மாறி மாறி சுழன்றடிக்கும் ‘ஆதரவு காற்று’ குழம்பி நிற்கும் ரர.க்கள்! சைலண்டாய் காய் நகர்த்தும் ‘தாமரை’
சென்னை : அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் டெல்லி மேலிடத்தின் ஆதரவு யாருக்கு என்று அடுத்தடுத்து குழப்பமான தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் சில நிர்வாகிகள் பாஜகவுக்கு தாவ திட்டமிட்டு இருப்பதாகவும் இதற்கான பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன..
பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றுள்ள நிலையில் ஒற்றை தலைமையாக அவர் தொடர்வாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் ஆரம்பத்தில் இருந்தே அவருக்கு குடைச்சல் கொடுத்து வரும் ஓபிஎஸ்.
முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா காலத்தில் அவர் எடுப்பதுதான் முடிவு, வைத்தது தான் சட்டம் என்ற ரீதியிலேயே அதிமுகவும் அதன் நிர்வாகிகளும் செயல்பட்டு வந்தனர்.

பாஜகவின் ஆதரவு
அவரது மறைவுக்குப் பிறகு பல்வேறு சிக்கல்களை இன்று வரை சந்தித்து வருகிறது. கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக அதிமுகவில் யார் பெரியவர் என்று அதிகார மோதல் இருந்து வந்தாலும் தற்போது அது உச்சத்தினை அடைந்திருக்கிறது. அதிமுகவின் ஒற்றை தலைமையாய் யார் பொறுப்பேற்க இருக்கிறார்கள் என்பதைவிட டெல்லி பாஜகவின் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதற்கான போட்டியை நிலவுகிறது.

எடப்பாடி ஏமாற்றம்
ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது டெல்லி செல்ல முடியாத நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தன் பிரிவு உபச்சார விழாவில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டதாகவும் ஆனால் அனுமதி அளிக்கப்படவில்லை என தகவல் வெளியான நிலையில் டெல்லி பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு திரும்பினார் என கூறப்பட்டது.

பிரதமர் மோடி
இந்த தகவலை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மறுத்த நிலையில் பிரதமரின் சென்னை வருகை மிக முக்கியத்துவம் பெற்றது. செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வந்திருந்தாலும் அதிமுகவை பொருத்தவரை அதிமுகவின் பிரச்சினைகளை மறைய வைக்கும் மந்திரக்கோல் பிரதமர் மோடி கையில் இருப்பதாகவே நம்பினர். சென்னை வந்தபோது எடப்பாடி பழனிச்சாமியையும் சென்னையிலிருந்து கிளம்பும்போது பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. அதன் பிறகு ஆதரவு காற்று எடப்பாடி பழனிச்சாமியை விட ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமாக வீசுவதாக கூறப்படுகிறது.

பின்னடைவுகள்
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள தேர்தல் ஆணையம் அனுமதி, உச்சநீதிமன்ற தீர்ப்பு, எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை, ஆதரவாளர் இல்லங்களில் வருமானவரித்துறை சோதனை என அடுத்தடுத்து எடப்பாடிக்கு பின்னடைவுகள் ஏற்பட்டது ஓபிஎஸ் தரப்புக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனால் 'மேல்' இடத்தின் ஆதரவு ஓபிஎஸ் இருக்கும் என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் முக்கிய நிர்வாகிகள் குழப்பம் அடைந்துள்ளனர்.

பாஜகவுக்கு தாவ திட்டம்?
அதே நேரத்தில் அதிமுக சட்ட விதிகள் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் பலம் ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது எடப்பாடி பழனிச்சாமியின் கையே ஓங்கி இருக்கிறது இதனால் ஓபிஎஸ் தரப்பில் இருப்பவர்களை எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தாவலாமா என ஆலோசித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் வெற்றி வாய்ப்பு யாருக்கு வந்தாலும் அவர் பக்கம் சென்று விடலாம் என ஒரு சில நிர்வாகிகள் மட்டும் நடுநிலை காத்து வந்தாலும் சிலர் பேசாமல் பாஜக பக்கம் தாவி விடலாமா என்று ஆலோசனையிலும் உள்ளனர் .
Recommended Video

தீவிர ஆலோசனை
கொங்கு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மூத்த நிர்வாகிகளும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நிர்வாகியும், மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று நிர்வாகிகளும் பாஜக தரப்புக்கு தாவ இருப்பதாகவும் இதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கி நடைபெற்று வருவதாக கூறுகின்றனர். அதே நேரத்தில் கட்சி தாவுவது குறித்து இதுவரை உறுதியான முடிவு எடுக்கப்படவில்லை என்றும், சாதக பாதக அம்சங்களை ஆராய்ந்து வருகின்றனர் அந்த நிர்வாகிகள்.
-
நிதிஷ் குமாருக்கே இந்த நிலைமை என்றால்.. ஊர்ந்து ஊர்ந்து போன எடப்பாடிக்கு? விட்டு விளாசிய உதயநிதி -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
தாமரை மலர்கிறது? மம்தாவுக்கு அதிர்ச்சி கொடுக்கும் பாஜக.. புதிய தேர்தல் சர்வேயில் மிக பெரிய ட்விஸ்ட்! -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
முழு கண்ட்ரோல்.. இனி பவர் ஐஏஎஸ்கள் கையில்! இன்று முதல் தேர்தல் விதிகள் அமல்! MCC என்றால் என்ன? -
டெல்டாவில்.. முக்கிய தொகுதியிலேயே அடிவாங்கும் திமுக.. சிக்கலில் பெரிய மீன்! இவருக்கே இந்த நிலைமையா? -
38 நாட்களில் தமிழ்நாட்டில் தேர்தல்.. இந்த விஷயங்களை மறக்காதீங்க! முடிவை தீர்மானிக்க போவதே இதான் -
சசிகலாவுக்கு விழுந்த பலத்த அடி.. அஇபுதமமுக ஆரம்பமே இப்படியா? காப்பாற்ற போகும் அந்த "பெரிய கை" யார் -
சீனியர்களை கழற்றிவிடும் பாஜக? தமிழகத்தில் புதுமுகங்களை களமிறக்க திட்டம்.. பின்னணியில் 3 காரணம் -
புதிய தமிழகம் கட்சிக்கு 2 சீட்.. அப்செட்டில் இருந்த நயினார் நாகேந்திரன்! நம்பிக்கையாக சொன்ன எடப்பாடி -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்!












Click it and Unblock the Notifications