சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நேரு" முன்னிலையில்.. அதிமுக பாஜக கூட்டணி உறுதியாகுமா.. மோடி வருகையால் பரபரப்பு!

பிரதமரிடம் ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை மேற்கொள்வார்கள் என தெரிகிறது

Google Oneindia Tamil News

சென்னை: எப்போதும் போல் இல்லாமல் இந்த முறை பிரதமரின் வருகை பல்வேறு எதிர்பார்ப்புகளை கிளப்பி கொண்டிருக்கிறது..!

விரைவில் தேர்தல் வர போகிறது.. ஆனால் எந்த ஒரு கூட்டணியும் முடிவாகாமல் உள்ளது.. மறைமுக பேச்சுவார்த்தை நடக்கிறதே தவிர, வெளிப்படையாக எதுவும் நடக்கவில்லை.

அதிமுக - பாஜக கூட்டணி இன்னமும் முடிவாகாமல் உள்ளது.. அப்படியே, கூட்டணியில் பாஜக இருக்கிறது என்று சொல்லி கொண்டாலும், முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய அதிமுகவுக்கு உரிமை உள்ளது என்று சொல்லி கொண்டாலும், அது எடப்பாடியார்தான் என்பதை பாஜக வெளிப்படையாக சொல்ல மறுத்து வருகிறது. அதேசமயம், இவர்தான் முதல்வர் வேட்பாளர் என்று யாரையும் கைகாட்டாமல் மவுனம் காத்து வருகிறது.

அதிமுக

அதிமுக

இன்னொரு புறம், தங்களுக்கு தேவையான சீட் ஒதுக்கீடுகளில் பாஜக கறாராக இருக்கிறது.. 60 சீட் 50 ஆனது, 50 40 ஆனது,.. இப்படியே படிப்படியாக குறைத்தும் அவர்களின் சீட் ஒதுக்கீடுகள் இறுதி செய்யப்படவில்லை.. அதிமுகவும் தெளிவாக அறிவிக்கவில்லை.. அதேபோல, முக்கிய தொகுதிகளுக்கும் பாஜக வலை விரித்துள்ளதாக தெரிகிறது. அந்த தொகுதிகளில் சிலவற்றில் அதிமுகவுக்கும் வெற்றி வாய்ப்புகள் உள்ளதால், தொகுதி ஒதுக்கீடு பிரச்சனையும் இழுபறியாகவே உள்ளது.

சசிகலா

சசிகலா

மற்றொரு புறம் சசிகலாவின் வருகைக்கு பிறகு புரியாத புதிராக அரசியல் நடந்து வருவதாக தெரிகிறது. விரைவில் உங்களை சந்திக்கிறேன் என்று செய்தியாளர்களிடம் சொன்ன சசிகலா, 5 நாள் ஆகியும் இன்னும் யாரையும் சந்தித்து பேசவில்லை.. கட்சி சம்பந்தமான நடவடிக்கையும் இல்லை.. சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வருவதாலும், அமமுக - அதிமுகவை இணைப்பதாலும் தென்மாவட்டங்களில் பலத்தை பெற்றுவிடலாம் என்ற பிளானில் பாஜக உள்ளது.. ஆனால் இந்த இணைப்பு எடப்பாடியார் சம்மதிக்கவில்லை.

மவுனம்

மவுனம்

இதற்கு நடுவில் ஓபிஎஸ் சசிகலா குறித்து வாயே திறக்காமல் இருக்கிறார்.. அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி சண்முகம் போன்றோரே மாறி மாறி பேசி வதைபட்டு கொண்டிருக்கிறர்களே தவிர, கட்சி தலைவரின் மவுனம் பெருத்த கேள்வி, சந்தேகத்தை கிளப்பி விட்டு கொண்டு வருகிறது.. இவர் எதற்காக முதல்வருக்கு கடுப்பை தரும்படி தனி விளம்பரம் தந்து கொண்டிருக்கிறார் என்பது தெரியவில்லை.. சசிகலா விஷயத்தில் ஏன் அமைதி காக்கிறார் அதுவும் தெரியவில்லை.

 திட்டங்கள்

திட்டங்கள்

இப்படி பல பிரச்சனைகள் சூழ்ந்து நெருக்கி தள்ளும் நிலைமையில்தான், மோடியின் வருகை முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.. நாளை காலை சென்னை வருகிறார்.. அரசு முறை பயணமாகவும், பல திட்டங்களை துவங்கி வைப்பதற்காக இவர் வந்தாலும், அரசியல் இல்லாமல்.. அதிமுகவே தற்போது வலுவிழந்து போய் வருவதால், கட்சியை பலப்படுத்தவும், திமுகவை வீழ்த்தவும் சசிகலா விஷயம் தொடர்பாக நாளை ஏதாவது ஆலோசிக்கப்படும் என்றும் தெரிகிறது.

மோடி

மோடி

எனவே, சென்னை வரும் மோடியை அதிமுக தலைமை சந்தித்து பேச முடிவு செய்துள்ளதாம்.. வழக்கமாக மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் சென்னை வந்தால், லீலா பேலஸ் ஹோட்டலில்தான் தங்குவார்கள்.. ஆலோசனை நடத்துவார்கள்.. சென்ற முறைகூட ஓபிஎஸ், இபிஎஸ் லீலா பேலஸ் ஹோட்டல் ரூமில்தான் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தனர்.. இந்த முறை வேறு இடத்தில், பிரதமரை அதிமுக தலைமை பேசவும், ஆலோசிக்கவும் ஒரு பிளான் இருக்கிறதாம்.. வழக்கமாக மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் சென்னை வந்தால், லீலா பேலஸ் ஹோட்டலில்தான் தங்குவார்கள்.. ஆலோசனை நடத்துவார்கள்..

 ஆலோசனை

ஆலோசனை

சென்ற முறைகூட ஓபிஎஸ், இபிஎஸ் லீலா பேலஸ் ஹோட்டல் ரூமில்தான் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தனர்.. ஆனால், இந்த முறை வேறு இடத்தில், பிரதமரை அதிமுக தலைமை சந்திக்க கூடும் என்கிறார்கள்.. அநேகமாக நேரு ஸ்டேடியத்தில் க்ரீன் ரூம் என்ற அறை இருக்கிறதாம்.. இந்த ரூமில்தான் பிரதமருடன் முதல்வரும், துணை முதல்வரும் ஒன்றாக உட்கார்ந்து பேசவும் சில நிமிடங்கள் ஆலோசனை செய்ய திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால், இது உறுதியாக தெரியவில்லை.. எப்படி பார்த்தாலும் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு விடை ஓரளவு கிடைத்துவிடும் என நம்பப்படுகிறது.

English summary
Sources say that CM Edapadi Palanisamy and OPS will meet PM Modi in Chennai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X