Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை சிக்னல்கள் அடியோடு மாறுதே.. வருகிறது ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம்.. ரோல் மாடல் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் நாட்டிலேயே முதன் முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. இந்தியாவின் ஜிடிபிக்கும் பெரிய அளவில் தமிழ்நாடு பங்கு வகிக்கிறது. மருத்துவ ரீதியாக, பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு முதுகெலும்பாகவும் தமிழ்நாடு உள்ளது.

தமிழ்நாட்டில் முக்கியமாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என்று ஒவ்வொரு மாவட்டமும், மண்டலங்களும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை பெற்றுள்ளது. தமிழ்நாடு முக்கியமாக ஆட்டோமொபைல் துறையிலும் மருத்துவ துறையிலும் சிறந்து விளங்கி வருகிறது. இந்தியாவின் மருத்துவ தலைநகர் சென்னை என்று அழைக்கப்படும் அளவிற்கு மருத்துவ துறைக்கு தமிழ்நாடு மிகப்பெரிய முக்கியத்துவத்தை கொடுத்து உள்ளது.

Chennai to introduce smart ambulance in the signals: What it is?

தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்பு வசதிக்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு சென்னைக்கு தினம் தினம் வரக்கூடிய பயணிகள்தான். தமிழ்நாட்டில் மருத்துவ துறை, மருத்துவ சேவை, மருத்துவத்தில் புதிய கண்டுபிடிப்புகள், மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை என்று அனைத்திலுமே நம்பர் 1 இடத்தில் உள்ளது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் என்று திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி இந்த திட்டம் அமலுக்கு வந்தது. பயனாளிகள் இல்லங்களுக்கு சென்று மருந்து சேவைகள் வழங்கும் இந்த திட்டம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பல்வேறு பொதுவான நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இந்த மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகின்றது.

சிறுநீரக பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கு மருந்து வழங்குதல் போன்ற பல்வேறு மருத்துவ சேவைகள் இந்த திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. நேரடியாக வீட்டிற்கே சென்று நோயாளிகளை கண்காணிப்பது, அவர்களுக்கு தவறாமல் இலவச மருந்து வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இந்த திட்டம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழ்நாட்டில் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த திட்டம் மூலம் பயன் அடைந்துள்ளனர்.

ஸ்மார்ட் ஆம்புலன்ஸ்: இந்த திட்டத்தின் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் முதியவர்களின் வீடுகளுக்கே சென்று மருந்துகளை வழங்குவார்கள். இந்த நிலையில்தான் மருத்துவ துறையில் அடுத்த சாதனையாக தமிழ்நாட்டில் நாட்டிலேயே முதன் முறையாக ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சிக்னலில் ஆம்புலன்ஸ் அதிக நேரம் நிற்பதை தவிர்க்க இந்த முறை கொண்டு வரப்பட்டு உள்ளது. அதன்படி அவசரகால ஆம்புலன்ஸ் வரும்போது சிக்னலில் எச்சரிக்கை செய்யும் புதிய தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

சென்னையில்தான் முதற்கட்டமாக 16 சிக்னல்களில் 25 ஆம்புலன்ஸ் சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 40 சிக்னலில் இந்த சேவையை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Chennai to introduce smart ambulance in the signals: What it is?

ஆம்புலன்ஸ் அபராதம்: தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. பல்வேறு குற்றங்களுக்கான, விதி மீறல்களுக்கான அபராத தொகைகள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆம்புலன்சுக்கு வழிவிடாமல் இருப்பது மிகப்பெரிய குற்றம். இது எந்த வாகனமாக இருந்தாலும் அந்த அபராதம் பொருந்தும்.

தீயணைப்பு வண்டி, அவசர வாகனங்களுக்கு வழிவிடவில்லை என்றாலும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தேவையின்றி ஹார்ன் அடித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். ஆபத்தான முறையில் வண்டி ஓட்டினால் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+