சீரியல் நடிகர் கார்த்தியின் மகன் நித்திஷின் கார் விபத்தின் சிசிடிவி காட்சிகள்! பகீர் கிளப்புதே
சென்னை: துணை நடிகர் கார்த்திக்கின் மகன் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில் அதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆர்.ஏ.புரத்தைச் சேர்ந்தவர் நடிகர் கார்த்தி. இவர் சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தெய்வமகள் சீரியலில் கூட துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவருடைய மகன் நித்திஷ் ஆதித்யா. இவர் பொறியியல் 3ஆம் ஆண்டு படித்து வந்தார். தீபாவளி விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் காரில் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு விளையாடச் சென்றுள்ளார். அங்கிருந்து நள்ளிரவு 2 மணிக்கு வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் அருகே காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த இடத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் நித்திஷ் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். அவருடன் பயணித்த நண்பர்கள் ஜெயகிருஷ்ணன், வெங்கட் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காரில் மூவரும் சீட் பெல்ட் அணியாமல் பயணம் செய்ததே உயிரிழப்புக்கு காரணம். சீட் பெல்ட் போட்டிருந்தால் காயங்களுடன் உயிர் பிழைத்திருக்க முடியும் என நித்திஷின் உறவினர் தெரிவித்துள்ளார்.
காரை ஓட்டுவதற்கு முன்னர் அவர்கள் பிரைடு ரைஸ் சாப்பிட்டனராம். சீட் பெல்ட் அணியாததால் நெஞ்சு கூட்டில் ஸ்டியரிங் அடித்து அவர் சாப்பிட்டிருந்த பிரைடு ரைஸ் முழுவதும் ஜீரணமாகாமல் அப்படியே கொட்டியதை உடனிருந்தவர்கள் விவரிக்கிறார்கள். இந்த நிலையில் நித்திஷ் காரில் வரும் போது அவரது கார் கட்டுப்பாட்டை இழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அதில் விஜயநகர் பேருந்து நிலையம் அருகே ஆள் அரவமற்ற சாலையில் நித்திஷின் கார் வேகமாக வந்தது. சாலையின் குறுக்கே சென்று சென்டர் மீடியனில் மோதி முன் பக்கம் இடித்து அப்படியே டர்ன் ஆகி நின்றது. யூ வடிவில் அந்த கார் டில்ட் ஆகி நின்றது. இதனால் காரின் முன்பக்கம் பெருத்த சேதமடைந்தது. இந்த காட்சிகளை பார்க்கும் போது அய்யோ நித்திஷும் அவருடைய நண்பர்களும் உள்ளே இருந்து எப்படி துடிதுடித்திருப்பார்கள் என்பதை நினைத்தாலே ஈரக்குலையே நடுங்குகிறது.












Click it and Unblock the Notifications