விமானத்தின் வெளியே எட்டிப் பார்த்தால் வாவ்.. திருப்பதி டூ சென்னை வழித்தடத்தில் வானில் நடந்தது என்ன?
சென்னை: திருப்பதியில் இருந்து சென்னை வழித்தடத்தில் விமானத்தின் வெளியே எட்டிப்பார்த்தபோது மேகங்கள் திரண்டு (Squall line) ரம்மியமாக காட்சியளித்தது.
இயற்கை பல அதிசயங்கள் நிறைந்தது. ஒவ்வொரு நாளும் பூமியிலும், வானிலும் பல்வேறு அதிசய சம்பவங்கள் நிகழ்கின்றன. இவை அனைத்தும் நமது கற்பனைக்கு எட்டாதவை. ஆராய்ந்து பார்த்தால் ஒவ்வொரு நிகழ்வுகளும் மற்றொன்றை மிஞ்சும் வகையில் இருக்கும்.

சூரிய கிரகணம், சந்திர கிரகணம், இரண்டு கோள்கள் அருகருகே வருதல் உள்பட பல்வேறு நிகழ்வுகளை தொழில்நுட்ப கருவிகள் உதவியுடன் நம்மால் பார்க்க முடியும். பல நிகழ்வுகளை நம்மால் பார்க்க இயலாது.
இது ஒருபுறம் இருக்க விமானத்தில் பயணித்தபடி விமானத்தில் இருந்து பூமியை பார்ப்பது, காற்றில் மிதக்கும் விமானத்தின் ஜன்னல் வழியே வானில் நகரும் மேகங்களை பார்ப்பது மனதுக்கு தனி ஆனந்தம் தான். இதை விமானங்களில் பயணம் செய்தவர்கள் அனுபவித்து இருக்கலாம். ஏனெனில் வானத்தில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை அவர்களால் நேரில் காண முடிகிறது.
இந்நிலையில் தற்போது வானில் ஓர் மேகத் திரள்வு நிகழ்வு நடந்துள்ளது. திருப்பதியில் இருந்து சென்னை செல்லும் வழித்தடத்தில் இன்று விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தின் வெளியே squall line தோன்றி இருந்தது. இதன்மூலம் வானம் வெள்ளை, நீல நிறத்தில் ரம்மியமாக காணப்பட்டது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதனை நெட்டிசன்கள் வியந்து பார்த்து வருகின்றனர்.

Squal line என்பது வானில் தோன்றும் மேகக்கூட்டங்களின் திரள்களாகும். அதாவது பூமியில் மழை பெய்ய வேண்டும் என்றால் மேகங்கள் சூழ்ந்து இருப்பதை போன்று வானில் பட்டையாக மேகங்கள் தோன்றுவதையே Squall line என்கிறோம். இது அதிக காற்று மற்றும் புயல்களின் காரணாக வேகமாக நகர்ந்து செல்லும். இது அதிகபட்சம் நூறு கிலோமீட்டர் மைல் நீளம் வரை இருக்கலாம். ஆனால் பொதுவாக 10 அல்லது 20 மைல்கள் மட்டுமே இருக்கும். இதில் விமானங்கள் நுழைந்தால் எளிதில் வெளியே வர முடியாத நிலை ஏற்படலாம்.












Click it and Unblock the Notifications