Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தயவுசெஞ்சு கேப்டனை விட்ருங்க! படைத்தலைவன் படத்தில் விஜயகாந்த்! வெட்டி ஒட்டி.. யாருயா அந்த எடிட்டரு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேப்டன் என அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்போடு படைத்தலைவன் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. ஏஐ மூலம் விஜயகாந்த் இந்த படத்தில் தோன்றி இருப்பதாக வெளியான தகவலால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தனர். ஆனால் படத்தில் கார்ட்டூன் போல விஜயகாந்த் இருப்பதாகவும், பழைய படத்தில் இருந்து விஜயகாந்தின் முகத்தை மட்டும் வெட்டி ஒட்டியுள்ளது போல இருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. அதே நேரத்தில் கோட் படத்தில் வெங்கட் பிரபு கூட கேப்டன் விஜயகாந்த்-ஐ சரியாக காட்டி இருந்ததாக கூறுகின்றனர் நெட்டிசன்கள்.

தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய நாயகர்களில் ஒருவராக இருந்தவர் விஜயகாந்த். மதுரையைச் சேர்ந்த இளைஞரான விஜயகாந்த் சினிமாவில் நுழைந்து தொடர்ந்து நாயகனாக உயர்ந்தார். அந்த காலத்தில் ரஜினி கமலுக்கு போட்டியாக பல வெற்றி படங்களை கொடுத்தவர்.

ஒரு சில நேரங்களில் ரஜினியின் படங்கள் கூட விஜயகாந்தின் படங்களோடு போட்டி போட்டு தோல்வியை சந்தித்தது வரலாறு. தொடர்ந்து தனது ரசிகர் மன்றம் மூலம் பல்வேறு நற்பணிகள் செய்து வந்த அவர் மதுரையில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனும் கட்சியை ஆரம்பித்தார்.

Shanmuga Pandian Vijayakanth cinema

ஆண்டவனோடும் மக்களோடு மட்டும் தான் கூட்டணி என்ற முழக்கத்தோடு தேர்தல்களை சந்தித்து ஆளுங் கட்சியையும் எதிர்க்கட்சியையும் பயம் கொள்ள வைத்தார். ஒரு கட்டத்தில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்து திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பினார். ஜெயலலிதாவுடன் சட்டமன்றத்தில் ஏற்பட்ட மோதல் போக்கை அடுத்து விஜயகாந்தின் நடவடிக்கைகள் சற்று விமர்சனத்தை ஏற்படுத்தியது. பொது இடங்களில் நிர்வாகிகளை அடிப்பது, அநாகரீகமாக நடந்து கொள்கிறார் என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிய விஜயகாந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிர் இழந்தார். அப்போது லட்சக்கணக்கானோர் விஜயகாந்த்-க்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இன்றுவரை அவரது நினைவிடத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்போடு படைத்தலைவன் திரைப்படம் உருவானது. ஏற்கனவே மதுரை வீரன், சகாப்தம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் இந்த படத்தின் ட்ரெய்லர் மக்களை வெகுவாக கவர்ந்தது. காரணம் இதுவரை இல்லாத தோற்றத்தில் சண்முக பாண்டியன் இருந்தார். மேலும் காடு, மலை, யானை கூட்டம் என மேக்கிங் பிரம்மாண்டமாக இருந்தது. இதனால் படத்தை ஆர்வத்தோடு எதிர்நோக்கி இருந்தனர்.

படம் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க.. படத்தில் விஜயகாந்த் எப்படி வருகிறார் என்பது தான் ஹைலைட். ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விஜய்காந்தை கேமியோ ரோலில் வரவழைத்து இருக்கிறார்கள். ஆனால், படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் தான் வந்திருக்கிறது.

Shanmuga Pandian Vijayakanth cinema

அருமையான கதை, நல்ல நடிகர். ஆனால் சொதப்பிய திரைக்கதை, தேவையில்லாத காட்சிகள் மூலம் சண்முக பாண்டியன் நடிப்பை வீணடித்து விட்டதாக கூறுகின்றனர். படத்தின் ஒரே பாசிட்டிவ் கேப்டன் விஜயகாந்த் தான் இரண்டு நிமிடம் காட்சியில் அவர் வருகிறார். அதற்காகத்தான் ஒட்டுமொத்த கூட்டமும் தியேட்டருக்கு வந்தது. ஆனால் கிராபிக்ஸ் சரியாக அமையவில்லை. பழைய படங்களில் விஜயகாந்த் முகத்தை எடுத்து வெட்டி ஒட்டி வைத்திருக்கின்றனர் என விமர்சனம் எழுந்துள்ளது. சிலர் விஜயகாந்த்தை அசிங்கப்படுத்த வேண்டாம் எனவும், கேப்டனை வைத்து நீங்க பண்ணது போதும்.. இனிமேலாவது அவரை விடுங்க என கூறி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+