ராகு கேது பெயர்ச்சி 2026: நவம்பர் 13 முதல் உலகில் என்ன மாற்றங்கள் நடக்கும்? அதிர வைக்கும் கணிப்புகள்
ராகு கேது பெயர்ச்சி பலன் 2026: நிழல் கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேதுவின் பெயர்ச்சியானது நவம்பர் 13 ஆம் தேதி (ஐப்பசி 27) மாலை 5.14 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியால் உலகில் நடக்கப்போகும் மாற்றங்கள், பாதிப்புகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
சர்ப்ப கிரகங்களில் ராகுவும் கேதுவும் சமசப்தம கிரகங்களாகும். 210 டிகிரிக்குள் இந்த கிரகங்களின் பார்வை இருக்கும். நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது கிரகங்கள் 18 மாதங்களுக்கு ஒருமுறை பெயர்ச்சியாவது வழக்கம். வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 27, நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5.14 மணியளவில் ராகு பகவான் அவிட்டம் மூன்றாம் பாதம், கும்பத்தில் இருந்து அவிட்டம் 2 பதமான மகரத்திற்கு பெயர்ச்சியாகிறார். கேது பகவான் மகம் 1 ஆம் பாதம் சிம்ம ராசியில் இருந்து, ஆயில்யம் 4 பாதமான கடக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். இந்த சமயத்தில் கடகத்தில் குரு, மீனத்தில் சனி உள்ளனர்.

உலகில் நடக்கும் மாற்றங்கள்
சனியின் வீட்டில் ராகு, சந்திரனின் வீட்டில் கேது பகவான் இருக்கின்றனர். சந்திரன் என்றாலே பகை என்று அர்த்தம். சூரியனும், சந்திரனும் சர்ப்பங்களுக்கு ஆகாது. கடந்த 18 மாதங்களாக நாடுகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. ரசாயன போர், ரசாயன வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வது போன்ற நடப்பதற்கான வாய்ப்புள்ளது. நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு துயரங்கள் இந்த ராகு கேது பெயர்ச்சியில் நடக்கும் என்பதால் மக்கள் கவனமாகவும், அரசாங்கம் விழிப்புடனும் இருக்க வேண்டும்.
பாதிப்புகள்
விஷ வாயுக்கள், அணு ஆலை பாதுகாப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். உலகை சீனர்கள் ஆளக்கூடிய காலகட்டமாக இருக்கும். நிலநடுக்கங்கள், கடல் பாதிப்புகள், அதீத மழை பெய்வது, மலைச் சரிவுகள், அணு ஆலைகள், ஆயுதங்களால் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. உலகத்தில் ஆன்மீகத் தேடல் அதிகரிக்கும். நிறைய பேர் ஆன்மீகத்தை நோக்கிச் செல்லத் தொடங்குவார்கள். பெளத்த மதம், இந்து மதம் குறித்த தேடுதல்கள் அதிகரிக்கும்.
பதற்றம் ஏற்படும்
மக்கள் நிம்மதியில்லாத தன்மையில் இருப்பார்கள். திருப்பதி திருமலை, அயோத்தி ராமர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், பாம்பே சித்தி விநாயகர் கோயில், திருவண்ணாமலை, மெக்கா, தேவாலயங்கள், கும்பமேளாக்கள் நடைபெறும் இடங்கள், வேளாங்கண்ணி, மாகமகம் குளம் போன்றவற்றில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கடல் பகுதியில் இருப்பவர்களுக்கு எல்லாம் பதற்றத்தை ஏற்படத்தக்கூடிய நிலைமை ஏற்படும். பொதுமக்கள் காப்பீடு செய்து கொள்வது நல்லது.
விஷநோய் அபாயம்
மலை வாழ் பகுதிகள், அங்கு உள்ள ரிசார்டுகள் எல்லாம் இயற்கை சேதங்களால் பாதிக்கப்படும். வரலாறு காணாத புயல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. கப்பல் வாணிபங்கள் தடைபடும். எண்ணெய், பெட்ரோல், விவசாயப் பொருட்கள் என விலைவாசி உயர்வு அதிகரிக்கும். மனிதர்களின் போக்குவரத்து தடைபடும். விஷ நோய்கள் ஏற்படும். சுவாசக் கோளாறு, கை கால் முடக்கத்தை ஏற்படுத்தும் நோய் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புள்ளது.
தங்கம் வாங்கலாமா?
ரயில்வே துறையில், வாகன அமைப்பில், எலக்ட்ரிசிட்டி, சோலார் போன்றவற்றில் பெரும் புரட்சி ஏற்படும். நிறைய பேர் சைக்கிள் வாங்க ஆரம்பிப்பார்கள். தங்கம் விலை குறையும்போது அதிகளவில் வாங்கிக் கொள்வது நல்லது. பெரும் பலம் செல்வாக்கு படைத்த தலைவர்கள் எதிர்பார்க்காத மரணிக்கும் நிலை ஏற்படும். உடனிருப்பவர்கள் சதி செய்யக்கூடும். ஆட்சிகள் கவிழ்க்கப்படுவதற்கான வாய்ப்புள்ளது. அரசாங்கத்தில் நிலையற்ற தன்மை, கூட்டணிகள் விலகுவது, குறுக்கு வழியில் பதவிகள் வருவது போன்றவை ஏற்படும்.
ஏலியன்ஸ் வரவு
தொழிலதிபர்கள், பரம்பரையாக இருந்த தொழிற்கூடங்கள் கைமாறும். கோயில்களுக்குள் புதிய நபர்கள் வருவது, அரசாங்கம் எடுத்துக் கொள்வது, கோயில் சொத்துக்களை மற்றவர்களுக்கு தாரைவார்ப்பது, மத மோதல்கள், இன மோதல்கள் என உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தும். ராக்கெட்டுகள் திடீரென செயலிழக்கும். வேற்று கிரகவாசிகள் தென்படக்கூடிய காலகட்டம் இந்த ராகு கேது பெயர்ச்சியில் இருந்து ஆரம்பிக்கவுள்ளது.


Click it and Unblock the Notifications
