இன்னும் கொஞ்ச நாள்..அழிவை நோக்கி செல்லும் உலகம்! தீக்கோளமாய் மாறபோகும் பூமி..அண்ணா பல்கலை அதிர்ச்சி
சென்னை: தற்போது நிலவிவரும் வெப்பநிலையை விட 2100ஆம் ஆண்டில் இதைவிட பல மடங்கு வெப்பநிலை அதிகரிக்கும் எனவும், வருடத்தில் 120 நாட்கள் வெப்ப அலை வீசும் என அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோடை காலம் என்றாலே மே மாதத்தில் தான் வெயில் சுட்டெரிக்கும் ஆனால் தற்போதையெல்லாம் ஜனவரி மாதத்தில் இருந்தே வெயில் தனது வேலையை காட்ட துவங்கி விட்டது.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சில இடங்களில் மட்டுமே 100 டிகிரி பாரன்ஹீட் வெயிலை தொடும். ஆனால் தற்போது பத்து முதல் 15 மாவட்டங்களில் 100 டிகிரி பேரன்ஹீட் வெயில் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது.
வெப்பநிலை அதிகரிப்பு: காலை 7 மணிக்கே தொடங்கும் வெயிலின் தாக்கம் இரவு 7 மணி வரை இருக்கிறது. 6:00 மணிக்கு சூரியன் மறைந்து விட்டாலும் இரவு நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது என்கின்றனர் மக்கள். இந்த நிலையில் வெயிலின் தாக்கம் நாட்கள் செல்லச் செல்ல மேலும் அதிகரிக்கும் எனவும் 2100ஆம் ஆண்டில் வெப்பநிலை தற்போது இருப்பதைவிட பல மடங்கு உயிரும் என அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதிர்ச்சி தகவல்: காலநிலை மாற்றம் மற்றும் வெப்பத்தின் தாக்கம் உள்ளிட்ட 5 பிரிவுகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் அந்த துறையின் இயக்குனர் கொரியன் ஜோசப் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வு அறிக்கையானது தமிழக அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இனி வரும் காலங்களில் வெப்ப அலைகளின் தாக்கம் ஆனது மிக அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
வெப்ப அலை: இதன் காரணமாக வேளாண்மை மற்றும் விவசாய பொருட்களின் உற்பத்தியானது மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என கூறப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தற்போது 10 முதல் 20 நாட்கள் வரை இருக்கும் வெப்ப அலையின் தாக்கம் ஆனது 2100 ஆம் ஆண்டில் 90 முதல் 120 நாட்கள் வரை இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வேளாண் விவசாய பொருட்களின் உற்பத்தியானது 10 சதவீதத்திற்கும் மேல் குறையும் என அஞ்சப்படுகிறது.
வானியல் மாற்றம்: 2014ஆம் ஆண்டு ஆண்டுக்கு முன்னதாக 30 ஆண்டுகளில் ஏற்பட்ட வானியல் மாற்றம் குறித்து ஆய்வு நடத்தியதில் கடந்த 30 ஆண்டுகளில் 30 நாட்கள் வரை மட்டுமே வெப்பாலை வீசி இருந்தது. அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வெப்ப அலை வீசி நிலையில் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு வானிலையில் மாற்றம் சுமார் இரண்டு டிகிரி வரை வெப்ப நிலை அதிகரித்து இருக்கிறது. இது 2 முதல் 3 நாட்கள் என்ற அளவில் அதிகரித்துள்ளதாக அண்ணா பல்கலை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கார்பன் டை ஆக்ஸைடு: மேலும், உலக அளவில் வெப்பநிலையை இரண்டு டிகிரி செல்சியஸ்க்குள் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என உலக நாடுகள் ஒப்பந்தம் மேற்கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதனை தாண்டி அதிகரித்து வந்திருக்கிறது. தட்பவெப்ப நிலை தொடர்ந்து அதிகரிப்பதற்கு காரியமில வாயுவின் அளவு அதிகரித்திருப்பதை காரணம் எனக் கூறப்படுகிறது. 1980ஆம் ஆண்டில் 270 என்ற அளவில் இருந்த காரியமில வாயுவின் அளவு தற்போது 430 அதிகரித்து இருக்கிறது என அண்ணா பல்கலைக்கழக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
என்ன காரணம்?: பெட்ரோல் டீசல் உள்ளிட்டவற்றின் அதிகரிக்கும் பயன்பாடு, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்டவை கார்பன் டை ஆக்சைடு அளவை அதிகரித்ததாகவும் இதனால் ஆக்சிஜன் குறைந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் மரங்கள் அதிக அளவில் வெட்டப்பட்டதும் காடுகளின் பரப்பு குறைந்ததும் இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு இடங்களில் தட்பவெப்பநிலையின் அளவை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருதும், நிலையில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியது அவசியம் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் கொரியன் ஜோசப் தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்!











Click it and Unblock the Notifications