முதல்ல "அவரை" என்கிட்ட பேச சொல்லுங்க.. மெயின் திமுகதான்.. புட்டு புட்டு வைத்த சீமான்.. என்னாச்சு
திருப்பத்தூர் போராட்டத்தில் கலந்து கொண்ட சீமான், திமுக அரசை சரமாரியாக விமர்சித்தார்
சென்னை: வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் மீண்டும் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் நாம் தமிழர் கட்சி சீமான்..
வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து, சலசலப்புகள் ஓரளவு குறைந்து வருகின்றன.
எனினும், தமிழக அரசியல் களம் தகித்தே காணப்படுகிறது.. இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் கட்சிகள் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து கொண்டிருக்கின்றன.

காங்கிரஸ்
இதுக்கெல்லாம் காரணம், ஆளும் திமுக அரசு தான் பொறுப்பு என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்... ஆனால், வட மாநிலத்தவர் விவகாரம் தொடர்பாக, பொய்யான தகவல்களை பரப்பி வருவதே பாஜகதான் என்று திமுக குற்றம்சாட்டி வருகிறது. அதேபோல, பாஜகவும், நாம் தமிழர் கட்சியும்தான், இதுக்கெல்லாம் காரணம் என்று சீமான் மீது காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.. இவர்கள் இருவரும்தான் வட மாநிலத்தவர் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்தது..

வேல்முருகன்
பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் + சீமான் ஆகியோர் வட மாநிலத்தவர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பேசி வருவதாக குற்றம்சாட்டினார்.. இந்த சூழலில்தான், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அழகிரி ஒரு பேட்டி தந்திருந்தார். அதில், வட மாநில தொழிலாளர்கள் குறித்து ஒரு சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகின்றனர். குறிப்பாக பாஜக, ஆர்எஸ்எஸ் மறைமுகமாக செய்கிறார்கள். சீமான் வெளிப்படையாக செய்கிறார். இவர்கள் 2 பேர்தான் காரணம்.. சீமான் தன்னுடைய விளம்பரத்திற்காக தமிழ்நாட்டு மக்களுக்கும் வட இந்தியர்களுக்கும் இடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்.

சும்மா இருப்போமா?
வேண்டுமென்றே திட்டமிட்டு இது போன்று செய்து வருகின்றனர். சீமான் பேச்சு அவருக்கு தண்டனை கொடுக்கும் அளவிற்கு இருக்கிறது. சிங்கப்பூர் போன்ற இடங்களில் நம் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்கு எதிராக எதாவது நடந்தால், நாம் சும்மா இருப்போமா? யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று சொன்னதுதான் தமிழ் மரபு. எனவே தமிழ்நாடு அரசு உடனடியாக அம்பு எய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பிரச்சனைக்கு 10 வருடங்களாக சீமான் தான் காரணம்." என்றார்.

லிஸ்ட் சீமான்
அதுமட்டுமல்ல, "சீமான் குறைசொல்ல வேண்டும் என்று சொல்பவர். சீமான் ஆக்கப்பூர்வமான மனிதரல்ல. அரசியல் என்பது ஆக்கப்பூர்வமான மனிதர்களுக்கு மட்டுமே இடமளிக்கும். எதிர்மறையாக பேசியவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் காணாமல் போய்விட்டார்கள். அப்படி காணாமல் போனவர்களின் லிஸ்ட்டில் சீமான் கடைசியில் இருக்கிறார். நடைமுறை சாத்தியங்களையும், தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் பேசலாம். தமிழ்நாட்டிற்காக பாடுபட்டவர்கள், போராடியவர்களையெல்லாம் தமிழர்கள் இல்லை என்கிறார் என்றும் அழகிரி சாடியிருந்தார்.

ப்ரூப் பண்ணுங்க
இந்நிலையில்தான், திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் சீமான். அப்போது, காங்கிரஸ் தலைவர் அழகிரி சொன்ன கருத்துக்கள் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.. "பாஜகவும், சீமானும் தான் வடமாநிலத்தவர்கள் பிரச்சனைக்கு காரணம் என அழகிரி சொல்கிறாரே? என்று கேட்டதற்கு, "அது அவர் அரைவேக்காடு என்பதை நிரூப்பிக்கிறது. ராகுல் காந்தியை முதலில் என்னிடம் பேச சொல்லுங்கள். மற்ற மாநிலங்களில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழ்கின்றனரா? என்பதை ஒரு குழு அமைத்து ஆய்வு செய்யுங்கள். வட மாநிலத்தவர் குறித்த சர்ச்சையை திமுகவும் காங்கிரசும்தான் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர்" என்று காட்டமாக கூறியுள்ளார் சீமான்.












Click it and Unblock the Notifications