Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாம் தமிழரில் எந்தெந்த ஜாதிக்கு எவ்வளவு சீட்? யாருக்கு அதிகம்? இஸ்லாமியர்களுக்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி வழக்கம்போல் தனித்து களமிறங்குகிறது. 234 சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சி சார்பில் எந்தெந்த சமுதாய மக்களுக்கு எவ்வளவு சீட் வழங்கப்பட்டு உள்ளது? யாருக்கு அதிகம்? இஸ்லாமியர்களுக்கு எத்தனை சீட் வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றிய முழுவிவரம் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த முறை தமிழகத்தில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் மற்றும் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் இடையே போட்டி உள்ளது.

seemans-naam-tamilar-party-candidates-and-their-castes-for-tamil-nadu-assembly-election

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணிக்கு வரும்படி விஜய் அழைப்பு விடுத்தார். ஆனால் தற்போது வரை எந்த கட்சியும் கூட்டணிக்கு செல்லவில்லை. அதேவேளையில் வழக்கம்போல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார்.

234 வேட்பாளர்கள் அறிவிப்பு

மேலும் கடந்த 21ம் தேதி திருச்சி மாவட்டம் ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் சீமான் தனது வேட்பாளர்களை அறிவித்தார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிவித்தார். இதில் சீமான் தனது சொந்த மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் களமிறங்கி உள்ளார். இந்நிலையில் தான் நாம் தமிழர் கட்சி சார்பில் எந்தெந்த ஜாதியினருக்கு எவ்வளவு சீட் வழங்கப்பட்டுள்ளது என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

பறையர் - தேவேந்திர குல வேளாளர்

அதன்படி தமிழகம் முழுவதும் பறையர் சமுதாயத்தினருக்கு 27 இடங்களில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 4 பேர் பொதுத்தொகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தேவேந்திரர் குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த 15 பேர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேருக்கு பொதுத்தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கவுண்டர் - நாடார்

மேலும் கவுண்டர் 24, கள்ளர் 11, குயவர் ஒருவர், கோணார் 8, சாலியர் ஒன்று, நாட்டுக்கோட்டை செட்டியார் ஒன்று, சவுராஷ்டிரா சமுதாயத்தை சேர்ந்த 2 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும் நாடார் 11, நாயக்கர் 3, நாயுடு 3, படுகர் 2, பண்டாரம் சமுதாயத்தை சேர்ந்த ஒருவர், பழங்குடியினருக்கு 3 இடங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒருவர் பொதுத்தொகுதியில் போட்டியிடுகிறார்.

வன்னியர் - பிராமணர்கள்

அதேபோல் வன்னியர் 34, பிள்ளைமார் 8, மருத்துவர் 1, மறவர் 10, மீனவர் 5, முதலியார் 8, முத்தரயைர் 8, மூப்பனார் ஒன்று, ரெட்டியார் 2 இடங்களில், வண்ணார் ஒன்று, பிராமணர்களுக்கு 6 தொகுதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அகமுடையார் சமுதாயத்தினர் 9 பேர், உடையார் 7 பேர், அருந்ததியர் 3 பேர், ஆசாரி சமுதாயத்தை சேர்ந்த ஒருவர், தமிழ் குறவர் ஒருவர், ஊராளி கவுண்டர் ஒருவர், ஒக்கலிக்க கவுடா ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு எத்தனை?

இஸ்லாமியருக்கு 10 இடங்களில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை நாம் தமிழர் கட்சியின் விவரத்தை கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வீடியோ வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+