சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"மன்னிச்சிடுங்க தலைவரே.. ஓவர் அவமானம்.. மொதல்ல 'அவரை' விசாரிங்க".. நொந்து வெளியேறிய "சாமி"!

செந்தில்பாலாஜி மீது கரூர் சின்னசாமி புகார் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவரே தலையிட்டும் இந்த பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வரவில்லை என்பதே கரூர் சின்னசாமி - செந்தில்பாலாஜி விவகாரத்தில் நமக்கு கிடைக்கும் தகவலாக உள்ளது.. அப்படி என்ன நடந்தது?

செந்தில்பாலாஜியை பொறுத்தவரை ஆல் ரவுண்டர்.. வெட்டி வா என்றால் கட்டி வந்து நிற்கும் சர்வ சக்தி படைத்தவர்.. இவர் எந்த கட்சியில் இருந்தாலும், இவர் தொகுதி அமோக வெற்றி பெறும் என்பது திண்ணம்.

ஆனால், திமுகவில் இவர் இருந்தாலும், அமமுகவிலிருந்து வந்தவர்களை மட்டுமே இவர் தூக்கி பிடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு எப்போதுமே உள்ளது.. இதனால் புழுங்கி புழுங்கி தவித்தவர்கள் ஒவ்வொருவராக திமுகவில் இருந்து வெளியேறி கொண்டிருக்கிறார்கள்.

 அதிருப்தி

அதிருப்தி

கிருஷ்ணராயபுரம் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ காமராஜ், மற்றொருவர் திமுக மாநில விவசாய அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சர், முன்னாள் எம்பியுமான கரூர் ம.சின்னச்சாமி. அதிமுகவில் சேர போவதற்கான விளம்பரத்தையும் அவர் அறிவித்துவிட்டார். "உரிய மரியாதை இல்லாததால் பொறுத்துக் கொள்ள முடியாமல் வெளியேறுகிறேன்" என்ற குமுறலுடன் வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இது குறித்து நாம் சிலரிடம் பேசினோம்,. அவர்கள் சொன்னதாவது:

 மாவட்ட செயலாளர்

மாவட்ட செயலாளர்

"இது திடீரென முளைத்த விவகாரம் இல்லை.. மாவட்ட செயலாளராக இருந்தாலும், எந்த நிகழ்ச்சி பற்றியும் தகவலை தராமல் இருந்திருக்கிறார்.. திமுகவுக்கு செந்தில்பாலாஜி வந்த 40 நாளிலேயே மாவட்ட செயலாளர் பொறுப்பு தந்துவிட்டார்கள்.. ஆனால், சின்னசாமி எம்ஜிஆர் காலத்து சீனியர்.. இப்போதுவரை போதுமான முக்கியத்துவம் தரப்படவில்லை என்று புழுங்கி கொண்டிருந்திருக்கிறார். ஒருவேளை திமுக தலைமை தந்துவிட்டாலும், செந்தில்பாலாஜி அதற்கு இடம் கொடுக்காமல் தெளிவாக இருந்திருக்கிறார்.

 ஜோதிமணி

ஜோதிமணி

2019 தேர்தலின்போதே எம்பி சீட் கேட்டார் சின்னசாமி.. ஆனால் செந்தில்பாலாஜி, ஜோதிமணி போட்டியிடுவதற்காக காங்கிரஸுக்கு ஒதுக்கிவிட்டார்... இதனால் விரக்தி அடைந்த சின்னசாமி, இப்போது, மறுபடியும் தேர்தலில் போட்டியிட முயற்சி செய்திருக்கிறார்.. அதை செந்தில்பாலாஜி தடுத்துவிட்டதாக சொல்கிறார்.

 நேர்காணல்

நேர்காணல்

இதனால் விரக்தியின் உச்சிக்கே போய்விட்ட சின்னசாமி, நேர்காணலின்போது திமுக தலைவரையே பார்த்து ஒருசில விஷயங்களை சொல்லி இருக்கிறார்.. "செந்தில்பாலாஜி ரெகமன்ட் பண்ணிதான் எனக்கு சீட் கிடைக்கணும்னு அவசியமில்லை.. மாவட்ட திமுகவில் விசாரிச்சு பாருங்க.. மொதல்ல எல்லா சீனியர்களிடமும் செந்தில்பாலாஜியை பத்தி விசாரிச்சு பாருங்க. உங்களுக்கே செந்தில்பாலாஜி யாருன்னு தெரியும்" என்று சொன்னாராம்.

 அதிருப்தி

அதிருப்தி

இதற்கு பிறகு சீட் கிடைக்காத ஒவ்வொரு அதிருப்தியாளர்களுக்கும் ஸ்டாலின் போன் போட்டு பேசி வந்துள்ளார்.. அந்த வகையில் சின்னசாமியிடமும் மறுபடியும் பேசியதாக தெரிகிறது. "மன்னிச்சுக்கங்க தலைவரே... அவரோடு சேர்ந்து அரசியல் செய்ய முடியாது" என்று கட் & ரைட்டாகவே சின்னசாமி சொல்லிவிட்டதாக தெரிகிறது. இப்படி அவமானப்பட்டுதான் சின்னசாமி வெளியே வந்திருக்கிறார் போலும். ஆனால், விளம்பரம் லேட்டாகத்தான் தந்திருக்கிறார்.. புகைச்சல் குறைவாக இருந்தபோதே இந்த விவகாரத்தை சரிக்கட்டி இருக்கலாம்.. இப்போது கரூர் திமுகவுக்குதான் சிக்கல் சூழந்துள்ளது" என்றனர்.

 புகைச்சல்

புகைச்சல்

இதில் எந்த அளவுக்கு உண்மைதன்மை இருக்கிறது அல்லது செந்தில்பாலாஜி பக்கம் உள்ள நியாயம் என்ன என்பது தெரியவில்லை என்றாலும், கரூர் திமுக புகைச்சலில் உள்ளது மட்டும் தெரிகிறது.

English summary
Senthil Balaji and Chinnasamy, Local Politics in Karur DMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X