'வெட்கக்கேடு யூடியூபர் இர்ஃபான்.. இவர் பெரிய ஜமீன் பரம்பரை'.. விஜே பார்வதி சரமாரி விமர்சனம்
சென்னை: யூடியூபர் இர்ஃபான் ரமலான் பண்டிகை அன்று ஏழைகளுக்கு உணவு உடை உள்ளிட்டவற்றை உதவியாக வழங்கினார். தனது மனைவியுடன் காரில் சென்று உதவிகளை வழங்கிய இர்ஃபான் அதனை வீடியோவாக தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. யூடியூபர் இர்ஃபானை கடுமையாக விமர்சித்து விஜே பார்வதி இன்ஸ்டாகிராமில் வீடியா ஒன்றை வெளியிட்டுள்ளார்.
யூடியூபர் இர்ஃபான் அண்மைக் காலமாக அவ்வப்போது சர்ச்சையில் சிக்கி வருகிறார். பாட்டி மீது கார் மோதி விபத்து, வெளிநாட்டிற்கு சென்று தனது குழந்தையின் பாலினத்தை தெரிந்துகொண்டு சமூகவலைதளத்தில் வெளியிட்டது, மனைவியின் தொப்புள் கொடியை வெட்டி அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியிட்டது என அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வந்தார் யூடியூபர் இர்ஃபான்..

தற்போது புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.இந்த சர்ச்சையும் வழக்கம் போல் அவர் வெளியிட்ட வீடியோவால் தான் ஏற்பட்டுள்ளது. யூடியூபர் இர்ஃபான் தனது மனைவியுடன் காரில் சென்று ரமலான் பண்டிகை அன்று ஏழைகளுக்கு உணவு உடை உள்ளிட்டவற்றை உதவியாக வழங்கினார். அப்போது ஒவ்வொரு பகுதியாக சென்று ஏழைகளை சந்தித்து உதவி பொருட்களை வழங்கி கொண்டிருந்தார்.
இர்ஃபான் கோபம்
அதில் ஒருவர், திடீரென உதவிப்பொருட்களை தருவதற்குள் ஆர்வ கோளாறில் பிடித்து இழுத்தாராம். அப்போது பொருளை வாங்கியவர், திடீரென இர்ஃபானின் மனைவி மீது கையை நகத்தால் இழுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த இர்ஃபான், இப்படி அசிங்கமா பண்ணாதீங்கமா.. ஏம்மா பிடிச்சு இழுக்காதீங்க.. கொடுக்க தானே வந்திருக்கோம்.. ஏன் பிடிச்சு இழுக்குறீங்க என திட்டுகிறார். இதையும் தனது யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.
விஜே பார்வதி விமர்சனம்
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர், யூடியூபர் இர்ஃபானை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.. விஜே பார்வதி இதுபற்றி விமர்சித்து வெளியிட்டுள்ள வீடியோவில், இவர் பெரிய ஜமீன் பரம்பரை.. காருக்குள் உட்கார்ந்து கொண்டுதான் இல்லாத மக்களுக்கு சேவை பண்ணுவாரு..
ரத்தன் டாடா தெரியுமா
அடுத்ததாக இவருடைய மனைவியை அவ்வளவு பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று விரும்புகிறார் என்றால், இந்த மாதிரி சமூக நல செயல்களுக்கு கூட்டிக்கொண்டே வந்திருக்கக்கூடாது.. காருக்குள் வைத்துக்கொண்டு... வீட்டில் விட்டுவிட்டு வர வேண்டியது தானே.. ரத்தன் டாடாவை பற்றி தயவு செய்து படிங்க.. ரத்தன் டாடா தான் வாழ்க்கையில் சம்பாதித்த மேஜர் பணத்தை இல்லாதவங்களுக்கு கொடுத்துவிட்டு சென்றார்... அவர் அப்படி கொடுத்ததை எங்குமே விளம்பரப்படுத்திக் கொண்டது இல்லை..
புதுப்பணக்காரர்கள் புத்தி
ஆனால் இந்த புதுப்பணக்காரணுங்க இருக்காங்க பார்த்தீங்களா.. இவங்க பண்ற கூத்து இருக்கே .. தன்னிடம் காசு இருக்கிறது என்பதை வந்து.. எப்படி எல்லாம் கேவலமாக.. இங்க தான் அவனது மூளை வெளிப்படுது.. இந்த மாதிரி சீப் மெண்டாலிட்டி உள்ளவர்களை பற்றி பெரிய லிஸ்டே இருக்கிறது.. இவனுங்களையா நம்ம வந்து புரேமோட் பண்றது.. நாடு நாசமாக போக வாழ்த்துக்கள்." இவ்வாறு கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications