சேத்த வாரி அடிக்கிறீங்க.. சினிமா காரங்கனா உங்களுக்கு மட்டமா? பிரஸ் மீட்டில் வெடித்து சீறிய கல்பனா.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரபல பாடகியான கல்பனா தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவலாக பரபரப்பு நிலவியது. இந்த நிலையில் தூக்க மாத்திரையை அதிகமாக எடுத்துக் கொண்டதால் மயக்கம் அடைந்ததாக அவர் விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் சினிமாக்காரர் என்பதால் தன் மீது சேற்றை வாரி அடிக்கிறார்கள் எனவும் தான் மயங்கி நிலையில் இருந்த போது கூட போர்வையை விலக்கி விட்டு போட்டோ எடுத்ததாக குற்றம் சாட்டி உள்ளார்.

சினிமாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடி பிரபலமானவர் கல்பனா. தற்போது சில சேனல்களில் பாட்டு போட்டிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். தற்போது தனது கணவர் உடன் ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

Kalpana cinema chennai

இந்த நிலையில் கடந்த சில இடங்களுக்கு முன்பு அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்ட நிலையில் வீட்டில் மயங்கி கிடந்த அவரை அருகில் இருந்தோர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயன்றார் என வதந்தி பரவியது.

தொடர்ந்து சிகிச்சை பிறகு வீடியோ வெளியிட்ட அவர் தான் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாகவும், மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளை அதிக அளவில் எடுத்துக் கொண்டதால் மயக்கமடைந்ததாக கூறியிருந்தார். மேலும் தன்னைக் குறித்தும் தனது கணவர் குறித்தும் சமூக வலைதளங்களில் தவறான வதந்தி பரப்பி வருவதாகவும், தான் உயிரோடு இருப்பதற்கே தனது கணவர் தான் காரணம் என பேசி இருந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சென்னையில் சந்தித்து பேசினார் கல்பனா," அப்போது பேசிய அவர் நடந்து முடிந்த சம்பவங்களால் எனக்கு நெகட்டிவ் பப்ளிசிட்டி தான் கிடைத்திருக்கிறது. நான் தற்கொலைக்கு முயற்சிக்கவே இல்லை. மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பல பிரச்சினைகள் இருக்கிறது. 45 வயதாகும் நிலையில் மெனோபாஸ் கட்டத்தை நெருங்கி வருகிறேன். ஒரு பெண் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல பிரச்சினைகளை சுமந்து கொண்டிருக்கிறார் என்பதை யாரும் புரிந்து கொள்ளவே இல்லை.

ஒரு நல்ல செய்தி 100 பேரிடம் சேர்கிறது என்றால் கெட்ட செய்தி ஆயிரம் பேரை சேருகிறது. தற்போது நான் சட்டப்படிப்பு படித்து வருகிறேன். நுரையீரல் பிரச்சனை இருக்கிறது. இடையே எனது சினிமா கேரியரையும் கவனித்து வருகிறேன். எனது கணவர் தான் என்னை ஆதரிக்கிறார். பல வருடங்களாக உடல் ரீதியான பிரச்சனை இருப்பதால் தூக்கமின்மை பிரச்சனை உள்ளது. அதற்காக வழக்கத்திற்கு மாறாக அதிக டோஸ் மாத்திரை எடுத்துக் கொண்டதால் மயக்கம் வந்து விட்டது.

எனது கணவருடன் பேசும் போது தான் நான் மயங்கி விழுந்தேன். உடனே அவர்தான் போலீசுக்கும் ஆம்புலன்ஸ்க்கும் போன் செய்து என்னை காப்பாற்றினார். ஆனால் அதற்குள்ளாக எங்களை பற்றி தவறான செய்திகள் பரப்பப்பட்டது. மீடியாக்கள் கூட என்னை குறித்து தவறான செய்திகளை பரப்பினார்கள். மயங்கிய நிலையில் இருந்த எனது முகத்தை இருந்த போர்வையை விலக்கி போட்டோ வீடியோ எடுத்துள்ளார்கள்.

சினிமாக்காரர்கள் என்பதால் எங்கள் மீது சேற்றை வாரி அடிக்கிறார்கள். காதில் கேட்க முடியாத விஷயங்கள் நடக்கிறது. நாட்டில் நடக்கும் தவறுகளை பற்றி செய்தி போடாமல் தனிப்பட்ட சிலரின் செய்திகளை போடுகிறார்கள். தவறான செய்திகளை யூ டியூப் சேனல்கள் பதிவிட்டார்கள். இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது. ஏன் சினிமா துறையைச் சேர்ந்தவர்களை மட்டமாக பார்க்கிறீர்கள். முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஒன்றே ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். ஊடகங்கள் யூடியூபில் தவறான தகவல் பரப்புவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+