வேறு டிபார்ட்மென்ட் கொடுங்க! டாப் அதிகாரியை தூக்கியடிக்கும் ஸ்டாலின்? இது எதிர்பார்க்காத ட்விஸ்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் வரிசையாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வரும் நிலையில் டாப் அதிகாரி ஒருவர் விரைவில் மாற்றப்படலாம் என்று அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் குறித்த விவாதம் கடந்த சில நாட்களாவே நடந்து வந்தது. ஒரு சில வாரங்களுக்கு முன்பே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்பட்டது.
அதன்படியே நேற்று ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். நேற்று தமிழ்நாட்டில் 35 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். உள்துறை செயலளாராக பணீந்திர ரெட்டி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மாற்றம்
மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் புதிய மருத்துவ செயலாளராக செந்தில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராக ஜெசிகா ; போக்குவரத்து துறை ஆணையராக நிர்மல் குமார்; ஊரக வளர்ச்சித் துறை இயக்குநராக தாரேஷ் அகமது உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது எதிர்பார்த்த மாற்றம்தான்.

ஐபிஎஸ் மாற்றம்
அதேபோல் கடந்த வாரம்தான் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டனர். கடந்த வாரம் தமிழ்நாட்டில் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தாம்பரம் காவல்துறை ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ். நியமனம் செய்யப்பட்டனர். ஐபிஎஸ் வருண்குமார் மதுரை அமலாக்கப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல ஐஜியாக தேன்மொழி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். ஜெயக்குமாரை கைது செய்த சுந்தரவதனம் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வண்ணாரப்பேட்டை டிசியாக இருந்த சுந்தரவதனம் கரூர் எஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

என்ன காரணம்?
இதற்கு 3 விதமான காரணங்கள் சொல்லப்பட்டன. அதன்படி ஒரு சில அதிகாரிகளின் செயல்பாடு சரி இல்லை என்று கூறப்பட்டது. இரண்டாவது கடந்த அதிமுக ஆட்சியில் நியமனம் செய்யப்பட்ட சில துறை அதிகாரிகள் அதே பொறுப்பில் நீடித்த நிலையில், மாற்றம் வேண்டுமே என்பதற்காக அவர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூன்றாவதாக, ஒரு சில துறை அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் செட்டாகவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்னொரு அதிகாரி மாற்றம்
இந்த நிலையில்தான் வேறு ஒரு டாப் அதிகாரியும் விரைவில் மாற்றப்படலாம் என்கிறார்கள். தற்போது முக்கிய பொறுப்பில் இருக்கும், அவரால் பிரஷரை ஹேண்டில் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. அதிக பணிகள் இருப்பதை அவர் விரும்பவில்லை என்கிறார்கள். எழுத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் அவர். ஆனால் இப்போது அவருக்கு அதிக பிரஷர் கொண்ட துறை அளிக்கப்பட்டு உள்ளதாம். இதனால் கடந்த சில மாதங்களாக அந்த துறையில் விருப்பம் இன்றி இருக்கிறாராம்.
Recommended Video

ஸ்டாலின்
ஆனால் அவர் முதல்வர் ஸ்டாலினின் குட் புக்கில் இருக்கிறார். முதல்வர் ஸ்டாலினுக்கும் நெருக்கமானவர். இருந்தாலும், இந்த அதிகாரி தனக்கு வேறு டிபார்ன்ட்மென்ட் கொடுங்க என்று கேட்பதால், அவர் விருப்பப்படி மாற்றும் முடிவில் இருக்கிறாராம். ஒரு சில துறைகளில் தற்போது தற்காலிக செயலாளர்கள் இருக்கிறார்கள். அதில் ஒரு துறையை இவர் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த துறைக்கு இவரை மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications