சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வந்ததே கோபம்! சீனியர்களுக்கே மதிப்பு இல்லை.. அண்ணாமலையை வைத்துக்கொண்டு சீறிய பொன்னார்? ஆஹா உண்மையா?

Google Oneindia Tamil News

சென்னை: சமீபத்தில் நடந்த பாஜக உட்கட்சி கூட்டத்தில் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் மிகவும் கோபமாக பேசியதாக மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன் இந்தியா அரசியலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு பாஜகவில் பல்வேறு உட்கட்சி மோதல்கள் நிலவி வருகின்றன. பாஜக மீது கடுமையான விமர்சனங்கள், விவாதங்கள் இணையத்தில் கட்சி நிர்வாகிகள் சிலர் சார்பாகவே வைக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தமிழக பாஜகவில் நடக்கும் உட்கட்சி மோதல்கள் பற்றி காயத்ரி ரகுராம் விமர்சனங்களை வைத்தார்.

முக்கியமாக பாஜக தலைவராக அண்ணாமலை வந்த பின்புதான் வீடியோ, ஆடியோ கலாச்சாரம் கட்சியில் தலை தூக்கியதாக குறிப்பிட்டார். சமீபத்தில் பாஜகவில் நடக்கும் உட்கட்சி மோதல் குறித்து காயத்ரி ரகுராம் மௌனம் கலைத்தார். பாஜகவில் சீனியர்கள் மதிக்கப்படுவது இல்லை என்று காயத்ரி ரகுராம் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். அதோடு நேற்று கட்சியில் இருந்தும் விலகினார்.

வேகமாகும் XBB! தற்காத்து கொள்வது எப்படி? சூப்பரான எனர்ஜி பூஸ்டர் ரெசிபி.. டாக்டர் ஒய் தீபா வேகமாகும் XBB! தற்காத்து கொள்வது எப்படி? சூப்பரான எனர்ஜி பூஸ்டர் ரெசிபி.. டாக்டர் ஒய் தீபா

மூத்த தலைவர்

மூத்த தலைவர்

சமீபத்தில் தமிழ்நாட்டிற்கு வந்த பாஜக தேசிய தலைவர் நட்டா கூட இதை பற்றி ஆலோசனை செய்ததாக கூறப்பட்டது. உட்கட்சி மோதலை தவிருங்கள். கொங்கு மண்டலத்தில் உள்ள எம்பி தொகுதிகள் அனைத்தையும் நாம் கைப்பற்ற வேண்டும். கொங்கு மண்டலத்தில் இருந்து 5 எம்பிகளாவது வெற்றிபெற வேண்டும். குறைந்தது 1 மத்திய அமைச்சராவது கொங்கு மண்டலத்தில் இருந்து வர வேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். கூட்டணியில் இடம் கிடைக்குமா என்றெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை மேலிடம் பார்த்துக்கொள்ளுங்கள். கூட்டணி பற்றி நாங்கள் முடிவு எடுத்துக்கொள்வோம், என்று பேசினார். இந்த நிலையில் தமிழ்நாடு பாஜகவில் என்ன நடக்கிறது என்று மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் ஒன் இந்தியா அரசியலுக்கு பேட்டி அளித்துள்ளார். அவரின் பேட்டி பின்வருமாறு..

பேட்டி

பேட்டி

அதில், தமிழ்நாட்டில் பூத் கமிட்டிகள் பாஜகவிற்கு இல்லை என்று பொன் ராதாகிருஷ்ணன் சமீபத்தில் நடந்த உட்கட்சி பாஜக கூட்டத்தில் பேசினார். தமிழ்நாட்டில் பாஜகவின் பூத் கமிட்டிகள் வளரவில்லை. கட்சி வலிமையாக இல்லை என்று பொன்னார் பேசி இருக்கிறார். தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வருமா வராதா என்று தெரியாமலே கட்சிக்காக 20 - 30 ஆண்டுகளாக சீனியர்கள் வேலை பார்த்தனர். அந்த சீனியர்களை யாரும் மதிப்பது இல்லை. அந்த சீனியர்களே இப்போது கட்சிக்கே ஓட்டு போட மாட்டார்கள் என்று பொன் ராதாகிருஷ்ணன் கட்சி கூட்டத்திலேயே அண்ணாமலை, சிடி ரவிக்கு முன்பாக பேசினார். கட்சி பற்றி எல்லாம் தெரிந்த பொன் ராதாகிருஷ்ணன்தான் இப்படி பேசுகிறார்.

அண்ணாமலை

அண்ணாமலை

அண்ணாமலையின் பெயர் தமிழ்நாடு முழுக்க உச்சரிக்கப்படுகிறது. அவர் பிரபலமாக இருக்கிறார் என்றெல்லாம் கூறுகிறார். இதனால் வென்றுவிடுவோம் என்று நினைக்கிறார். அவருக்கு யார் என்ன ரிப்போர்ட் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.. ரஜினி இப்படித்தான் நினைத்துக்கொண்டு இருந்தார். அவர் அரசியலுக்கு வந்தால் அதிமுக உடையும், ஆட்சி மாறும் என்றெல்லாம் கூறினார்கள். கடைசியில் எடுக்கப்பட்ட சர்வேயில் அவருக்கு 8.5% வாக்குகள்தான் வரும் என்றார்கள். 2- 3 எம்எல்ஏக்கள்தான் வரும் என்றார்கள். அதனால் ரஜினி அரசியலுக்கே வரவில்லை.

பாஜக

பாஜக

அண்ணாமலைக்கு இது தெரியவில்லை. அண்ணாமலை பிரபலமாக இருக்கலாம். ஆனால் அது எல்லாம் வெற்றிபெற உதவாது. அவருக்கு ஒரு எம்பிதான் கிடைக்கும். கன்னியாகுமரியில் ஜெயிக்க மட்டுமே வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் - திமுக கூட்டணி இருந்தால் அதற்கும் வாய்ப்பு இல்லை. 25 இடங்களில் எல்லாம் பாஜக வெற்றிபெற வாய்ப்பே இல்லை. பொன் ராதாகிருஷ்ணன் பேசுவதை சிடி ரவி அதை பார்த்துக்கொண்டு இருந்தார். தமிழ்நாட்டில் பூத் கமிட்டி அமைத்து கொடுங்கள் என்று சிடி ரவியும் கேட்டு இருக்கிறார். இத்தனை வருடமாக தமிழ்நாட்டில் இருக்கும் பாஜகவிற்கு பூத் கமிட்டி இல்லை என்பதை பொன் ராதாகிருஷ்ணன் சொல்லி இருக்கிறார்.

பொன்னார்

பொன்னார்

தமிழ்நாட்டில் பாஜக வளரவில்லை. மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்த அருணாசலம் பாஜக போய்விட்டு மீண்டும் திரும்பி வந்துவிட்டார். கு க செல்வம் திமுகவில் இருந்து பாஜக சென்றுவிட்டு, பாஜகவில் இருந்து மீண்டும் திமுக வந்துவிட்டார். இப்படி பல நிர்வாகிகள் பாஜகவில் இருந்து வெளியேறிவிட்டனர். பாஜக வளருகிறது என்றால் ஏன் இவர்கள் எல்லாம் வெளியேற வேண்டும்? அண்ணாமலை நல்ல தலைவராக இருந்தால் எப்படி பாஜக வளரும்? ஊருக்கு ஊர் மீட்டிங் போட்டால்.. மேடைக்கு மேடை பேசினால்.. கட்சி வளரும் என்று அண்ணாமலை நினைக்கிறார். அது தவறு, என்று குபேந்திரன் தெரிவித்துள்ளார்.

English summary
Seniors are not happy with current BJP: Did Pon Radhakrishnan say like in BJP party meet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X