மாணவிகளுடன் நடனம் ஆடும் சிவசங்கர் பாபா.. வைரலாகும் வீடியோவால் பரபரப்பு!
சென்னை: கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார்களை அங்கு படித்த மாணவிகள் கூறி வரும் நிலையில் அவர் பொது இடத்தில் மாணவிகளுடன் நடனம் ஆடும் வீடியோ வைரலாகி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருகிறார் சிவசங்கர் பாபா. இவர் தன்னை கிருஷ்ணன் என கூறி கொண்டு மாணவிகளிடம் அத்துமீறி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இவர் மீது மாணவிகள் கூறும் புகார்கள் அதிர வைக்கின்றன. மாணவிகளுக்கு முத்தம் கொடுப்பது, கட்டிப்பிடிப்பது உள்ளிட்ட அட்டூழியங்களை நிகழ்த்தியுள்ளாராம்.

பாபா
தன்னை கடவுளின் அவதாரம் என்றே கூறும் பாபா, தன்னை கிருஷ்ணர் என கூறும் இந்த பாபா, மாணவிகளை கோபிகா என கூறி பாலியல் கொடூரங்களை நடத்தி வந்துள்ளார். மேலும் வலுக்கட்டாயமாக மாணவிகளை செக்ஸ் படங்களை பார்க்க வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுகின்றன.

10ஆம் வகுப்பு
9ஆம் வகுப்பு மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு குளிர்பானத்தில் மதுபானங்களை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததை தான் கண்ணால் பார்த்ததாகவும் புகார் அளித்த மாணவி கூறியுள்ளார். இந்த பிரச்சினை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நடவடிக்கை
இவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் எழுகின்றன. இந்த நிலையில் போலி ஆன்மீகவாதி சிவசங்கர் பாபா மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன்? என கேட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். எனவே தற்போது மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் ஆசிரியர் கைதானது போல் இவரும் கைது செய்யப்படுவார் என தெரிகிறது.
|
பாலியல் புகார்
இந்த பாலியல் புகார்களுக்கு மத்தியில் சிவசங்கர் பாபா மாணவிகளுடன் நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. அதில் நடுவில் பாபா நின்றுக் கொண்டு மாணவிகள் புடைச்சூழ நடனமாடுகிறார். பொதுவெளியில் இவர் ஆடும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications