லக்கி பாஸ்கர் சம்பவம்.. சிம்பிளா தான் வந்தாங்க! வாங்குனது 4.50 கோடி காரை மட்டும் இல்ல.. அவங்க ஆணவத்த!
பெங்களூர்: லக்கி பாஸ்கர் படத்தில் வருவது போல மிக எளிமையாக உடை அணிந்த ஒரு குடும்பம் லம்போர்கினி ஷோரூமுக்கு சென்றது. ஆனால் திரும்ப வரும்போது உலகின் மிக அதிக மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் கார் உடன் வெளியே வந்தது. தற்போது அந்த குடும்பம் தான் இந்தியா முழுக்க சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் லக்கி பாஸ்கர் படம் வெளியானது. படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதற்கு காரணம் அந்த படத்தின் கதைக்களம் தான். ஒரு எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு எப்படி செல்கிறார் என்பது தான் கதை.
வங்கி மோசடி பின்னணியில் ஒரு சாதாரண இளைஞனின் பரிதவிப்பு ஒட்டுமொத்த குடும்பத்தின் பாரத்தையும் தாங்கி நிற்கும் இளைஞனாக லக்கி பாஸ்கர் கேரக்டரில் துல்கர் சல்மான் கலக்கி இருப்பார்.

அந்த படத்தில் ஒரு காட்சி வரும் நகைகள் வாங்க கடைக்குச் சென்றபோது அவர்களை நடை உடையை பார்த்த கடைக்காரர் ஏளனமாக பேசுவார். தொடர்ந்து துல்கர் சல்மான் கார் ஷோரூம் ஒன்றுக்குச் சென்று மிக விலை உயர்ந்த டொயோட்டா காரை வாங்கிக்கொண்டு ஆடம்பர உடை அணிந்து மீண்டும் அதே நகைக்கடைக்கு வருவார்.
அப்போது அங்கு இருப்பவர்கள் அவரை பார்த்து மிரண்டு போவார்கள். அப்போது சொல்வார் துல்கர் சல்மான்," மிடில் கிளாஸ் மென்டாலிட்டி சார்.. எங்க கிட்ட பணம் இருந்தா பயங்கரமா செலவு பண்ணுவோம்" என்று.. உண்மையில் அப்படித்தான் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. சாதாரண உடை, எண்ணை தேய்த்து வகிடு எடுத்த தலை என சாதாரண உடை அணிந்து ஒரு குடும்பம் கர்நாடகாவில் லம்போர்கினி ஷோரூமுக்கு சென்றனர். ஷோரூம் ஊழியர்கள் அவர்களை ஏளனமாக பார்த்தனர்.
ஆனால் அவர்கள் வெளியே வந்த போது உலகின் மிக அதிக விலை கொண்ட காரோடு வெளிவந்தார்கள். அவர்கள் வாங்கியது 4 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லம்போர்கினி ஹூராகேன் ஸ்ட்ரெட்டாவை. அதுவும் சிங்கிள் பேமெண்டில். சொல்லை விட செயல் முக்கியம் எனச் சொல்வார்கள். அதற்கு இந்த குடும்பம் தான் சாட்சி. விலை உயர்ந்த காரை வாங்கிய போதும் அவர்கள் எந்தவித பந்தாவையும் காட்டிக் கொள்ளவில்லை. மேலும் சாதாரணமாக ஒரு இடத்தில் நின்று அந்த காரை டெலிவரி எடுத்துச் சென்றுள்ளார்கள்.
உண்மையில், அந்த காரின் பெருமையை கேட்டால் மிரண்டு போவீர்கள்.. 2022-ல் உலகளவில் அறிமுகமான இந்த லாம்போர்ஜினி ஸ்ட்ரெட்டோ, ஹூராகேன் மாடலின் ஆஃப்ரோட் அடாப்டேஷன் மாடல் ஆகும். ஆனாலும், 2023-ல் முதல் வாடிக்கையாளர்களிடம் இது டெலிவரி செய்யப்பட்டது. உலகம் முழுக்க மொத்தம் 1,499 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன, இதில் இந்தியா முழுக்க வெறும் 15 யூனிட்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த காரில் 5.2 லிட்டர் நேச்சரல்லி அஸ்பிரேட்டட் V10 என்ஜின் உள்ளது. இது 601 bhp பவர் மற்றும் 560 Nm டார்க் உற்பத்தி செய்யும். 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் மற்றும் எலெக்ட்ரானிக் ஆல்-வீல் டிரைவ் வசதியும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக் -
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்?












Click it and Unblock the Notifications