சுள்ளுன்னு வெயிலடிச்சாலும் இந்த மாவட்டங்களில் ஜில்லுன்னு மழையும் பெய்யும்- வானிலை கூல் அறிவிப்பு
காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் லேசானது மு
சென்னை: காற்றின் திசை வேக மாறுபாடு, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெயில் சுளீரென்று அடித்து ஆடி வருகிறது. மழை அவ்வப்போது பெய்து ஆறுதல் தருகிறது. தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை பெய்து நீர் நிலைகள் நிரம்பத்தொடங்கியுள்ளன. இரவு நேரங்களில் மட்டும் சிறிது மழை பெய்து வருகிறது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. கோவை மாவட்டம் வால்பாறையில் 5 சென்டிமீட்டர் அளவு மழையும், சின்னக்கல்லார் பகுதியில் 4 செமீ அளவு மழையும் பதிவாகியுள்ளது. சின்கோனா, சோலையார் பகுதியில் 3 சென்டிமீட்டர் அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

ஆர்ப்பரிக்கும் அருவிகள்
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்யும் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. உள் மாவட்டங்களில் பகலில் வெயிலும், இரவில் மழையும் என மாறி மாறி ஆட்டம் காட்டி வருகிறது. கடந்த சில நாட்களாக சில ஊர்களில் லேசான சாரல் மழை பெய்து வருகிறது.

வானிலை மையம் தகவல்
இந்த நிலையில் காற்றின் திசை வேக மாறுபாடு, வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.

9 மாவட்டங்களில் மழை
கோவை, சேலம், நாமக்கல், நீலகிரி, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மதுரை, விருதுநகரில் மழை
நாளை ஜூலை 8ஆம் தேதி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களிலும் உள் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், நாமக்கல், சேலம், தருமபுரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

வெப்பநிலை எவ்வளவு
சென்னையைப் பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடனும் ஒரு சில இடங்களில் லேசாகவும் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் குறைந்த பட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும்.

மீனவர்கள் கவனம்
ஜூலை 7ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
பருவமழை காலம்
கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரையிலான தென்மேற்கு பருவமழை காலத்தில் பல மாவட்டங்களில் இயல்பான மழையை விட அதிக அளவு பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், திருநெல்வேலி, கோவை, தூத்துக்குடி, நீலகிரியில் இயல்பான அளவை விட மழை குறைவாகவே பெய்துள்ளது என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications