சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னாது 2009இல் மோடி பிரதமராகவா? குஜராத் முதல்வரா இருந்தாரே.. ஈழப்போருக்கு குரல் கொடுத்தாரா? சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: ஈழப்போர் நடந்த போது குஜராத் முதல்வராக இருந்த மோடி அந்த போரை எதிர்த்து குரல் கொடுக்கவில்லையே ஏன் என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Recommended Video

    ஈழப்போர் நடந்த போது குஜராத் முதல்வராக இருந்த மோடி அந்த போரை எதிர்த்து குரல் கொடுக்கவில்லையே என சீமான் கேள்வி

    புலவர் கு.கலியபெருமாள் 15ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மலர் வணக்கம் நிகழ்வு வளசரவாக்கம் அடுத்த சின்ன போரூரில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு கு.கலியபெருமாளின் உருவப்படத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினார்.

    பூணூலுக்கு மட்டும் அனுமதியா? ஹிஜாப் தடையில்லை என அறிவிங்க - தமிழ்நாடு அரசுக்கு சீமான் வலியுறுத்தல் பூணூலுக்கு மட்டும் அனுமதியா? ஹிஜாப் தடையில்லை என அறிவிங்க - தமிழ்நாடு அரசுக்கு சீமான் வலியுறுத்தல்

     பொருளாதார கொள்கை

    பொருளாதார கொள்கை

    பின்னர் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது :
    பொருளாதார கொள்கை அப்படி உள்ளது. இலங்கை நிலைமை இந்தியாவிற்கு வரும், மாடல் என்பது துணி கடையில் தலையில்லாத பொம்மை மீது உள்ள துணி போல, மாடல் பார்த்து விட்டு துணியை எடுப்பது போல். புதிய மாடல் எல்லாம் வந்து விட்டது. பழைய மாடலை வைத்து ஓட்டி வருகிறார்கள்.

    அண்ணாமலை

    அண்ணாமலை

    ஈழம் அமைப்பது அண்ணாமலையால் சாத்தியம் என்பதை எப்படி ஏற்று கொள்ள முடியும். 2009ஆம் ஆண்டு பிரதமராக மோடி இருந்திருக்க வரம் இலங்கையில் போரே வந்திருக்காது என அண்ணாமலை கூறியுள்ளார். அந்த வரம் மோடிக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

    வரம்

    வரம்

    எனக்கும் வரம் கிடைத்திருந்தால் குஜராத் முதல்வராகவும் பிரதமராகவும் மோடி இருந்திருக்க மாட்டார். நிறைய இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என நானும் நினைக்கலாம் அல்லவா? அன்று ஈழ போரின் போது குஜராத் முதல்வராக இருந்த மோடி ஈழப் போருக்கு எதிராக குரல் கொடுத்திருந்தால் 2009 இல் மோடி பிரதமராக இருந்திருந்தால் அப்படி ஒரு போர் நடக்காமல் பார்த்திருப்பார் என நம்பிக்கை வரும்.

    ஈழப்போர்

    ஈழப்போர்

    ஆனால் அவர்தான் ஒரு முறையும் ஈழப்போரை எதிர்த்து குரல் கொடுக்கவே இல்லை, அப்போதெல்லாம் விட்டுவிட்டு இப்போது ஏன் பேசுகிறீர்கள். இந்து ஈழம் உருவாக்கப்பட்டிருக்கும் என கூறுகிறார். பிரபாகரன் இல்லை என்ற தைரியத்தில் அண்ணாமலை அப்படி கூறுகிறார். அவர் உயிருடன் இருந்த போது இந்து ஈழம் என்ற வார்த்தையே வரவில்லையே ஏன்?

    வழிபாட்டு தலங்கள்

    வழிபாட்டு தலங்கள்

    இலங்கையில் பல வழிபாட்டு தலங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. அப்போது அவை இந்து கோயில் என தெரியவில்லையா. கொத்து கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட போது அவர்கள் இந்துக்கள் என தெரியவில்லையா. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியாவில் தங்கியிருப்போருக்கு குடியுரிமை என்றீர்களே, ஏன் 35 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை மக்கள் இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்களே, அவர்களுக்கு ஏன் குடியுரிமை கொடுக்கவில்லை. நாங்கள்தான் இந்துக்களே இல்லை , சைவர்கள் என்கிறோமே! காங்கிரசில் தலைவர் இல்லை. காங்கிரஸ் தலை இல்லாத முண்டமாக உள்ளது என சீமான் கடுமையாக விமர்சித்தார்.

    English summary
    Seeman gives reply to BJP Annamalai in 2009 srilankan war issue: ஈழப்போர் நடந்த போது குஜராத் முதல்வராக இருந்த மோடி அந்த போரை எதிர்த்து குரல் கொடுக்கவில்லையே ஏன் என பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நாம் தமிழர் கட்சியின் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X