சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மலையாளத்தில் பேசினால் ஆக்சன்.. சர்ச்சை ஆர்டருக்கு கடும் எதிர்ப்பு.. வாபஸ் பெற்றது டெல்லி மருத்துவனை

Google Oneindia Tamil News

டெல்லி: மலையாளம் பேசும் செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என சுற்றறிக்கை அனுப்பியதை டெல்லியில் உள்ள முன்னணி அரசு மருத்துவமனை (ஜிப்மர்) திரும்ப பெற்றுள்ளது. கடும் விமர்சனம் எழுந்தால் திரும்ப பெற்றுள்ளது.

டெல்லியின் மிகப்பெரும் முன்னணி அரசு மருத்துவமனையான கோவிந்த் பல்லப் பந்த் இன்ஸ்டிடியூட் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்(GIPMER) உள்ளது.

இங்கு கேரளாவைச் சேர்ந்தவர்களே அதிக அளவு செவிலியர்களாக பணியாற்றி வருகிறார்கள். டெல்லியில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே செவிலியர் படிப்பு முடிந்த அந்த பணிகளை அதிகம் செய்பவர்கள் மலையாளிகள் தான்.

ஆங்கிலம் அல்லது இந்தி

ஆங்கிலம் அல்லது இந்தி

மலையாள செவிலியர்கள் தங்களுக்குள் பேசும் போது மலையாளத்தில் தான் பேசிக்கொள்வார்கள். தாய்மொழியை எங்கும் அவர்கள் விட்டுக்கொடுப்பது இல்லை. அந்த வகையில் தான் டெல்லியின் கோவிந்த் பல்லப் பந்த் மருத்துவமனையிலும் மலையாளத்தில் பேசி உள்ளார்கள்.பெரும்பான்மையான செவிலியர்கள் மலையாளிகளாக உள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்குள் மலையாள மொழி பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

நோயாளி புகார்

நோயாளி புகார்

இந்த நிலையில் நோயாளி ஒருவர், செவிலியர்கள் பணிபுரியும் இடங்களில் தொடர்பு கொள்ள முடியாத மலையாள மொழி பயன்படுத்தப்படுவதாக குறித்து புகார் கூறியுள்ளார். இதையடுத்து சுற்றறிக்கை வெளியிட்ட மருத்துவனை நிர்வாகம், அதிகபட்ச நோயாளி மற்றும் உடன்பணியாற்றுபவர்களுக்க மலையாள மொழி தெரியாது, இதனால் நிறைய அசவுகரியங்கள் ஏற்படுகின்றன. எனவே அனைத்து நர்சிங் பணியாளர்களும் இந்தி மற்றும் ஆங்கிலத்தை மட்டுமே தகவல்தொடர்புக்கு பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.. இல்லையெனில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மருத்துவமனை நிர்வாகம் எச்சரித்தது. ஒன்றாகும். இங்கு பணியாற்றும் செவிலியர்கள் அலுவலக வழக்கு மொழியாக இந்தி அல்லது ஆங்கிலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் இல்லையென்றால் 'கடும் நடவடிக்க்கை' எடுக்கப்படும் எனவும் மருத்துவமனை நிர்வாகத்தினரால் உத்தரவிடப்பட்டுள்ளது.

வேதனை

வேதனை

இதற்கு செவிலியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் ஒரு செவிலியர் கூறும் போது, "மருத்துவமனையில் [ஜிப்மர்] சுமார் 300-350 மலையாள செவிலியர்கள் உள்ளனர், நாங்கள் எப்போதும் இந்தியில் தான் நோயாளிகளுடன் பேசுகிறோம். மலையாளத்தில் நாங்கள் அவர்களுடன் பேசினால் அவர்கள் எதையும் புரிந்துகொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா? இப்போது அவர்கள் மலையாளத்தில் எங்களுக்குள் பேசக்கூடாது என்கிறார்கள் என எதிர்ப்பை பதிவு செய்தார்.

உடன்படவில்லை

உடன்படவில்லை

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்கு செவிலியர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து ஜி.பி.பந்த் செவிலியர் சங்கத் தலைவர் லீலாதர் ராம்சந்தனி கூறுகையில், மருத்துவமனையில் மலையாள மொழியைப் பயன்படுத்துவது தொடர்பாக ஒரு நோயாளி சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிக்கு அனுப்பிய புகாரைத் தொடர்ந்து இது வெளியிடப்பட்டது, இந்த "சுற்றறிக்கையில் பயன்படுத்தப்படும் கருத்தில் தொழிற்சங்கம் உடன்படவில்லை" என்று கூறியிருந்தார்

மொழி பாகுபாடு வேண்டாம்

மொழி பாகுபாடு வேண்டாம்

இதனிடையே மருத்துவமனையில் மலையாளம் பேசிக்கொள்ளக்கூடாது என்ற உத்தரவிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார் மலையாளம் மற்ற இந்திய மொழியையும் போலவே இந்தியர்களின்.மொழி.. எனவே மொழி பாகுபாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் இந்தியை திணிக்கக்கூடாது என்று சமூக வலைதளங்களில் மலையாள செவிலியர்களுக்கு ஆதரவாக டிரெண்டிங் ஆனது.

பின்வாங்கியது

பின்வாங்கியது

கொரோனா தொற்று கால சூழலில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல், செவிலியர்கள் சேவையாற்றி வருகிறார்கள். தாய்மொழியில் தங்களுக்குள் பேசக்கூடாது என்ற உத்தரவு மன உளைச்சலை தரும். எப்போதுமே பிரச்சனையை தீர்க்க இதுபோன்ற உத்தரவுகள் உதவாது. எனவே உடனடியாக மருத்துவமனை நிர்வாகம் மலையாளம் பேசுவதற்கு எதிரான சுற்றறிக்கை வாபஸ் பெறுவது தான் சிறந்தது என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து டெல்லி அரசு மருத்துவமனை தனது உத்தரவை திரும்ப பெற்றுள்ளது.

English summary
A Delhi government-run hospital on Saturday banned nursing staff from speaking in Malayalam in the hospital and warned of ‘serious action’ if they do not talk in English or Hindi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X