அதி கனமழை அச்சுறுத்தல்.. பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.. முழு விவரம்!
சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதுவும் சென்னையில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான கனமழை கொட்டி தீர்த்துள்ளது.
Recommended Video
மேற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதிதான் சென்னை உள்பட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்க்க காரணமாக என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இன்று கரையை கடக்கிறது
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றுள்ளது. சென்னைக்கு 430 கி.மீ கிழக்கு தென் கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. புதுச்சேரியிலிருந்து 420 கி.மீ கிழக்கு தென் கிழக்கு திசையில், காற்றழுத்த மண்டலம் உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு மற்றும் வட மேற்கு திசையை நோக்கி நகர்ந்து காரைக்கால் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா இடையே இன்று மாலை கரையை கடக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய அதிகனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 4 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஒரு சில இடங்களில் அதிகனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், சேலம்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் 2 நாட்கள் விடுமுறை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை
இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications