ஸ்ரீகாந்தி ரங்கசாமி கிட்ட அதை சொன்னதுமே, விபூதி பூசி அனுப்பிய புதுவை முதல்வர்? அப்போ அன்புமணி, பாமக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியலில் ஏதாவதொரு ட்விஸ்ட் அடுத்தடுத்து முளைத்து கொண்டேயிருக்கும்.. ஒருபக்கம் புதுக்கட்சிகளின் வருகை, இன்னொரு பக்கம் கூட்டணிக் கணக்குகள் என களம் அனலடித்து வருகிறது.. இந்த நேரத்தில், பக்கத்து மாநிலமான புதுச்சேரியிலிருந்தும் ஒரு புயல் வீச தொடங்கியிருக்கிறது. புதுச்சேரி முதலமைச்சர் என்.ஆர். ரங்கசாமி, தமிழக அரசியலிலும் அதிகாரப்பூர்வமாகக் காலடி வைக்கத் திட்டமிட்டு வருகிறாராம்.. இந்த நகர்வு, தைலாபுரம் தோட்டத்தில் பகீரை கிளப்பிவிட்டுள்ளதாக தெரிகிறது.. இதுகுறித்த பிரத்யேக தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் தனது கட்சியை முறைப்படி தொடங்கும் திட்டத்தில் சீரியஸாக இறங்கி உள்ளார் புதுவை முதல்வர் என்.ஆர்.ரெங்கசாமி. அவரது பிறந்த நாளான ஆகஸ்ட் 9-ந்தேதி சென்னையில் இதற்கு அடிகோலிடப்படுகிறது.

Srikanthi N Rangasamy PMK Puducherry Politics

புதுச்சேரி ரங்கசாமி

சமீபத்தில் ரங்கசாமியை சந்தித்து என்.ஆர்.காங்கிரசில் இணைந்து கொண்டார் பாமக முன்னாள் எம்.எல்.ஏ. சேலம் அருள். அவரது இணைப்பை வெளிப்படுத்தும் வகையில், என்.ஆர்.காங்கிரசின் தமிழக தலைவராக அருளை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த செய்தி பரவியதுமே, தைலாபுரம் தோட்டமே அதிர்ந்துள்ளது. காரணம், அருளுக்கு எந்த ஒரு அரசியல் முன்னேற்றமும் எதிலும் நடந்து விடக்கூடாது என்பது அன்புமணியின் அஜெண்டாவாக உள்ளதாம்.

தவெகவில் இணைவதாக இருந்த அருளை, விஜய்யின் ஆலோசகர்கள் மூலமாக தடுத்து விட்டதில் அன்புமணி தரப்பு அதிருப்தியில் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது.. அதேபோல, திமுக, அதிமுகவும் அருள் முன்வைத்த கோரிக்கையால் அவரை உதறிவிட்டுவிட்டன.

பாமக அருள் - என்ஆர் காங்கிரஸ்

இப்படிப்பட்ட சூழலில்தான், ரங்கசாமியை சந்தித்தார் அருள். இதனை தைலாபுரம் தோட்டம் ரசிக்கவில்லை என தெரிகிறது.. குறிப்பாக அன்புமணி ரசிக்கவில்லை. உடனே அப்பா ராமதாஸிடம் இதைப்பற்றி பேசியிருக்கிறார். அருளுக்கு எதிராக அன்புமணி சில விஷயங்களை சொல்ல, அதனை ராமதாஸ் ஏற்கவில்லையாம்.

இந்த நிலையில்தான், ரெங்கசாமியை சந்தித்தார் ராமதாசின் மகளும் அன்புமணியின் மூத்த சகோதரியுமான காந்தி. அந்த சந்திப்பில், ''உங்கள் கட்சியில் அருளை சேர்த்துக் கொள்ள வேண்டாம் அய்யா (ரெங்கசாமியையும் அய்யா என்று தான் அழைப்பார் காந்தி). அப்படியே சேர்த்துகொள்வதாக இருந்தால் மாநில அளவிலான முக்கிய பொறுப்பு எதுவும் தர வேண்டாம். நான் உங்களுடன் இணைந்து தமிழகத்தில் அரசியல் பணிகளை முன்னெடுக்கிறேன். அதற்கான வாய்ப்பினை எனக்கு வழங்க வேண்டும் '' என்று வலியுறுத்தினாராம் காந்தி.

அன்புமணி ராமதாஸ்

அவரின் இந்த வலியுறுத்தல்கள் ரெங்கசாமிக்கு சில சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக, என்.ஆர்.காங்கிரஸார் கூறுகிறார்கள்.. இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர்கள், ''தமிழகத்தில் என்.ஆர்.காங்கிரஸ் உருவானால், அது பாமகவுக்கு செக் வைக்கும் சூழல் உருவாகலாம். தமிழகத்தில் வன்னியர் சமூகத்தின் ஆகப்பெரிய தலைவராக இருக்கும் டாக்டர் ராமதாஸ், அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். அந்த இடத்தை பிடிக்க அன்புமணியில் அரசியல் இனி வேகமெடுக்கும்.

இந்த சூழலில், வன்னியர் சமூகத்தை சேர்ந்த முதல்வர் ரங்கசாமி, தனது கட்சியை தமிழகத்தில் விரிவுப்படுத்தினால் அது பாமகவின் ஓட்டு வங்கியில் சேதாரத்தை உருவாக்கலாம் என திட்டமிட்டுத்தான், தன்னை சந்திக்க காந்தியை ராமதாஸ் அனுப்பி வைத்திருப்பாரோ? என்கிற சந்தேகம் ரெங்கசாமிக்கு இருக்கிறது.

ஸ்ரீகாந்தி புதுவை முதல்வரிடம் சொன்னதென்ன

அதனால்தான் தன்னை சந்தித்து கட்சியில் இணைவதற்கு வாய்ப்புக் கொடுங்கள் என கேட்ட காந்தியிடம் எந்த உத்தரவாதத்தையும் தராமல், "ஆகட்டும் பார்க்கலாம்'" என பெருந்தலைவர் காமராஜர் பாணியில் சொல்லி நெத்தியில் திருநீறுப் பூசி அனுப்பி வைத்துவிட்டார் ரெங்கசாமி'' என்கிறார்கள்.

ஆகஸ்ட் 9ம் தேதி சென்னையில் என்ன நடக்கப்போகிறது என தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+