சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைவர் எழுதிய பாடல் எங்கேப்பா..? படத்திறப்பு விழா முடிந்ததும் முனுமுனுத்த திமுக எம்.எல்.ஏ.க்கள்..!

Google Oneindia Tamil News

சென்னை: சட்டப்பேரவையில் கருணாநிதியின் படத்திறப்பு விழாவின் போது அவர் எழுதிய பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற பாடல் இசைக்கப்படாதது குறித்து திமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்குள் விவாதித்திருக்கின்றனர்.

நிகழ்ச்சி நிரலை பொறுப்பேற்று நடத்திய சட்டப்பேரவை செயலக அதிகாரிகள் இந்த பாடல் இசைக்கப்படுவது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்களா என்பது தெரியவில்லை.

செம்மொழி மாநாட்டுக்காக கருணாநிதி எழுதிய இந்தப் பாடலை முந்தைய திமுக அரசின் போது அரசு விழா மேடைகளில் அவர் ஏறும்போது ஒலிக்கவிடுவது குறிப்பிடத்தக்கது.

கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்கள் விற்பனை - இந்து சமய அறநிலையத் துறைக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்கோவிலுக்கு தானமாக வழங்கப்பட்ட பசுக்கள் விற்பனை - இந்து சமய அறநிலையத் துறைக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்

திமுக அரசு

திமுக அரசு

திமுகவின் 2006-2011 ஆட்சி காலத்தில் கோவையில் செம்மொழி மாநாட்டை மிக பிரமாண்டமாக நடத்தினார் கலைஞர். அந்த மாநாட்டிற்காக, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற பாடலையும் எழுதியிருந்தார். செம்மொழி மாநாட்டிற்கு பிறகு, அரசு நிகழ்ச்சியிலும் சரி , திமுக நிகழ்ச்சியிலும் சரி... நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பு அதாவது நிகழ்ச்சியின் மேடையை நோக்கி கலைஞர் வரும் போது , பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற பாடல் ஒலிக்கும்.

படத்திறப்பு

படத்திறப்பு

அந்த பாடலின் ரம்யம் உடன்பிறப்புகளை மெய்ச்சிலிர்க்க வைக்கும். 2011 ஆட்சியை திமுக இழந்த பிறகு, திமுகவின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இந்த பாடல் ஒலிக்க மறந்ததில்லை. இந்த நிலையில், தற்போது திமுக ஆட்சி நடக்கிறது. ஆனால், பிறப்பொக்கும் உயிர்க்கும் பாடல் அரசு நிகழ்ச்சியில் இடம் பெறுவதில்லையாம். வரலாற்று சிறப்பு மிக்க சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவையும் கலைஞரின் படத்திறப்பையும் ஜனாதிபதியை வைத்து 2-ந்தேதி நடத்தினார் முதல்வர் ஸ்டாலின்.

ஆதங்கம்

ஆதங்கம்

ஜனாதிபதி, மேடைக்கு வரும் போதோ அல்லது கலைஞரின் உருவப் படத்தை திறந்து வைக்கிற போதோ , பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற கலைஞரின் பாடலை ஒலிப்பரப்புவார்கள் என எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் எதிர்பார்த்திருந்திருக்கிறார்கள். ஆனால், அப்பாடல் ஒலிக்கவில்லை. தமிழ் உணர்வுள்ள எம்.எல்.ஏ.க்களும் எம்.பி.க்களும் இது குறித்து தங்கள் ஆதங்கத்தை நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும் போது பேசிக் கொண்டே வந்தனர்.

நினைவுகூராமல்

நினைவுகூராமல்

நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுதான் இதனை கவனித்திருக்க வேண்டும் என்றும், கலைஞரின் படம் எப்படி இருக்க வேண்டும் என்று பல யோசனைகளைத் தெரிவித்த தலைவர் தளபதிக்கும் கூட இந்த பாடல் இடபெற வேண்டும் என்ற நினைவு வராமல் போய்விட்டதே என்றும் பேசிக்கொண்டே வெளியே வந்தனர்.

English summary
semmozhi song he wrote at the Karunanidhi image opening ceremony was not played
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X