பட்டியலின மக்கள் புகார் அளிப்பதற்கு பிரத்யேக வாட்ஸ் அப் எண்.. எஸ்பிக்களிடம் ஸ்டாலின் அதிரடி உத்தரவு
சென்னை: தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வாட்ஸ் ஆப் எண் உருவாக்க வேண்டும், பட்டியலின மக்கள் புகார் அளிப்பதற்கு பிரத்யேக வாட்ஸ் அப் எண் உருவாக்கி அது பொதுவில் பகிரப்பட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள உத்தரவில், குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் இருக்கக் கூடாது. குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, தண்டனை பெற்றுத் தருவதில் மும்முரம் காட்ட வேண்டும். அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது.
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், அமைதியை சீர்குலைக்கும் உள்நோக்கத்தோடு சிலர் செயல்படுவர், அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது, கள்ளச்சாராயம், போதைப்பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும், குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்

சிறுபான்மையினருக்கு, தலித் மக்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வாட்ஸ் ஆப் எண் உருவாக்க வேண்டும். வாபஸ் மூலம் புகார் கொடுக்கும் வசதியை உருவாக்க வேண்டும். பட்டியலின மக்கள் புகார் அளிப்பதற்கு பிரத்யேக வாட்ஸ் அப் எண் உருவாக்க வேண்டும்.
கலெக்டர்கள் மற்றும் எஸ்பிக்கள் சமூக தளங்களை கண்காணிக்க வேண்டும், உண்மைக்கு புறம்பான செய்திகள் அதிகம் வருகின்றன. சமூக ஊடகங்களில் பொய் தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
( கண்கள் சிவந்த ஸ்டாலின்.. கிராமசபை கூட்டத்தில்.. விவசாயியை எட்டி உதைத்த செயலாளர்.. தனிப்படை அமைப்பு)
தமிழ்நாட்டில் அடுத்த ஏழு, எட்டு மாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தக் காலகட்டத்தில் சில முக்கியமான நினைவு நாட்கள் மற்றும் மத ரீதியான திருவிழாக்கள் நடைபெற உள்ளன.
அதேபோல், அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆகையால், இந்தக் காலகட்டத்தில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை உருவாகாமல் மிக மிகக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.
இதற்காக, காவல்துறையில் உள்ள ஆளிநர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாகக் கவனித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள நுண்ணறிவுப் பிரிவு காவல் ஆய்வாளர்கள், கிடைக்கப்பெறும் தகவல்களை நன்கு ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து உடனுக்குடன் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும், அதுமட்டுமல்ல, நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களும் விழிப்புடன் இருந்து தகவல்களை உடனுக்குடன் சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு அலுவலர்களுக்கு வழங்கி, எந்த ஒரு சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையும் ஏற்படா வண்ணம் ஆரம்பத்திலேயே நடவடிக்கை எடுக்க உறுதுணையாக இருக்க வேண்டும். அதேபோல், மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்களுடனும் ஒருங்கிணைந்து பணியாற்றினால், காவல் துறையின், பணித்திறன் பன்மடங்கு மேம்படும். என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
( என்ன பண்றீங்க? சோஷியல் மீடியாவை கண்காணியுங்கள்.. கலெக்டர்கள், எஸ்பிக்களுக்கு ஸ்டாலின் பொளேர் ஆர்டர் )
கூட்டம்: முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்கள் மாநாடு இன்று தொடங்கி நடந்து வருகிறது. 2 நாள் கூட்டமான இதில் தற்போது முக்கியமான உத்தரவுகளை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள், சட்டம்-ஒழுங்கு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொதுவாக வருடா வருடம் அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் மாநாடு ஆகும்.
இதில் சட்ட ஒழுங்கு தொடர்பாக முக்கிய முடிவுகள் பொதுவாக எடுக்கப்படுவது வழக்கம். அதே சமயம் போலீசார், மாவட்ட ஆட்சியர்களுக்கு பல முக்கிய உத்தரவுகளும் பிறப்பிக்கப்படும். தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் முதல்வர் ஸ்டாலினின் இந்த கூட்டம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications