சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 பெரிய சம்பவங்கள்.. 2 மூவ்கள்.. அதிமுகவிலிருந்து பாஜகவிற்கு தாவும் "மூத்த" புள்ளி? சாப்டர் க்ளோஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவை சேர்ந்த முக்கிய தலை ஒருவர் பாஜகவில் இணைய போவதாக ஒன்இந்தியா தமிழ் சார்பாக முன்பே செய்தி வெளியிட்டு இருந்தோம்.. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பாக இந்த கட்சி தாவல் நடக்கலாம் என்று "அந்த" முக்கிய புள்ளிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை நடத்தப்பட உள்ளது. பொதுக்குழு கூட்டம் மற்றும் செயற்குழு கூட்டம் குறித்து ஆலோசனை செய்வதற்காக இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வன்மம்..சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை கைப்பற்ற நினைப்பதா?..கேட்கிறார் வானதி சிதம்பரம் தீட்சிதர்கள் மீது வன்மம்..சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை கைப்பற்ற நினைப்பதா?..கேட்கிறார் வானதி

பொதுக்குழுவில் என்ன பேசலாம், என்ன மாதிரியான முடிவு எடுக்கலாம், மாவட்டங்களில் நிர்வாகிகளின் மனநிலை என்ன என்பதை பற்றி ஆலோசனை செய்வதற்காக இந்த கூட்டம் நடப்படுகிறது.

அழைப்பு

அழைப்பு


அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 23-ந் தேதி சென்னையில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் இந்த கூட்டம் காலை 10 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தொடர்வது தொடர்பாக இதில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அமைதியோ அமைதி

அமைதியோ அமைதி

இந்த நிலையில்தான் அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பின்பாக அதிமுகவின் முக்கிய தலை ஒருவர் பாஜக பக்கம் தாவ போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிமுக இருக்கும் முன்னாள் அமைச்சர் அவர்.. சமீப நாட்களாக அதிமுக பெரிதாக கூட்டங்களில் தலை காட்டுவது இல்லை. அதிமுக சார்பாக செய்தியாளர்களை இவர் சந்திப்பது இல்லை. அதிமுக பற்றி எதுவும் பேசாமல். சமூக வலைத்தளங்களில் கூட, அதிமுக ஆதரவாக பெரிதாக கருத்துக்களை தெரிவிக்காமல் இவர் சைலென்ட்டாக இருக்கிறார். இந்த நிலையில்தான் அவர் பாஜகவில் ஐக்கியம் ஆக போவதாக தகவல்கள் வருகின்றன.

3 சம்பவம்

3 சம்பவம்

இவரின் இந்த முடிவிற்கு பின் 3 முக்கியமான காரணங்கள் இருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1. கட்சியில் ஓரம்கட்டப்பட்டார் - கட்சியில் மூத்த நிர்வாகிகள் இவரிடம் சரியாக பேசவில்லை என்று கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்கு பின் இவர் கொஞ்சம் கொஞ்சமாக மூத்த தலைவர்களால் ஓரம்கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. முக்கியமாக இவருக்கு நெருக்கமான நிர்வாகிகளுக்கு உட்கட்சி தேர்தலின் போது பதவிகள் தரப்படவில்லை.

2. சீனியர்கள் பேசவில்லை - இரண்டாவது விஷயம், கட்சியில் சீனியர்கள் இவரிடம் சரியாக பேசவில்லை. முக்கியமாக இரட்டை தலைமை தன்னை கண்டுகொள்ளவில்லை என்ற

3. பாஜக சைடில் வந்த தூது - அதிமுகவில் இப்படி ஓரம்கட்டப்பட்ட நிலையில் பாஜக தரப்பில் இருந்து, கமலாலயம் வர தூது விடப்பட்டதாக கூறப்படுகிறது.

 2 மூவ் என்னென்ன?

2 மூவ் என்னென்ன?

இந்த புறக்கணிப்புக்கு இடையில் அந்த மூத்த அதிமுக தலையும் சில முக்கியமான மூவ்களை மேற்கொண்ராம். அதாவது பாஜகவில் இணைவதற்கு ஏற்றபடி சில மூவ்களை மேற்கொண்டுள்ளார். சமீபத்தில் அவர் மேற்கொண்ட இரண்டு மூவ்கள், அதிமுகவில் இருந்து அவர் வெளியேறுவதற்கான சிக்னல் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1. கூட்டங்களை தவிர்த்தார் - அதன்படி அதிமுக கூட்டங்களை அவர் தவிர்த்து இருக்கிறார். சென்னையில் மூத்த நிர்வாகிகள் சந்தித்த போது, ஒன்றாக நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்த போதும் அவர் கூட்டத்தில் இல்லாமல் ஆப்சென்ட் ஆகி இருக்கிறார்.

2. அமைச்சருடன் சந்திப்பு - இது போக மத்திய பாஜக அமைச்சர் ஒருவருடன் சமீபத்தில் சந்திப்பு நடத்தி இருக்கிறார். பாஜகவில் இணைவதற்காக நடத்தப்பட்ட சந்திப்பு இது என்று கூறப்படுகிறது.

அதிமுக கூட்டம் நடக்கிறது?

அதிமுக கூட்டம் நடக்கிறது?

இந்த நிலையில்தான் அதிமுக கூட்டத்திற்கு பின் அவர் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே சமீபத்தில் அதிமுக - பாஜக இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது அதை பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் அந்த மூத்த தலை அமைதியாக இருந்தாராம். அதிமுக பொதுக்குழுவில் தனக்கு முக்கியத்துவம் தரப்படாத பட்சத்தில் கண்டிப்பாக இவர் பாஜகவில் ஐக்கியம் ஆவது உறுதி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான வட்டாரத்தினர். விரைவில் அதிமுகவில் இவரின் சாப்டர் முடிந்து.. பாஜகவில் அத்தியாயம் ஆரம்பிக்கும் என்கிறார்கள் விவரமா அறிந்தவர்கள்.

English summary
Sources say that a top leader from AIADMK is going to join BJP soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X