இது அதுக்கும் மேல! ஜெ.வை விட ஒரு படி மேலே.. எடப்பாடி போடும் மாஸ்டர்பிளான்.. யாரும் வாலாட்ட முடியாது!
சென்னை: அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமி அடிபோட்டு வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அதைவிட உயரிய பதவி ஒன்றை உருவாக்க அவர் திட்டமிட்டு வருவதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை பற்றி அதிமுக வட்டாரத்தில் விசாரித்ததில் அவர்கள் சில திடுக்கிடும் தகவல்கள் தெரிவித்தனர்.
Recommended Video
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று முதல் நாள் நடைபெற்றது. ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஒற்றை தலைமை குறித்து தீவிரமான ஆலோசனைகள் செய்யப்பட்டு உள்ளன.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஏற்பாடு செய்ததே வேறு சில விஷயங்களை விவாதிக்கத்தான். 23ம் தேதி நடக்க உள்ள பொதுக்குழு, செயற்குழு பற்றி விவாதிக்கத்தான் இந்த கூட்டம் நடந்தது.

பாஜக
அதோடு பாஜக பற்றியும் பேச கூட்டத்தை கூட்டி உள்ளனர். பாஜக எதிர்க்கட்சி என்று சொல்லிக்கொண்டு சுற்றுகிறதே.. அவர்களுடன் கூட்டணி வைக்கலாமா.. என்று விவாதிக்கவே இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தி உள்ளனர். ஆனால் அதை பற்றி விவாதிக்காமல் ஒற்றை தலைமை பற்றி இந்த கூட்டத்தில் விவாதித்து இருக்கிறார்கள் . அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்வு செய்வது, ஒற்றை தலைமையை கொண்டு வருவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

எடப்பாடி ஆதரவு
எடப்பாடிக்கு ஆதரவாக இந்த கூட்டத்தில் பல நிர்வாகிகள் பேசி உள்ளனர். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆக வேண்டும் என்று 20க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பேசி உள்ளனர். வரும் நாட்களில் இது பற்றி மாவட்ட அளவில் செயலாளர்கள் தீர்மானங்களை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பல்வேறு மாவட்ட செயலாளர்கள் தீர்மானங்களை நிறைவேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பிளான்
ஆனால் அதிமுக வட்டாரத்தில் விசாரித்ததில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் என்பதை விட உயரிய பதவியை உருவாக்கவே முயன்று வருகிறார்கள் என்கிறார்கள். அதிமுகவில் தலைவர் பதவி இல்லை. எம்ஜிஆர் உருவாக்கும் போதே தலைவர் பதவி வேண்டாம். அண்ணாதான் எப்போதும் எங்கள் தலைவர் என்று கூறி பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கினார். அதனால் எடப்பாடி தலைவர் பதவியை உருவாக்க நினைக்கவில்லையாம்.

அதிக அதிகாரம்
மாறாக பொதுச்செயலாளரிலேயே இன்னும் அதிக அதிகாரமிக்க செயலாளரை நியமிக்க அவர் முடிவு செய்து இருக்கிறாராம். அதாவது 'அதிகாரமிக்க பொதுச் செயலர்' என்ற பெயரை அவர் பதவியை உருவாக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதன் அர்த்தம் கட்சியில் எல்லாமே அந்த பதவிக்கு கட்டுப்பட வேண்டும் என்பது ஆகும். இன்னொரு அர்த்தம் பொதுக்குழு கூட இந்த பதவிக்கு எதிராக முடிவு எடுக்க முடியாது.

புதிய பதவி
அதாவது முன்பு ஜெயலலிதா மரணித்து சசிகலா சிறைக்கு சென்ற பின் அதிமுக பொதுக்குழு கூடிய சசிகலாவை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி, அந்த பதவியையும் நீக்கியது. ஆனால் 'அதிகாரமிக்க பொதுச் செயலர்' பதவி அப்படி இருக்காது. இது நிரந்தர பதவி. பொதுக்குழு நினைத்தாலும் இந்த பதவியை நீக்க முடியாது என்ற வகையில் உயரிய அதிகாரத்துடன் இந்த பதவி இருக்கும் என்கிறார்கள்.

என்ன பிளான்
இது தொடர்பாகவே அவர் ஆலோசனைகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. கட்சியில் அனைத்தையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் எடப்பாடி காய் நகர்த்தி வருகிறாராம். இந்த புதிய பதவி பொதுச்செயலாளரை விட கொஞ்சம் அதிக பவர் வாய்ந்தது. ஜெயலலிதாவை விட அதிக சக்தி வாய்ந்தவராக கட்சியில் எடப்பாடி உருவெடுக்க பார்க்கிறார் என்று ரத்தத்தின் ரத்தங்கள் தெரிவிக்கிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications