சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லோரும் நினைப்பதை போல மு.க.ஸ்டாலினை எதிர்த்து நானும் போட்டியிட நினைக்கிறேன்: சீமான்

Google Oneindia Tamil News

சென்னை: எல்லோரும் விரும்புவதை போல திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து தாமும் போட்டியிட விரும்புவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

தேசத்தின் விடுதலைக்காக, ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராக கப்பல் ஓட்டிய தமிழறிஞர், நாட்டின் விடுதலைக்காக செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் 84-ம் ஆண்டு நினைவுநாள் இன்று.

இதனையொட்டி சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமையகத்தில் வ.உ. சிதம்பரனார் நினைவு நிகழ்வு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று அகவணக்கம் செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் கூறியதாவது: மத்திய அரசானது நாங்கள் சொல்வதை மட்டும் நீங்கள் கேட்க வேண்டும் என்கிற போக்கையே கடைபிடிக்கிறது. நீட் தேர்வில் வடமாநிலங்களில் என்ன நடந்தது என்பதை நாம் பார்த்தோம். 13,000 பேர் தேர்வு எழுதினால் 85,000 பேர் தேர்ச்சி பெற்றதாக சொல்கிறீர்கள். புரட்சி என்பது புதிய சமூகத்தைக் கட்டமைப்பதுதான் என்கிறார் பகத்சிங். இந்த சமூகம் வெளிப்படையாகவே அநீதிகளால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

மாநிலங்கள் நிதி

மாநிலங்கள் நிதி

இந்தியா என்பது இந்தி பேசக் கூடிய மாநிலங்கள்தான்; வட இந்தியர்கள் மட்டும்தான். மத்திய அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் படிக்க முடியாது என்கிற நிலை உள்ளது. அந்த மத்திய அரசுக்கு என்று தனியே நிதி உள்ளதா? அது மாநிலங்கள் கொடுக்கிற நிதி. எங்கள் நிலத்தில் உள்ள கல்வி நிலையத்தில் எங்கள் தாய்மொழியை படிக்க முடியாது என்றால் எப்படி ஏற்பது?

மீனவர்களை அழிக்க பயிற்சி

மீனவர்களை அழிக்க பயிற்சி

தமிழகத்தில் நாங்கள் அதிகாரத்தில் இருந்திருந்தால் இப்படி எல்லாம் சொல்லிவிட முடியுமா? நீங்கள்தான் பள்ளிகளை நடத்திவிடவும் முடியுமா? இந்தியாவிடம் ராணுவ பயிற்சியை பெற்று ஈழத் தமிழரை இலங்கை ராணுவம் கொன்று அழித்துவிட்டது. அடுத்து தமிழ்நாட்டு மீனவர்களை அழிக்கத்தான் இப்போதும் இந்தியாவிடம் இலங்கை ராணுவம் பயிற்சி பெற்று வருகிறது.

பாஜக-காங். ஒன்றுதான்

பாஜக-காங். ஒன்றுதான்

இந்தியாவில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் தேவை குறைந்துவிட்டது. தமிழகத்தில் பாஜக தேவை இல்லை. இந்த இரு கட்சிகளின் பெயர்கள்தான் வேறு... கொள்கைகள் ஒன்றுதான். தமிழகத்தில் அதிமுகவுக்கு எதிர்காலம் வேண்டும் எனில் பாஜகவை கழற்றிவிட வேண்டும். அதேபோல திமுகவுக்கு எதிர்காலம் வேண்டும் எனில் காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட வேண்டும்.

ஸ்டாலினை எதிர்த்து போட்டி?

ஸ்டாலினை எதிர்த்து போட்டி?

சட்டசபை தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட வேண்டும் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். நானும் அப்படியே நினைக்கிறேன். அதுபற்றி அப்புறம் யோசிப்போம். இவ்வாறு சீமான் கூறினார்.

English summary
Naam Tamilar Chief Seeman said that he is willing to contest against DMK President MK Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X