சவுதியில் மரண தண்டனை.. ஈழத்தமிழரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ஜெய்சங்கருக்கு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரான அனோஜன் சிவராசாவைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக இளைஞரணி மாநிலத் தலைவர் எஸ்.ஜி. சூர்யா கோரிக்கை விடுத்துள்ளார்.

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது பேஸ்புக்கில் பதிவிட்ட குற்றத்திற்காக இலங்கை தமிழர் அனோஜன் என்பவருக்கு சவுதி அரேபியா கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், அனோஜன் சிவராசாவை காப்பாற்ற மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக பாஜக இளைஞரணி தலைவர் எஸ்.ஜி. சூர்யா கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

Jaishankar

ஈழத்தமிழர் அனோஜன்

இலங்கையைச் சேர்ந்த 24 வயதான ஈழத்தமிழர் அனோஜன் சிவராசா. பொறியாளரான இவர் சவுதி அரேபியாவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு சமீபத்தில் அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு வருகிற 17 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, அவரைக் காப்பாற்ற இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த ஜூன் மாதம், கதிர்காமம் முருகன் கோவிலுக்குச் இந்து பக்தர்கள் சென்ற நிலையில் அவர்களுடன் வந்த தெருநாய் ஒன்று உதைக்கப்பட்டது தொடர்பாக இணையத்தில் விவாதம் ஏற்பட்டது. அப்போது, சிவபெருமானை அவமதிக்கும் வகையில் சிலர் கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அனோஜன், தமிழில் ஆட்சேபனைக்குரிய கருத்தைப் பதிவிட்டுள்ளார். எனினும், தனது தவறை உணர்ந்து, 5 நிமிடங்களுக்குள் அந்தப் பதிவை நீக்கியதுடன், பொதுவெளியில் காணொளி வெளியிட்டு மன்னிப்பும் கோரியுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்பட்டது

இருப்பினும், அந்தப் பதிவின் ஸ்கிரீன்ஷாட்கள் அரபு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, சவுதி அரேபியாவில் உள்ள அவரது நிறுவனத்துக்கும் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்ட அனோஜனுக்கு முதலில் 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30 லட்சம் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர், அரசுத் தரப்பு மேல்முறையீட்டைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி அவரது தண்டனை, மரண தண்டனையாக உயர்த்தப்பட்டது.

மேலும், சிறையில் அவர் தாக்கப்பட்டதாகவும், கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதியில் இருந்து குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேச முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த காலங்களில் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்பதற்கு பிரதமர் மோடி தூதரக ரீதியில் தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளார். அதேபோல், அனோஜன் இலங்கை நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியாவுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான நல்லுறவைப் பயன்படுத்தி அவரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

24 வயதே ஆன அனோஜன், தனது கருத்தை சில நிமிடங்களிலேயே நீக்கி மன்னிப்பும் கோரியுள்ளார். இத்தகைய சூழலில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது அளவுக்கு அதிகமான தண்டனையாகும். எனவே, சவுதி அரேபிய அதிகாரிகளுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தி, மரண தண்டனையை நிறுத்தி வைக்கவும், அவரை விடுவிக்கவும் இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மரண தண்டனையை ரத்து செய்வதற்காக முயற்சி மேற்கொண்டு வரும் இலங்கைத் தூதுக்குழுவுக்கும் இந்தியா ஆதரவு அளிக்க வேண்டும்" என்று கோரியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+