மக்களே.. சென்னை மெரினா கடலில் அமையும் பிரமாண்டமான கருணாநிதி பேனா நினைவு சின்னம் இதுதானாம்!
கருணாநிதி பேனா நினைவு சின்னத்தின் மாதிரி வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு சின்னம் எப்படி இருக்கும் என்பது தொடர்பான வீடியோ ஒன்று கசமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. நடுக்கடலில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்த நினைவு சின்னம்தான் இப்போது சமூக வலைதளங்களில் பேசுபொருள்.

கருணாநிதியின் புகழை பறைசாற்றும் வகையில் சென்னை மெரினாவில் கடலில் கருணாநிதி பேனா நினைவு சின்னம் அமைக்கப்பட உள்ளது. பேனா நினைவு சின்ன பீடமானது 2,263 சதுர மீட்டர், நடைபாலமானது 2,073 சதுர மீட்டர், பின்னல் நடைபாலமானது 1856 சதுர மீட்டர் பரப்பளவில் என அமைக்கப்பட உள்ளது. மொத்தம் 8,551 சதுர மீட்டர் பரப்பளவில் கருணாநிதிக்கான பேனா நினைவு சின்னம் எழுப்பப்படுகிறது. இந்த நினைவுச் சின்ன பீடத்தில் கருணாநிதியின் பொன்மொழிகள் இடம்பெறும். கருணாநிதியின் நினைவிடத்தின் உள்ளே இருந்து கடலின் மேல் 360 மீட்டர் தூரம் நடந்து சென்று பேனா நினைவுச் சின்னத்தை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் பாலம் அமைக்கப்பட உள்ளது. ரூ.81 கோடியில் பொதுப்பணித் துறையால் அமைக்கப்படும் .

இந்த பேனா நினைவு சின்னம் தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட சிலர், மீனவர்கள் நலன், சுற்றுச் சூழலை முன்வைத்து பேனா நினைவு சின்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பெரும்பாலான மீனவர் சங்கங்கள் இந்த பேனா நினைவு சின்னம் அமையத்தான் வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
அதாவது தற்போது சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தின் பின்புறம் 290 மீ தூரத்துக்கும், கடற்கரையில் இருந்து 360 மீ தூரம், கடலில் 650 மீட்டர் தொலைவுக்கு பாலம் என்கிற அடிப்படையில் இந்த நினைவு சின்னம் அமைய இருக்கிறதாம். கடற்பரப்பில் இருந்து 6 மீட்டர் உயரத்தில் இது அமைக்கப்பட உள்ளது. கருணாநிதி பேனா சின்ன நினைவிடத்தில் ஒரே நேரத்தில் 300 பேர் அனுமதிக்கப்படுவர். சுற்றுச் சூழல் பாதிக்கப்படாத வகையில் இந்த கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறதாம்.

இந்நிலையில்தான் சமூக வலைதளங்களில் தமிழ்நாடு அரசு கட்ட உத்தேசித்துள்ள பேனா நினைவு சின்னம் மாதிரி இதுதான் என்கிற வீடியோ பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ தொடர்பான உங்கள் கருத்துகளை நீங்கள் கமெண்ட் பகுதியில் தெரிவிக்கலாம்.












Click it and Unblock the Notifications