பழனி தண்டாயுதபாணி கோவில் உதவியோடு புதிய சித்த மருத்துவ கல்லூரி- பட்ஜெட்டில் அறிவித்த பிடிஆர்
சென்னை: பழனி தண்டாயுதபாணி கோயில் மூலம் புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு, சித்தர்களின் அறிவாற்றலுடைய தொன்மைவாய்ந்த மருத்துவ முறையான சித்தமருத்துவம் மேம்படுத்தப்படும் என்று தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
பட்ஜெட்டில் இதுகுறித்து அவர் கூறியதாவது: 100 கோயில்களில் ரூ.100 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெறும், அர்ச்சகர் பயிற்சி பள்ளிகள் புதுப்பிக்கப்படும். பள்ளிகளில் மனப்பாட முறைக்கு மாற்றாக சிந்திக்கும் முறைப்படி பாடங்கள் கற்பிக்க நடவடிக்கை. சுற்றுலாத்துறைக்கு 187 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

திருக்கோயில்களை நிர்வகிக்க பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள், இந்த ஆண்டு 100 திருக்கோயில்களில் திருத்தேர், திருக்குளம், நந்தவனம் ஆகியவற்றை சீரமைக்கும் திருப்பணிகள் ரூபாய் 100 கோடியில் செயல்படுத்தப்படும்.
போதிய நிதி வசதி இல்லாத 12959 திருக்கோவில்களில் ஒரு கால பூஜை திட்டத்தை செயல்படுத்த உதவும் வகையில் 130 கோடி ரூபாய் நிலை நிதி ஏற்படுத்தப்படும். பழனி தண்டாயுதபாணி கோயில் மூலம் புதிய சித்த மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்டு, சித்தர்களின் அறிவாற்றலுடைய தொன்மைவாய்ந்த மருத்துவ முறையான சித்தமருத்துவம் மேம்படுத்தப்படும்.
பெற்றோர் இருவரையும் இழக்க ஒவ்வொரு குழந்தைக்கும் ஐந்து லட்ச ரூபாய் தொகை வழங்கப்படும் எனவும் ஏழை குடும்பத்தில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்தார் குழந்தைகளுக்கான கல்வி செலவு முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும் 95.96 கோடி ரூபாய் நிதி உதவியாக வழங்கப்பட்டது.
Recommended Video
பல மாவட்டங்களில் எடை குறைவு மற்றும் மெலிந்த தன்மையுடைய குழந்தைகளின் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது கவலை அளிக்கிறது அதன்படி குழந்தைகள் பருவத்தில் உன்னைத்தான் குழந்தைப்பருவ நலனை உறுதிப்படுத்தும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி மையங்களில் தரத்தை உயர்த்துவதற்காக சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications