ஓட்டு போட மட்டும்தான் வாக்காளர்களா? அதிமுகவை லோக்சபாவில் இருந்தே காலி செய்த ஒற்றை வாக்காளர் மிலானி!
சென்னை: இந்திய ஜனநாயக களத்தைப் பொறுத்தவரை தேர்தலில் வாக்களிப்பது மட்டுமே வாக்காளரின் உரிமை அல்ல, ஒரு வாக்காளர் நினைத்தால், ஒரு எம்.பியின் பதவியையே பறிக்க முடியும் எனக் காட்டியிருக்கிறது தேனி எம்.பி ரவீந்திரநாத் தேர்தல் வழக்கில் ஐகோர்ட் இன்று வெளியிட்டுள்ள தீர்ப்பு.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓபி ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். அவர் தனது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளார் என்றும், எனவே தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்க கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் இந்த தேர்தல் வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும், வழக்கை விசாரணைக்கு ஏற்கக்கூடாது என்றும் ரவீந்திரநாத் நிராகரிப்பு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அப்போது ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என நீதிபதி சுந்தர் உத்தரவிட்டார்.
ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பின் மூலம், மக்களவையில் எம்.பி இல்லாத கட்சியானது அதிமுக. 2019 மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு வேட்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என தீர்ப்பளிக்கப்பட்டிருப்பதன் மூலம், அதிமுகவுக்கு லோக்சபாவில் இடமே இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தேனி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை, 76,319 ஓட்டுகள் வித்தியாசத்தில் ரவீந்திரநாத் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, 4 ஆண்டுகளுக்கும் மேலாக எம்.பியாக இருந்த நிலையில், அதே தொகுதியைச் சேர்ந்த வாக்காளரான மிலானியின் ஒற்றை மனுவால் அவரது எம்.பி பதவி பறிபோயுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா? -
தூய சக்தி என்றால் 3 எம்.எல்.ஏக்களையும் கட்சியை விட்டு நீக்கணும்.. விஜய்க்கு அன்புமணி வைத்த வேண்டுகோள் -
சிவி சண்முகத்துக்கு அடுத்த அடி. 5 அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடிக்கு ஆதரவு.. யார் இவர்கள்? லிஸ்ட் -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
உதிருது இரட்டை இலை! 4 இல்ல.. 10 பேர்! தவெகவுக்கு தாவும் 6 சமஉ.க்கள்? தனிப்பெரும்பான்மை நோக்கி விஜய் -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்!












Click it and Unblock the Notifications