சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொழில் துறையில் ஸ்மார்ட் மாநிலம்..விரைவில் நம்பர்.1 ஆக தமிழகத்தை மாற்றுவோம்..முதல்வர் ஸ்டாலின் உறுதி

மேட் இன் தமிழ்நாடு என தயாரிக்கப்பட்ட பொருட்கள் உலகம் முழுவதும் சென்று சேர வேண்டும் எனறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரமாக மாற்றுவதே இலக்கு என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேட் இன் தமிழ்நாடு என தயாரிக்கப்பட்ட பொருட்கள் உலகம் முழுவதும் சென்று சேர வேண்டும் எனறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு அரசின் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்து பெரிய நிறுவனங்கள் முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

Recommended Video

    தமிழ்நாட்டில் குவியும் முதலீடுகள்... Investment Conclave மூலம் கிடைத்த பலன் *Tamilnadu

    தமிழ்நாட்டில் தொழில் தொடங்கும் நடை முறைகளை எளிமைப்படுத்திய தொழில் துறை அமைச்சர் மற்றும் அவரது குழுவினருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்கள். முதலீடு செய்வதற்கான சிறந்த மாநிலங்கள் பட்டியலில், 14வது இடத்தில் இருந்து 3வது இடத்தை தமிழ்நாடு அடைந்துள்ள நிலையில், தொழில் தொடங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்திய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது குழுவினரை பாராட்டுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

    சென்னை மட்டுமா! கோவை, ஓசூரில் குவிந்த சென்னை மட்டுமா! கோவை, ஓசூரில் குவிந்த "மாஸ்" முதலீடுகள்.. ரூ 1.25 லட்சம் கோடி.. இனி வேற லெவல்தான்!

    சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் தலைமையில் நடைபெறும் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் 60 ஒப்பந்தகள் கையெழுத்தாகி உள்ளன. இந்த நிகழ்ச்சியில் 21 புதிய தொழில் திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இது தவிர 12 முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து பேசினார்.

    ஸ்மார்ட் மாநிலம்

    ஸ்மார்ட் மாநிலம்

    தமிழகத்தை ஸ்மார்ட் மாநிலமாக மாற்றுவதுதான் அரசின் நோக்கமாகும். தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 3வது இடத்தில் உள்ளது வரலாற்றுச்சாதனை என்று குறிப்பிட்டார்.
    கடந்த 2020ஆம் ஆண்டு தொழில் தொடங்க சிறந்த மாநிலங்களின் பட்டியலில் 14வது இடத்தில் இருந்த தமிழகத்தை 3வது இடத்திற்கு கொண்டு வந்துள்ளோம். விரைவில் முதலிடத்தில் வருவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம்.

     74898 நபர்களுக்கு வேலை

    74898 நபர்களுக்கு வேலை


    பள்ளிக்கல்வி பயின்றவர்களுக்கு அதிக வேலை வாய்ப்பை அளிக்கும் திட்டத்தை உருவாக்கியுள்ளோம். நான் முதல்வன் திட்டத்தின் குறிக்கோள்களை அடைய இன்போசிஸ் நிறுவனத்துடன் இணைந்து அரசு பணியாற்றுகிறது.
    இன்றைய தினம் 60 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 74898 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சொன்னதை செய்து வருகிறோம்.

     புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

    புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்


    21 திட்டங்களுக்கு இன்றைய மாநாட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. இன்றைய தினம் அடிக்கல் நாட்டப்பட்டு 20 திட்டங்களில் திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள். புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்ட உடன் கடமை முடிந்து விடுவதில்லை.

    மிகப்பெரிய மாநாடு

    மிகப்பெரிய மாநாடு

    இது மிகப்பெரிய மாநாடு. இதைப்பெரிய மிகப்பெரிய மாநாடு நடைபெறும். தொழில் துறையில் சிறந்த தமிழகமாக வளர வேண்டும். என்ன வளம் இல்லை இந்த தமிழ்நாட்டில் என்று கேட்கும் நிலை மாற வேண்டும். எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி முன்னேறுவோம் என்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    English summary
    Chief Minister Stalin has said that the goal is to make Tamil Nadu a trillion dollar economy. Chief Minister M.K.Stalin has said that products made in Tamilnadu should go all over the world. Chief Minister M. K. Stalin also said that it is gratifying that big companies have come forward with great faith in the Tamil Nadu government.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X