சென்னை - ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில்.. ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு.. பயணிகள் ஹேப்பி
சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சென்னை தாம்பரத்தில் இருந்து ராமநாதபுரத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கான முன்பதிவு விரைவில் தொடங்க உள்ளது. இதனால் பயணிகள் ஹேப்பியாகி உள்ளனர்.
தமிழ்நாட்டில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும், பொதுமக்கள் எளிமையாக பயணம் செய்யவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்நிலையில் தான் சென்னை தாம்பரம் - ராமநாதபுரம் இடையே வாரம் இருமுறை இயங்கும் வகையில் சிறப்பு ரயில் என்பது இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை தாம்பரம் - ராமநாதபுரம் இடையே வாரம் இருமுறை இயங்கும் வகையில் சிறப்பு ரயில் (வண்டி எண் 06051) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயங்கும். அதன்படி ஜுன் 21, 23, 28, 30, ஜுலை மாதம் 5, 7, 12, 14, 19, 21, 26, 28 ஆகிய நாட்களில் தாம்பரத்தில் இருந்து இரவு 7 மணிக்கு பறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.50 மணிக்கு ராமநாதபுரத்தை சென்றடையும்.
மறுமார்க்கமாக ராமநாதபுரம் - சென்னை தாம்பரம் இடையே வாரம் இருமுறை அதாவது சனி மற்றும் திங்கட்கிழமைகளில் இயங்கும் வகையில் சிறப்பு ரயில் (06052) இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் ஜுன் 22, 24, 29, ஜுன் 1, 6, 8, 13, 15, 20, 22, 27, 29 ஆகிய நாட்களில் பிற்பகல் 3 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு சென்னை தாம்பரத்தை சென்றடையும்.
இந்த ரயில்கள் இருமார்க்கமாக செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிபுலியூர், கடலூர், சிதம்பரம், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, கல்லல், சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவும் விரைவில் தொடங்க உள்ளது. இதன்மூலம் பயணிகள் தங்களின் பயணத்துக்கான முன்பதிவை செய்து பயணிக்கலாம் என்று தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications