சௌமியா அன்புமணி ஒரே போடு.. படக்குனு திரும்பி பார்த்த திமுக.. உரிமைத்தொகை பற்றி என்ன சொல்றாரு பாருங்க
சென்னை: சௌமியா அன்புமணி, திமுகவின் திட்டங்கள் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.. இதை திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே உற்றுகவனித்து வருகின்றன.
எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி கொண்டிருப்பவர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.. டாஸ்மாக்கை இழுத்துமூட, கடந்த காலங்களில் பாமக முன்னெடுத்த போராட்டங்கள் ஏராளம்.

உத்தரவு: இந்த முறை முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற சமயம், கொரோனா பாதிப்பு தீவிரத்தில் இருந்ததால், மதுக்கடைகள் மூடும்படி உத்தரவிடப்பட்டிருந்தது..
அந்த நேரத்தில்தான் டாக்டர் ஐயா ஒரு அறிக்கை விடுத்திருந்தார்.. அதில், "மதுக்கடைகள் இல்லாமலும் அரசுக்கு வருமானம் ஈட்ட முடியும்" என்பதை விவரித்து, அதற்கான பல்வேறு வழிமுறைகளையும் அதில் விரிவாக எடுத்துரைத்திருந்தார்.
லாக்டவுன்: இதையடுத்து ராமதாஸுக்கு போனை போட்டு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.. "அய்யா.. அறிக்கையை படிச்சேன்.. நல்ல விஷயங்களை சொல்லியிருக்கீங்க. மதுக்கடைகளை ஒழிக்கணும்குறதுதான் என் கொள்கையும்.." என்று ஸ்டாலின் சொல்ல, அதற்கு ராமதாஸோ, "கடந்த வருடம் லாக்டவுன் சமயத்திலேயே டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லி கேட்டிருந்தேன்... இப்ப நீங்க மூடியிருக்கிறது நல்ல விஷயம்... மூடினது மூடின மாதிரியே இருக்கட்டுமே" என்று ஒரு கோரிக்கையையும் ராமதாஸ் வைத்திருந்தார்.
அதற்கு பிறகு நிலைமையே மாறிவிட்டது.. டாஸ்மாக் குறித்த எத்தனையோ சர்ச்சைகள் வெடித்தன.. போதாக்குறைக்கு கள்ளச்சாராய உயிரிழப்புகளும் தமிழகத்தை நிலைகுலைய வைத்துவிட்டது. நேற்றைய தினம், மதுவிலக்குத் துறை அமைச்சர் இப்போது பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அதில், மது குறித்த மக்களின் விருப்பத்தை அறிந்து நிறைவேற்ற போவதாக தெரிவித்திருந்தார்.
டாக்டர் ஐயா: ஆனால், டாக்டர் ராமதாஸ் "மதுவிலக்குத் துறை அமைச்சர். அவர் நினைத்தால் தமிழ்நாட்டுக்கு ஒரு மகத்தான நன்மையை செய்ய முடியும். தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து தமிழ்நாட்டு மக்களிடம் பொதுவாக்கெடுப்பை நடத்தி, அதன் முடிவுகளை செயல்படுத்துவது தான் அந்த நன்மை. அதற்கு தயாரா? என்பதை தமிழக அரசும், மதுவிலக்குத்துறை அமைச்சரும் தெளிவுபடுத்த வேண்டும் என்று இன்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும், பசுமை தாயகத்தின் நிர்வாகியுமான சௌமியா அன்புமணி ராமதாஸ் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி தந்தார்.
பசுமைத்தாயகம்: அப்போது, "பசுமைத்தாயகம் நாளான ஜூலை 25-ந்தேதி 2 லட்சம் மரக்கன்றுகளை நட்டு முடித்திருக்க வேண்டும் என்பது பசுமைத்தாயகம் நிறுவன தலைவரின் விருப்பம். அதற்கிணங்க 2 லட்சம் மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறோம். அதன் ஒரு நிகழ்ச்சியாக இன்று மதுரை திருமங்கலத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. அதைத்தொடர்ந்து காலநிலை, அவசரநிலை மாற்றம் குறித்த கருத்தரங்கு கூட்டம் நடக்க போகிறது.
இதில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியாக 10 லட்சம் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறோம். அதை எப்படி ஆவணம் செய்வது, பின்னர் அதை எப்படி ஐக்கிய நாடுகள் அவையில் சமர்ப்பிப்பது போன்ற விஷயங்களை பேசவிருக்கிறோம்.
சாதிவாரி கணக்கெடுப்பு: உரிமைத் தொகை நிபந்தனை என்பது அரசாங்கத்தின் முடிவு. நிர்வாக காரணங்களால் என்ன முடிவு எடுக்கப்படுகிறதோ அதை சட்டரீதியாக நாம் பின்பற்ற வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும். பாமக தலைவரும் தேர்தல் வாக்குறுதியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.. எனவே, அதை செவ்வனே செயல்படுத்த வேண்டும்.
மதுவிலக்குக்கு எதிரான கட்சி பாமக.. பசுமைத் தாயகம் என்றாலே நாங்கள் சமுதாய வளர்ச்சியை முக்கியமாக பார்க்கிறோம். ஏழை, எளியவர்களுக்கு எதிரான மது விற்பனை எதுவாக இருந்தாலும் அதை கண்டிப்பாக வரவேற்கப்போவதில்லை.
நெடுஞ்சாலைத்துறை வேலையின்போது மரங்கள் வெட்டப்படுவது தொடர்பாக சென்னையில் ரெயில் நிலையத்தில் மரத்தை வெட்டும்போது பெரிய போராட்டம் நடத்தி இருக்கிறோம். அதற்கு அவர்கள் பதில் சொல்லி இருக்கிறார்கள்.
நீர்வளம்: ஒரு மரம் வெட்டும்போது அதற்கு இணையாக 10, 20 அல்லது 100 மடங்கள் கூட நடுவோம் என்று சொல்லி இருக்கிறார்கள். ஒரு மரத்தை எடுத்தாலும் பசுமைத் தாயகம் போராட்டம் செய்யும். செங்கல்பட்டில் ஒரு இடத்தில் பெரிய ஆலமரத்தை எடுத்ததற்கு, அதை வேறு ஒரு இடத்தில் நடப்பட்டு அதற்கு புத்துயிர் கொடுத்திருக்கிறோம். கனிம வளங்கள் மற்றும் நீர் வளங்களை பாதுகாக்க எல்லா முயற்சிகளையும் பசுமைத் தாயகம் முன்னெடுத்து நடத்தி வருகிறது" என்றார்.
சாதிவாரி கணக்கெடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்றும், ஏழை, எளியவர்களுக்கு எதிரான மது விற்பனை எதுவாக இருந்தாலும் அதை கண்டிப்பாக வரவேற்கப்போவதில்லை என்றும் சௌமியா அன்புமணி திட்டவட்டமாக கூறியுள்ள நிலையில், திமுக இதை உற்றுகவனித்து வருகிறது.
-
ராகுல் காந்தி கடும் அதிருப்தி.. திமுக அழைத்தும் செவிசாய்க்காத காங்கிரஸ் மேலிடம்.. என்ன நடந்தது? -
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மண்டலம் வாரியான விவரம்.. திமுக ஜெயிக்க மூன்று காரணங்கள் -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
விஜயின் தவெக சரியில்லை... தமிழ்நாடு பிஷப் கவுன்சில் திமுக கூட்டணிக்கு ஆதரவு.. அதிமுக மீது ‘அட்டாக்' -
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக்












Click it and Unblock the Notifications