"குட்டி சாவக்கர்".. மோடி "இதுக்கு" மட்டும் அதிகம் பயன்படுகிறார் போல.. பாய்ந்து வந்த ஓவைசி.. அட்டாக்!
சென்னை: பாஜகவில் இருந்து நுபுர் சர்மா நீக்கப்பட்ட நிலையில், பிரதமர் மோடியை அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் ஓவைசி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை நேரடியாக இகழ்ந்து, சில அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பேசி இருந்தார்.
அவரின் இந்த பேச்சு உலகம் முழுக்க கடும் விமர்சனங்களை சந்தித்தது.

விமர்சனம்
நுபுர் சர்மா பேச்சை கத்தார், ஈரான் உள்ளிட்ட நாடுகள் பல கடுமையாக கண்டித்து இருந்தன. அதோடு கத்தார் சார்பாக இந்தியாவிற்கு சம்மனும் அனுப்பப்பட்டது.. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் இந்த விவகாரத்தை கத்தார், ஈரான் உள்ளிட்ட நாடுகள் விடவில்லை. இந்தியா இதற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கூறியது.

இந்தியா விளக்கம்
இதற்கு இந்தியா அளித்த விளக்கத்தில், கத்தாரின் சம்மனை தொடர்ந்து இந்தியா சார்பாக கத்தார் அரசிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இவர்களின் கருத்துக்கும் இந்திய அரசின் நிலைப்பாட்டிற்கு தொடர்பு இல்லை. இவை கலகத்தை ஏற்படுத்தும் (fringe element) நபர்களின் கருத்துக்கள்தான். ஏற்கனவே அந்த கருத்துக்களை தெரிவித்த நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. அதேபோல் அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்றும் அறிக்கை வெளியிடப்பட்டுவிட்டது என்று இந்திய அரசு விளக்கம் அளித்தது

என்ன சொன்னார்
இந்த நிலையில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சியின் தலைவர் ஓவைசி தெரிவித்துள்ள, கலக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று மத்திய அரசால் கூறப்பட்டவர்கள்தான் பாஜக சார்பாக மெயின் ஸ்ட்ரீம் மீடியாவில் வருகிறார்கள். இவர்களுக்கு அமித் ஷாவிடம் இருந்தே நேரடி ஆதரவு உள்ளது. இதனால்தான் போலீஸ் இன்னும் நுபுரை கைது செய்யவில்லையா? அவரை கட்சியில் இருந்து நீக்கியது எல்லாம் பித்தலாட்டம். அரசின் ஆதரவோடு இந்த "குட்டி சாவக்கர்கள்" செயல்படுகிறார்கள்.
Recommended Video

ஓவைசி கமெண்ட்
இந்த இனப்படுகொலை கும்பல் ஏற்கனவே தண்டிக்கப்பட்டு இருந்தால், பாஜக நிர்வாகிகள் நபிகள் நாயகத்தை இகழ்ந்து பேசி இருக்க மாட்டார்கள். இந்தியாவில் உள்ள 20 கோடி இஸ்லாமியர்களின் மத நம்பிக்கைகள் உள்ளன. அவர்களின் பிரச்சனைகளை பற்றி மோடி பேசவில்லை. மாறாக அவர் வெளிநாட்டின் அழுத்தத்திற்கு மட்டும் அதிகம் பயன்படுகிறார். மிகவும் துரதிர்ஷ்டவசமானது இது என்று, ஓவைசி கமெண்ட் செய்துள்ளார்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications