சீமானுக்கு தலை இருக்காது! இன்ஸ்டாகிராம் பதிவால் கமிஷனர் அலுவலகத்திற்கு ஓடிய இடும்பாவனம் கார்த்திக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்றைய தினம் புகார் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து இடும்பாவனம் கார்த்தி அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த 28ம் தேதி, தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர், அவரது இன்ஸ்டாகிராமில் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

seeman naam tamilar

அதில் நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தலை விரைவில் துண்டாக்கப்படும். அவரது பதவிக்கு போட்டி ஏற்படும். அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் செய்தி தெரிவிப்பார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தொடங்கிய நாள் முதல் இன்று வரை தெலுங்கு மக்கள் குறித்தோ, மற்ற எந்த தேசிய இன மக்கள் குறித்தோ இழிவாகவோ, அவதுாறாகவோ பேசியது கிடையாது.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் பதிவிட்ட சந்தோஷ் என்பவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+