நம்ம கட்சி நம்ம கெத்து! உற்சாக மோடில் எடப்பாடி! மீதம் இருக்கும் ‘அவங்களும்’ வர்றாங்களாமே? சரி தான்!
சென்னை : அதிமுகவில் பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் தங்கள் பக்கம் இருக்கும் நிலையில் ஓபிஎஸ் தரப்பில் இருந்து மேலும் சில நிர்வாகிகள் தங்கள் பக்கம் தாவ இருப்பதாக கிடைத்த தகவலால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Recommended Video
நல்லாத்தான போய்கிட்டு இருக்கு! என்ற ரீதியில் கடந்த நான்கு ஆண்டுகளாக அதிமுகவில் இருந்த உட்கட்சி விவகாரம் கடந்த மாதம் திடீரென வெடித்துக் கிளம்பியது பொதுக்குழு கூட்டம் தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்தது.
இதனை முதன் முதலில் பற்ற வைத்தவர் சாட்சாத் ஜெயக்குமார் தான் கட்சி அலுவலகத்திற்குள் பேசிய விவகாரத்தை பொதுவிளையில் போட்டு உடைக்க அதன் பிறகு ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓ பன்னீர்செல்வம் இடையே மோதல் வெடித்தது.

அதிமுக விவகாரம்
அன்றிலிருந்தே தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்ட ஓ பன்னீர்செல்வம் என்ன செய்வது என்பது குறித்து யோசித்து வந்தார். இதே போல எடப்பாடி தரப்பிலும் ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். நாளுக்கு நாள் இந்த விவகாரம் முற்றிய நிலையில் பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 16 இல் இருந்து 11ஆகவும் பிறகு வெறும் 6ல் என்ற எண்ணிக்கையாக குறைந்தது.

எடப்பாடி பழனிச்சாமி திட்டம்
கட்சியில் எடப்பாடி பழனிச்சாமிக்கு செல்வாக்கு இருப்பதை உணர்ந்த பல்வேறு நிர்வாகிகளும் அவர் பக்கம் தாவினர். இதையடுத்து 23ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தனித்தலைமை விவகாரம் தீர்ந்துவிடும் என நினைத்திருந்த நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடி பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவருக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர்களும் திரள ஆரம்பித்தனர். அது பொதுக்குழு கூட்டத்தில் வெளிப்படையாக வெடித்தது. கட்சியில் உயர்ந்த இடத்தில் வைக்கும் அழகு பார்க்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தை தண்ணீர் பாட்டில்கள் வீசி அவரது சொந்த கட்சி தொண்டர்களே விரட்டியதாக கூறப்பட்டது.

தீவிரம் காட்டும் ஓபிஎஸ்
அப்போதே பொதுக்குழு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் 21ஆம் தேதி மீண்டும் பொதுக்குழு நிறைவேற்ற நடைபெறும் எனவும் அப்போது ஒற்றைத் தலைமை குறித்த தீர்மானம் நிறைவேற்றப்படும் என எடப்பாடி தரப்பு ஆதரவாளர்கள் கூறினர். இதையடுத்து மீண்டும் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என தனக்கு கிடைத்த அஸ்திரங்களை எல்லாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இதனடையே தனது ஆதரவு வட்டத்தை மேலும் பலமாக்கிக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் தரப்பில் இருக்கும் நிர்வாகிகளை இழுக்கவும் திட்டம் தீட்டினார், அதற்கு பலனும் கிடைத்தது,

எடப்பாடி உற்சாகம்
ஓபிஎஸ் தரப்பில் இருந்த பொதுக்குழு நிர்வாகிகளில் மேலும் பலர் எடப்பாடி தரப்புக்கு தாவிய நிலையில் தற்போது அவர் பக்கம் இருக்கும் மாவட்ட செயலாளர்களை தங்கள் பக்கம் இழுக்க மூத்த முன்னாள் அமைச்சர்கள் குழு களமிறங்கியது. தற்போது தீவிரமாக நடந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருக்கும் மத்திய மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாவட்ட செயலாளரும் எடப்பாடிக்கு ஆதரவு தெரிவிக்க தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் பொதுக்குழுவுக்கு முன்னர் அதற்கான சந்திப்பு வேலைகள் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கட்சி முழுவதும் தனது கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது என உற்சாகத்தில் இருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications