ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டம்.. சட்டசபையில் அமைச்சர் வன்னி அரசு அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று சமூக நீதித்துறை மற்றும் சிறுபான்மை நலத்துறை ஆகிய துறைகளின் மீதான மானிய கோரிக்கைகள் நடைபெற்றது. சமூக நீதித்துறையில் பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் வன்னி அரசு இன்று வெளியிட்டார். குறிப்பாக ஆணவக் கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்றப்படும் என்று வன்னி அரசு கூறினார்.

வன்னி அரசு கூறும் போது, "ஆணவக் கொலை தொடர்பாக கடந்த ஆட்சியில் நீதிபதி கே.என். பாஷா தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் ஆயுள்காலத்தை மேலும் 9 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் பரிந்துரைகள் கிடைத்ததும் ஆணவக் கொலைக்கு எதிராக சிறப்புச் சட்டம் நிறைவேற்றப்படும்" என்று கூறினார்.

Special law to prevent honor killings Vanni Arasu announces in the Assembly

100 சமுதாயக்கூடங்கள்

முன்னதாக அமைச்சர் வன்னி அரசு சட்டசபையில் சமூக நீதித்துறை மானியக் கோரிக்கையில் 67 அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தரமான, சத்தான உணவு வழங்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி விடுதி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உணவுக் கட்டணம் உயர்த்தப்படும். சமூக நீதி விடுதிகளை சிறப்பாக பராமரிப்பு செய்ய தற்போது வழங்கப்பட்டு வரும் பராமரிப்பு தொகை உயர்த்தப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 150 சமூகநீதி விடுதிகள் கட்டப்படும். பள்ளிகளின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகளுக்கான வருடாந்திர பராமரிப்பு தொகை உயர்த்தி வழங்கப்படும். சமுதாய நிகழ்வுகளை நடத்த ஏதுவாக 100 சமுதாயக்கூடங்கள் கட்டப்படும்.

கோவையில் வணிக மையம்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், கோவையில் வணிக மையம் கட்டப்படும். சென்னை நந்தனத்தில் "பழங்குடியினர் பண்பாட்டு மையம்" அமைக்கப்படும். ஆதிதிராவிடர் மக்களுக்கு தேவையான நல உதவிகளை வழங்க ஏதுவாக 'சமூகநீதி நல வாரியம்' அமைக்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விடுதிகளில் "அம்பேத்கர் படிப்பகம்" ஏற்படுத்தப்படும்.

தூய்மைப் பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க "அகம்" திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, 2,500 கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும். பழங்குடியினருக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு லட்சம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின குடும்பத் தலைவிகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக "விடிவெள்ளி மகளிர் வாழ்வாதார திட்டம்" செயல்படுத்தப்படும்" என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+