தட்டித் தூக்கிருச்சே சிவகாசி.. மாஸ் காட்டிட்டாங்கப்பா! கோடியில் புரண்ட வியாபாரம்! எவ்வளவு தெரியுமா?
சென்னை: நடப்பாண்டில் சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் நாடு முழுவதும் ரூ.7,000 கோடிக்கு விற்பனை. இந்தியாவின் பட்டாசு தேவையில் 90% சிவகாசி பங்களித்துள்ளதாவும், மூலப்பொருட்கள் விலை உயர்வால் உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்ட போதிலும் இந்த இலக்கு எட்டப்பட்டுள்ளதாக பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 2027ல் ரூ.10,000 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
தீபாவளி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகள் தான். தரையிலும் வானிலும் வர்ணஜாலம் காட்டும் பட்டாசுகளை விரும்பாதவர்களே இருக்க முடியாது. புத்தாடை அணிந்து, இனிப்புகள் உண்டு, பட்டாசு வெடிப்பதே ஒரு வகை ஆனந்தம் தான்.

தீபாவளிக்கு முதல் நாள் பட்டாசுகளை வாங்கி தீபாவளி அன்று வெடித்து மகிழ்வது ஒரு தனி சுகம். தமிழகத்தை பொறுத்தவரை சிவகாசியில் தான் அதிக அளவில் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் சுமார் 10,000 கோடி அளவுக்கு தீபாவளிக்காகவும் பிற பண்டிகைகளுக்காகவும் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது.
தீபாவளி பட்டாசு
இங்கு உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளில் 10% தமிழ்நாட்டிலும், 90 % பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை வட மாநில பண்டிகைகளுக்காக தயார் செய்யப்பட்டு செல்கின்றன சிவகாசி பட்டாசுகள். ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய நான்கு மாதங்கள் தீபாவளிக்கு என்று பிரதியேகமாக பட்டாசு உற்பத்தி நடக்கிறது.
பேன்சி ரக பட்டாசுகள்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் பேன்சி ரக பட்டாசுகள், வானில் வர்ணஜாலம் காட்டும் பட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த இரண்டு மாதங்களாக பட்டாசு உற்பத்தி சுணக்கம் ஏற்பட்டது. மூலப்பொருள் விலை உயர்வும் இதற்கு ஒரு காரணமாக இருந்தது.
தீபாவளி பண்டிகை
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 40% பட்டாசு உற்பத்தி குறைந்தது. இந்த நிலையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பேன்சி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு சென்றது. அது மட்டுமல்லாமல் சாட்டை, ராக்கெட், அணுகுண்டு, ஷாட் வெடிகள், இரவு நேரத்தில் குழந்தைகள் வெடிக்கும் கம்பி மத்தாப்புகள், சரவெடிகள், கலர் கலர் வெடிகள் தயாரிக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக விற்பனைக்கு வைக்கப்பட்டது.
ரூ.7000 கோடி வர்த்தகம்
ஏராளமானோர் நேரடியாகவே சிவகாசிக்கு சென்று பட்டாசுகளை கொள்முதல் செய்தனர். இந்த நிலையில் இந்த ஆண்டு பட்டாசு விற்பனை குறித்து தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர் பட்டாசு உற்பத்தியாளர்கள். அதாவது இந்த ஆண்டு மட்டும் 7000 கோடிக்கு சிவகாசியில் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் விற்பனையாகி உள்ளன. இதில் பெரும்பாலும் தமிழகத்தில் தான் இந்த இலக்கு எட்டப்பட்டிருக்கிறது.
பட்டாசு உற்பத்தியாளர்கள்
இந்தியாவின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையையும் சிவகாசி தான் பூர்த்தி செய்துள்ளது. இந்தியா முழுவதும் விற்பனையான பட்டாசுகளில் கிட்டத்தட்ட 90 சதவீத பட்டாசுகள் சிவகாசியில் தயாரிக்கப்பட்ட விழா ஏற்கனவே பட்டாசு தயாரிப்புக்கு உச்ச நீதிமன்றம் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில், அதனை பின்பற்றி பட்டாசுகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு சுமார் 10,000 கோடிக்கு பட்டாசு விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சொல்கின்றனர் பட்டாசு உற்பத்தியாளர்கள்.


Click it and Unblock the Notifications
