கியாரே.. செட்டிங்கா? கேலி, கிண்டலுக்குள்ளான பாஜக தலைவர் அண்ணாமலை படகு பயணம்
சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று படகு மூலம் பயணம் செய்து வெள்ள பாதிப்புகளை பார்வையிட சம்பவம் சமூகவலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி உள்ளது.
இதற்கு காரணம் அது ஒரு போட்டோ ஷூட் மாதிரி எடுக்கப்பட்டது என்பதுதான்.
சென்னை வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை கடந்த 3 நாட்களாக முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகிறார். இதற்காக அவர் ஜீப் ஒன்றை பயன்படுத்துகிறார். செல்ல வேண்டிய இடத்திற்கு ஜீப் வாகனத்தில் சென்று பிறகு வாகனத்தில் இருந்து இறங்கி நடந்து சென்று மக்களை சந்திக்கிறார்.

அண்ணாமலை விசிட்
மழைக் கோட் அணிந்தபடி, ஸ்டாலின் தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளார். இதேபோன்று பல அமைச்சர்களும் சென்னையின் பல பகுதிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகி கரு.நாகராஜன் ஆகியோர் இன்று முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்றனர். அப்போது படகு ஒன்றில் அவர்கள் ஏறி இருந்த படி மக்களிடம் அங்குள்ள நிலவரத்தை கேட்டறிந்தனர். ஆனால் இது போட்டோஷூட் மாதிரியில் எடுக்கப்பட்டுள்ளது.

செட்டிங் செய்து வீடியோ
விடியோகிராஃபர் பேசும் காட்சிகள் உடன் அந்த வீடியோ வெளியானதால் சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கு உள்ளாகி வருகிறது. பின்னால் இருக்கக்கூடிய சிலரை வீடியோ எடுப்பவர் விலகிச் செல்லுமாறு கேட்டுக் கொள்கிறார். பின்னணியில் யாரும் இல்லாத மாதிரி எடுக்க வேண்டும்.. அண்ணே எல்லோரும் இப்படி வந்துருங்க அண்ணே.. என்று வீடியோகிராபர் பேசுவது அப்போது கேட்கிறது. மேலும் கேமரா ஆங்கிள் எந்த இடத்தில் கட் செய்யப்பட வேண்டும் என்பதையும் வீடியோகிராபர் பேசுகிறார். பிறகு வீடியோகிராபர் எந்த மாதிரி சொல்கிறாரோ அந்த மாதிரி படகில் இருப்பவர்கள் மற்றும் படகை சுற்றியிருப்பவர்கள் நடந்து கொள்கின்றனர்.

முழங்கால் அளவு தண்ணீர்
இந்த நேரத்தில் இரண்டு சிறுவர்கள் படகில் இருந்து சற்று தூரத்தில் நடந்து செல்கிறார்கள். அவள் முழங்கால் அளவுக்கு தான் தண்ணீர் இருக்கிறது. வீடியோகிராபர் அந்த இருவரையும் சற்று தள்ளி நடந்து செல்லுங்கள் என்று கூறுகிறார். இதையெல்லாம் பார்த்துவிட்டு தான் சமூக வலைத்தளங்களில் கேலி கிண்டல் பதிவுகள் வெளியாக ஆரம்பித்துள்ளன .

அடுத்தடுத்த குற்றச்சாட்டுகள்
ஒரு பக்கம் திமுகவினர் போட்டோஷாப் செய்து நிவாரணப் பணிகள் செய்வது போல காட்டுவதாக பாஜக சமூக வலைத்தள ஆதரவாளர்கள் புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில் அண்ணாமலை சென்ற படகு பயணம் ஷூட்டிங் ஸ்பாட் போல மாற்றப்பட்டு வீடியோகிராபர் சொல்வது போல சுற்றி இருப்பவர்கள் நடக்கக்கூடிய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

குறைவான தண்ணீர்
நிவாரண பணிகள் நடைபெறும் இடங்களுக்கு தலைவர்கள் செல்லும்போது வீடியோ கிராபர்கள், புகைப்பட கலைஞர்கள் செல்வார்கள். அதை பதிவு செய்வார்கள். ஆனால் கேமரா ஆங்கிள், பின்னணி நபர்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் செட் போல செய்து எடுப்பது கிடையாது . எனவே தான் இது கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் 2 பேர் ஈஸியாக தண்ணீரில் நடந்து செல்வது இந்த வீடியோவில் இடம் பெற்றிருப்பதால் அதிக அளவுக்கு தண்ணீர் இல்லை என்பதும், இங்கு அண்ணாமலை நடந்தே செல்லலாம் எதற்காக படகில் சென்றார்கள் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்புகிறார்கள். முதலமைச்சரின் தொகுதி என்பதால் அரசியல் ரீதியாக முதலமைச்சரை கிண்டல் செய்வதற்காக படகில் சென்றிருப்பார்கள் போல. ஆனால் இப்போது அவர்களே கிண்டலுக்குள்ளாக்கப்பட்டு விட்டனர் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்துக்கள் கூறி வருகிறார்கள்.
-
3 மாதத்திற்குள் கட்சி லான்ச் ஆகும்.. பை-லாவை தயார் செய்யும் அண்ணாமலை.. மிகப்பெரிய முடிவு -
"மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்னா சேருவோம்" மக்கள் மேடை இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்! -
அதே டெய்லர்.. அதே வாடகை.. மரு மட்டும் ஒட்டிக்கொண்டு வந்த ஏமாற்று வேலை! விஜய் மீது அண்ணாமலை அட்டாக் -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
திடீர் ட்விஸ்ட்.. அண்ணாமலையுடன் கைகோர்க்க போகும் ராகவா லாரன்ஸ்? நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார்? -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications