சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திமுக எம்பிக்கு போனை போட்ட ஸ்டாலின்.. 10 நிமிடம் விடாமல் புலம்பி தள்ளிய சீனியர்.. என்ன நடந்தது?

சீனியர் எம்பி திருச்சி சிவா அதிருப்தியில் உள்ளதாக சொல்லப்படுகிறது

Google Oneindia Tamil News

சென்னை: தனக்கு மாநில அளவிலான பதவி தரப்படவில்லை என்று திமுகவின் சீனியர்கள் அப்செட்ல் உள்ளனராம்.. சீனியர் எம்பியான சிவாவும் இப்படி தன் ஆதங்கத்தை கொட்டி தீர்க்க.. உடனடியாக முக ஸ்டாலினிடம் இருந்து போன் பறந்து வந்ததாம்!
திமுகவில், துரைமுருகன் பொதுச் செயலராகவும், டிஆர் பாலு பொருளாளராகவும் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். அதேபோல, ஆ.ராசா மற்றும் பொன்முடி ஆகியோருக்கும், பதவிகள் தரப்பட்டன.

இதனால் கனிமொழி கொஞ்சம் அப்செட் என்று அன்றைய தினமே செய்திகள் பரபரத்தன.. மாநில அளவிலான பொறுப்புகள் கிடைக்கும் என்று காத்திருந்தவருக்கு தற்போது வரை எந்த பதவியும் ஒதுக்கப்படாததே அதற்கு அர்த்தம்.

தமிழக சட்டசபை: BAN NEET முக கவசத்துடன் வந்த ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள்! தமிழக சட்டசபை: BAN NEET முக கவசத்துடன் வந்த ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள்!

வாழ்த்து

வாழ்த்து

மேலும் புதிதாக பொறுப்பேற்றவர்களை வாழ்த்தி பேசும் நிலைமைதான் அன்று அவருக்கு ஏற்பட்டது. அதனால், ஏற்கனவே முக அழகிரியின் தென் மண்டல அமைப்பு செயலாளர் பதவியையாவது கனிமொழிக்கு தர வேண்டும், அப்போதுதான் தேர்தலுக்கு அது பலமாக இருக்கும் என்று அவரது ஆதரவாளர்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர்.

 திருச்சி சிவா

திருச்சி சிவா

இந்நிலையில், இன்னொரு சீனியரும் அப்செட் ஆகிவிட்டாராம்.. அவர்தான் சீனியர் எம்பியான திருச்சி சிவா.. "நான் இந்த கட்சியின் சீனியர்... யாரை கட்சியில் நான் சேர்த்துவிட்டேனோ, அவருக்கு பெரிய பதவி தரப்பட்டுள்ளதே.. அந்த நபருக்கு, திருச்சியிலிருந்து டிக்கெட் எடுத்து வரவழைச்சதே நான்தான்.. ஆனால், இப்போ அவரெல்லாம் பெரிய ஆளாகிவிட்டாரா? என்னை இப்படிஒதுக்கிட்ங்களே" என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வருத்தப்பட்டாராம்.

 ஆறுதல்

ஆறுதல்

இந்த விஷயம் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு தெரியவரவும், உடனடியாக சிவாவுக்கு போன் போட்டு பேசினாராம்.. ஆறுதலும் சொன்னாராம்.. அப்போது மொத்த தங்கத்தையும் சிவா கொட்டி தீர்த்துவிட்டாராம்.. "கட்சி பதவியை தருவதற்கு என்கிட்ட என்ன குறை இருக்கு? என்ன தகுதி குறைவா இருக்கு?" என்று அடுத்தடுத்த கேள்விகளை கேட்கவும் ஸ்டாலினுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் திணறி உள்ளார்.

 சமாதானம்

சமாதானம்

"நான் ஒரு சுயமரியாக்காரன்னு உங்களுக்கே தெரியும்.. என் சீனியாரிட்டிக்கு ஏற்றபடி கட்சி பதவியை தர வேண்டியது உங்க பொறுப்பு" என்று சிவா இறுதியாக சொல்ல, ஸ்டாலினும் அதற்கு சரி என்று சொன்னாராம். இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.

 சீனியர்கள்

சீனியர்கள்

ஆனால், எம்பி சிவா, தன் சார்பாக நியாயமான காரணங்களை சொன்னாலும், "இத்தனை முறை எம்பியாக இருந்தவருக்கு இனியும் என்ன பதவி? இனி வரும் இளைஞர்களுக்கு இதுபோன்ற சீனியர்கள் எல்லாம் வழிவிட வேண்டாமா? இதையெல்லாம் அவர்களாகவே புரிந்து கொள்ள வேண்டும்தானே" என்கின்றனர் திமுகவின் தீவிரமான இளம் உடன்பிறப்புகள்!

English summary
Sources say that DMK MP Trichy Siva becomes upset over Party Seat Position
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X