என்கிட்ட நக்கலா பேச கூடாது! கெட் அவுட் ஐ சே! சீமான் தமிழரே இல்லை..மலையாளி! எச்.ராஜாவுக்கு என்னாச்சு?
சென்னை : பாஜக மூத்த தலைவர் எச். ராஜா வீட்டில் வளர்த்த அடித்து கொன்றதாக விலங்குகள் நல வாரியம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இது குறித்த கேள்வியால் செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமாக பேசிய எச்.ராஜா செய்தியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"எங்கள் வீட்டில் அல்சேஷன் நாய் ஒன்றை பிரியமாக வளர்த்தோம். ஆனால் ஒருநாள் அதற்கு வெறி பிடித்து மாடு, கன்றுகளை கண்டிக்கத் துவங்கியது என பதிவிட்டிருந்தார்.
மேலும், " நாய் பிடிப்பவரிடம் சொன்னோம். அவர் ஒரு கல்லு மூங்கிலால் அதன் மண்டையில் ஒரே போடு போட்டார். 'நாய் பரிதாபமாக இறந்தது. வருத்தமாக உள்ளது. என்ன செய்வது." என பதிவிட்டிருந்தார். இது தான் சர்ச்சைக்கு விதை போட்டது.

எச்.ராஜா
இந்நிலையில் வளர்ப்பு நாயை கொலை செய்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக மிருக வதை தடைச் சட்டத்தின் கீழ் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலரான ஸ்வபனா சுந்தர் என்பவர் மத்திய விலங்குகள் நல வாரியத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஒரு வாரத்திற்குள் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

அடுத்தடுத்த சர்ச்சை
இதை அடுத்து எச்.ராஜா கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் விளக்கம் ஒன்றை அளித்திருந்தார். அதில் "தமிழகத்தில் சிலர் வெறி பிடித்தது போல் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களுக்கு உரைக்க புத்தி புகட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த ட்விட்டர் போட்டேம் எனவும், ஆனால் இதனை சிலர் வேண்டுமென்றே திசை திருப்புவதாக" கூறினார்.

பொன்னியின் செல்வன்
இந்நிலையில் இது குறித்த கேள்வியால் செய்தியாளர் சந்திப்பில் ஆவேசமாக பேசிய எச்.ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை பாஜக மூத்த தலைவர் ஆன எச்.ராஜா பாஜக நிர்வாகிகளுடன் பார்த்தார். அதன் பின்பு செய்தியாளிடம் பேசிய அவர், ரோஜாவிற்கு பிறகு மணிரத்தினம் தேச உணர்வு மிக்க படங்களை எடுக்கவில்லை. ஆனால் இது ஒரு நல்ல முயற்சி என பாராட்டினார்.

நக்கலாக பேசக்கூடாது
அப்போது அவரிடம் எச். ராஜா வீட்டில் வளர்த்த நாய் அடித்துக் கொல்லப்பட்டதாக அவர் போட்ட ட்விட்டர் பதிவு கொடுத்து கேள்வி எழுப்பினர். இதனால் கடும் கோபமடைந்த எச். ராஜா, "என்கிட்ட நக்கலாக பேசக்கூடாது.கெட் அவுட் ஐ சே.. யூ ஆர் ஏ ஃப்ராட். எச். ராஜாவை அசிங்கப்படுத்த வேண்டும் என பொய்யாக கேட்கக்கூடாது, நான் மூத்த அரசியல்வாதி என்ன கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஊடகங்கள் அறிவாலயத்தின் அடிமையாக இருக்கிறார்கள் எனக்கூறி பாதியிலேயே வெளியேறிய ஹெச். ராஜாவை மீண்டும் செய்தியாளர்கள் அழைத்து கேள்வி கேட்கத் தொடங்கினர். இதனால் கடுப்பான எச். ராஜா ஒரு அரசியல் தலைவரிடம் நாகரீகமாக பேச கற்றுக் கொள்ளுங்கள் என கூறியதோடு நாயை அடித்துக் கொன்றது தொடர்பாக தனக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவ்வாறு நடக்கவே இல்லை என மழுப்பினார்.

சீமான் மலையாளி
முன்னதாக நாம் தமிழர் கட்சி சீமான் எச்.ராஜா மனநல பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்," சீமான் தான் உண்மையிலேயே மனநோயாளி. சீமான் தமிழனே இல்லை. அவர் பேசுவதெல்லாம் பிதற்றல். சீமான் தமிழனே கிடையாது. அவர் ஒரு மலையாளி. இந்துவும் இல்லை கிறிஸ்டின். நான் சொல்லவில்லை அவர் உடனே இருந்த களஞ்சியமே சொல்லியிருக்கிறார்" என கடுமையாக விமர்சித்தார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications