செஸ் போட்டிக்கு நடுவே சுற்றுலாவையும் பிரபலப்படுத்தும் தமிழக அரசு.. ட்ரெண்டாகும் நம்ம சென்னை வீடியோ!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு நடுவே சுற்றுலாத்துறையையும் பிரபலப்படுத்தும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள வீடியோ மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
Recommended Video
செஸ் ஒலிம்பியாட் போட்டி செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் சர்வதேச அளவில் தமிழ்நாடு குறித்த பேச்சுகள் அதிகரித்து வருகின்றன. அதேபோல் சர்வதேச செஸ் வீரர்களுக்கு தமிழ் கலாச்சாரம், தமிழக உணவு பண்பாடு ஆகியவற்றை உணர்த்தும் வகையில் உணவுகள் தயாரிக்கப்பட்டு விருந்து வைக்கப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் தமிழ்நாடு அரசு விளையாட்டு மட்டுமல்லாமல் சுற்றுலாவையும் மேம்படுத்த ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சாலைகள் சீரமைப்புக்காக பல கோடி ரூபாய் செலவிடப்பட்டு புதிதாக போடப்பட்டுள்ளன. அதேபோல் தமிழ்நாடு சுற்றுலா தரப்பில் பேருந்துகள், மூன்று சக்கர வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. செஸ் ஒலிம்பியாட் தொடரின் மூலம் தமிழ்நாடு சுற்றுலாவையும் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் தமிழ்நாடு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சென்னையை அறிமுகம் செய்யும் வகையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை வரும் வெளிநாடு சுற்றுலா பயணிக்கு, தமிழ்நாட்டின் ஆட்டோ ஓட்டுநர் மூலம் அறிமுகம் செய்யப்படுகிறது.
அதில், சென்னையின் பெருமைகளும், உணவுகளும் அறிமுகம் செய்து வைக்கப்படுகின்றன. அதேபோல் பிரபல சுற்றுலாத்தளங்களான மெரினா கடற்கரை, கபாலீஸ்வரர் கோவில், பாரிஸ் கார்னர் பூ மார்க்கெட், மீன் மார்க்கெட், சாந்தோம் செண்ட் தாமஸ் சர்ச், வடபழனி முருகன் கோவில், வள்ளுவர் கோட்டம், மகாபலிபுரம், முட்டுக்காடு, ஆர்ட் கேலரி ஆகியவை அறிமுகம் செய்து வைக்கப்படுகிறது.
அதேபோல் தமிழகத்தின் அடையாளங்களான நாட்டுப்புறக் கலைகள், நடனம், ஆடைகள் ஆகியவையும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த வீடியோ காணும் அனைவரையும் சென்னைக்கு சுற்றுலா செல்ல தூண்டும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்துவதன் மூலம் தமிழக அரசு விளையாட்டு மட்டுமின்றி தொழில் வளர்ச்சி, சுற்றுலாத்துறை வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருவது பாராட்டுக்களை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications