்கு வரும் என்று விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் புதிய பொருட்களை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் இந்த மாத இறுதிக்குள் தங்களுக்குத் தேவையான சாதனங்களை வாங்குவது லாபகரமான முடிவாக இருக்கும்.
மாத இறுதிக்குள் டைம்
தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த விலை உயர்வு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் செலவுகளைச் சமாளித்து வரும் நிலையில், வீட்டு உபயோகப் பொருட்களின் இந்த விலையேற்றம் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. ஏப்ரல் முதல் மின்னணு சாதனங்களின் விலை மேலும் அதிகமாக வாய்ப்புள்ளதால், இந்த மாத இறுதிக்குள் உங்கள் வாங்குதலை திட்டமிட்டு முடிப்பது பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்...!!
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications