அமித்ஷாவின் ‘காங்கிரஸ் முக்த்’ பிளானுக்கு.. சத்தமின்றி உதவும் விஜய்? ஸ்டாலின் கைவிட்டால் ஆட்டம் ஓவர்
சென்னை: "திமுக-வுடன் இனி ஒட்டும் இல்லை... உறவும் இல்லை என்று போய்விடலாமா.. தவெகவிடம் சேர்ந்துடலாமா!" - சத்தியமூர்த்தி பவனில் இப்போதைக்கு இதுதான் ஹாட் டாக். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தமிழக அரசியலில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மெகா 'பூகம்பம்' கிளம்பியுள்ளது.
காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி வைத்தால்.. அந்த ஒரு முடிவு, தமிழக அரசியலைத் தாண்டி டெல்லி வரை அதிர்வலைகளை உருவாக்கும். ஏன் தெரியுமா?

தூணை இழந்த 'இந்தியா' கூட்டணி!
தேசிய அளவில் பாஜக-வை எதிர்க்க உருவான 'இந்தியா' (INDIA) கூட்டணியின் மிக வலுவான தூண்களில் ஒன்று திமுக. இப்போது காங்கிரஸ் திமுக-வை கழற்றிவிட்டுவிட்டு, விஜய்யின் த.வெ.க-வுடன் கைகோர்த்தால், அந்தக் கூட்டணி சிதறுவது உறுதி என்கிறார்கள் அரசியல் விமர்சகறல்.
ஏற்கனவே மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்கள் காங்கிரஸிடம் இருந்து தள்ளிப் போய்விட்ட நிலையில், ஸ்டாலினும் விலகி நின்றால், ராகுல் காந்தியின் தேசியக் கனவு கானல் நீராகிவிடும். "தெற்கில் ஒரு பலமான கூட்டணி இல்லை என்றால், காங்கிரஸ் அகில இந்திய அளவில் நிலைகுலைந்து போகும்" என்கிறது அறிவாலய வட்டாரம்.
ராஜ்யசபா 'செக்'... வீழும் பலம்!
காங்கிரஸின் இந்த ரிஸ்க் எடுக்கும் முடிவு, அக்கட்சியின் கழுத்தையே நெரிக்க வாய்ப்புள்ளதாக ஒரு தரப்பு எச்சரிக்கிறது.
திமுக தயவின்றி காங்கிரஸ் தனித்தோ அல்லது த.வெ.க-வுடனோ களம் கண்டால், தற்போதுள்ள சொற்ப எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையும் குறைய வாய்ப்புள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் காங்கிரஸ் பலம் குறைந்தால், டெல்லி ராஜ்யசபாவுக்கு அக்கட்சியால் ஆட்களை அனுப்ப முடியாது.
ராஜ்யசபாவில் பலம் குறைந்தால், நாடாளுமன்றத்தில் காங்கிரஸின் குரல் இன்னும் ஒடுங்கிவிடும். இது 'காங்கிரஸ் முக்த் பாரத்' (Congress-mukt Bharat) என்ற பாஜக-வின் நோக்கத்திற்கு ரத்தினக் கம்பளம் விரிப்பது போல் அமைந்துவிடும் என்கிறார்கள் சீனியர் பத்திரிகையாளர்கள்.
ராகுலுக்கு செக்
இந்த விவகாரத்தில் மிக முக்கியமான நபர், ராகுல் காந்திதான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாநிலங்கள்தான் ராகுலுக்குப் பலம் சேர்த்தன. இப்போது தமிழகத்தில் திமுக கூட்டணியை ராகுல் இழந்தால், அது அவரது பிம்பத்தை அப்படியே சிதைத்துவிடும். "மம்தா ஏற்கெனவே கைகழுவிவிட்டார், அரவிந்த் கெஜ்ரிவால் விலகி நிற்கிறார்; இப்போது ஸ்டாலினும் போனால் ராகுலை யார்தான் நம்புவார்கள்?" என்பதுதான் டெல்லி அரசியல் வட்டாரத்தின் தற்போதைய மர்மக் கேள்வி.
சவுத் பெல்ட்' சரியுது... ராகுலுக்குப் பின்னடைவு!
காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படும் தென் மாநிலங்களில், தமிழகம் மிக முக்கியமான களம். ஒருவேளை விஜய்யின் த.வெ.க-வுடன் கைகோர்த்து அந்தப் பரிசோதனை தோல்வியடைந்தால், ராகுல் காந்தியின் 'சவுத் ஸ்ட்ரேட்டஜி' (South Strategy) மொத்தமாகப் படுத்துவிடும். இது தேசிய அளவில் பாஜக-வுக்கு எதிரான போராட்டத்தை வலுவிழக்கச் செய்யும். "ராகுல் காந்தியால் தன் கூட்டணிக் கட்சிகளையே தக்கவைக்க முடியவில்லை" என்ற விமர்சனம் எழுந்தால், அது 2029 பொதுத்தேர்தலில் அவர் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவதையே கேள்விக்குறியாக்கும்.
பாஜகவின் காங்கிரஸ் இல்லாத இந்தியாவிற்கு வலுசேர்க்கும். எனவே உயிரைக் கொடுத்து கூட்டணியைக் காப்பாற்றப்போகிறார்களா அல்லது ஒரு புதுப் பரிசோதனையில் இறங்கி தன் இருப்பையே கேள்விக்குறியாக்கப் போகிறதா காங்கிரஸ்? - பதில் காலத்தின் கையில்!












Click it and Unblock the Notifications